ஆன்ட்ரிக்ஸ் - தேவாஸ் ஒப்பந்த ஊழல்.. காங்கிரஸ்-ஐ சாடிய நிதியமைச்சர்..!
நாட்டில் ஓமிக்ரான் மற்றும் கொரோனா என மக்களை பாடாய்படுத்தி வரும் சமயத்தில், அரசு பல்வேறு விதமான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதற்கிடையில் இன்று மாலை 4.30 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பத்திரிக்கையாளர்களை சந்திக்கவிருக்கிறார்.
பல மா நிலங்களில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு என இருந்து வரும் நிலையில், பொருளாதாரம் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் மத்திய பட்ஜெட் தாக்கல் நெருங்கி வரும் நிலையில் அது குறித்தான முக்கிய அறிவிப்புதுகள் ஏதும் வரலாமோ என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகின்றது.
Jan 18, 2022, 4:52 pm IST
ஆன்ட்ரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்த ஊழல் வழக்கை முந்தைய காங். அரசு மூடப் பார்த்தது- நிர்மலா சீதாராமன்
Jan 18, 2022, 4:51 pm IST
ஆன்ட்ரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்த ஊழலில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் காங். அரசின் அதிகார துஷ்பிரயோகம் அம்பலம்
Jan 18, 2022, 4:50 pm IST
இஸ்ரோவின் வர்த்தக நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்டது ஆன்ட்ரிக்ஸ் நிறுவனம்; தேவாஸ் என்ற நிறுவனத்துக்கு ஜிசாட் 6, ஜிசாட் 6 ஏ செயற்கைக்கோள்களை இஸ்ரோ தயாரித்து கொடுத்ததில் ரூ2.32 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு என கூறப்பட்டது; ஆன்ட்ரிக்ஸ்- தேவாஸ் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது; தேவாஸ் நிறுவனம் சர்வதேச டிரிபியூனலில் முறையிட்டது; இஸ்ரோவின் ஆன்ட்ரிக்ஸ் நிறுவனத்துக்கு ரூ 4,432 கோடி அபராதம் விதித்தது டிரிபியூனல்; தேவாஸ் நிறுவனத்துக்கும் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. இது தொடர்பான வழக்கில் தேவாஸ் நிறுவனத்துக்கு எதிராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
Jan 18, 2022, 4:45 pm IST
முந்தைய காங். கூட்டணி ஆட்சிக் கால ஆன்ட்ரிக்ஸ்- தேவாஸ் ஒப்பந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்
Jan 18, 2022, 4:40 pm IST
மத்திய பட்ஜெட் தாக்கலை முன்னிட்டு நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுடன் சந்திப்பு
Jan 18, 2022, 4:39 pm IST
டெல்லியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்று வருகிறது
Share This Article
English summary
Nirmala Sitharaman Press Conference Today LIVE Updates
Nirmala Sitharaman Press Conference Today [நிர்மலா சீதாராமன் செய்தியாளர்கள் சந்திப்பு ] LIVE News Updates in Tamil: Check the Live news coverage on Finance Minister Nirmala Sitharaman Press Conference Today to Address on Important Economic Issues.
Story first published: Tuesday, January 18, 2022, 17:25 [IST]