டெல்லி: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பத்திரிக்கையாளர் சந்திப்பில், பல்வேறு அறிவுப்புகளை வெளியிட்டுள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
நேற்று உற்பத்தி துறையை மேம்படுத்தும் நோக்கில் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு வந்துள்ளது.
இதன் மூலம் சுயசார்பு இந்தியாவை உறுதிபடுத்த முடியும். எல்லாவற்றிற்கும் மேலாக நாட்டின் உற்பத்தி விகிதம் அதிகரிக்கும். தொழில்துறையும் மேம்படும். இதன் மூலம் ஏற்றுமதியினையும் அதிகரிக்க முடியும். ஆக நாம் இறக்குமதியினை மட்டும் நம்பாமல், மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதியினை இதன் மூலம் அதிகரிக்க முடியும். ஆக மொத்தத்தில் இந்தியா யாரையும் நம்பாமல் தனித்து செய்பட முடியும். இது இந்தியாவினை சுயசார்பு இந்தியாவாக மாற்ற வழிவகுக்கும். இது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்றும் கூறப்பட்டது.
அந்த வகையில் இன்று துறை வாரியாக எந்த துறைக்கு எவ்வளவு செலவிடப்படும் என்றும் நிதியமைச்சர் அறிவித்துள்ளார். குறிப்பாக Advance cell chemistry batteryக்கு 18,100 கோடி ரூபாய் செலவிடப்படலாம் என்றும், இதே எலக்ட்ரானிக் / டெக்னாலஜி பொருட்கள் துறைக்கு 5,000 கோடி ரூபாயும், இதே ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோ உதிரிபாகங்கள் துறைக்கு 57,042 கோடி ரூபாய் செலவிடப்படலாம் என்று மதிப்பிடப்படுள்ளது.

இதே மருந்து துறைக்கு 15,000 கோடி ரூபாயும், தொலைத் தொடர்பு மற்றும் நெட்வொர்கிங் துறைக்கு 12,195 கோடி ரூபாய், டெக்ஸ்டைல்ஸ் துரைக்கு 10,683 கோடி ரூபாயும், உணவு பொருட்கள் துறைக்கு 10,900 கோடி ரூபாயும், சோலார் வாகனங்களுக்கு 4,500 கோடி ரூபாயும், ஒயிட் கூட்ஸ் 6,238 கோடி ரூபாயும், ஸ்டீல் துறைக்கு 6,322 கோடி ரூபாயும் செலவிடப்படலாம் என்றும் பட்டியலிடப்பட்டுள்ளது.
ஆக மேற்கண்ட முக்கிய துறைகளுக்கு மொத்தம் 1,45,980 கோடி ரூபாய் ஊக்க நிதியினை செலவிடப்பட உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
உண்மையில் நெருக்கடியில் உள்ள மேற்கண்ட துறை சார்ந்த நிறுவனங்களுக்கு உதவும் வகையில், அரசு இந்த திட்டத்தினை அறிவித்துள்ளது. இது இனி வரும் காலாண்டுகளில் இத்துறைகளின் வளர்ச்சிக்கு உறுதுணை புரியலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications