135 வருட பழைய சட்டத்தை மாற்றிய நிர்மலா சீதாராமன்.. வங்கித்துறையில் முக்கிய மாற்றம்..!

இந்திய சட்ட அமைப்பில் 135 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் பேங்கர்ஸ் புக்ஸ் எவிடென்ஸ் 1891 என்ற பிரிட்டிஷ் காலத்தில் உருவாக்கப்பட்ட சட்டம் இன்று வரையில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் உள்ளது. இந்த சட்டத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால் நீதிமன்ற வழக்குகளில் வங்கிகளால் ஒப்புதல் அளிக்கப்பட்ட ஆவணங்களை மட்டுமே ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படும்.

இந்த சட்டம் வங்கி ஆவணங்கள் அனைத்தையும் பேப்பராக நிர்வாகம் செய்யப்பட்ட காலத்தில் கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்போது வங்கி சேவைகள் பெருமளவில் டிஜிட்டலாக மாறியிருக்கும் வேளையில் நீதிமன்ற வழக்குகளில் டிஜிட்டல் ஆதாரங்களை ஏற்கமுடியாத சூழ்நிலை நிலவுகிறது.

135 வருட பழைய சட்டத்தை மாற்றிய நிர்மலா சீதாராமன்.. வங்கித்துறையில் முக்கிய மாற்றம்..!

இதை சரி செய்யும் வகையில் நேற்று நாடாளுமன்றத்தின் மதிய கூட்டம் துவங்கியதும் மத்திய நிதியமைச்சர் பேங்கர்ஸ் புக்ஸ் எவிடென்ஸ் 2026 மசோதா தாக்குதல் செய்யப்பட்டது, கடும் அமளிக்கு மத்தியில் விவாதம் செய்யப்படாமல் உறுப்பினர்களின் வாக்குகள் மூலம் இந்த மசோதா ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த புதிய மசோதாவில் இன்றைய டிஜிட்டல் வங்கி சேவைகளுக்கு ஏற்ப லீகல் கட்டமைப்பில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளது. இதன் மூலம் டிஜிட்டல் ஆதாரங்களை நீதிமன்றங்கள் முக்கிய ஆதாரமாக ஏற்றுக்கொள்ள அனுமதி வழங்குகிறது.

Also Read

இந்த மசோதா மூலம் பேப்பர், எலக்ட்ரானிக்ஸ், டிஜிட்டல், விர்ச்சுவல், கிளவுட் அடிப்படையிலான அனைத்து தொழில்நுட்ப ரீதியிலான ஆவணங்களை ஆதாரமாக ஏற்கும் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த மசோதாவில் கொடுக்கப்படும் ஆவணங்களை எப்படி உறுதி செய்யப்பட வேண்டும் என்பதற்கான விவரங்களும் கொடுக்கப்பட்டு உள்ளது.

பேங்கர்ஸ் புக்ஸ் எவிடென்ஸ் சட்டத்தில் எவ்விதமான பெரிய மாற்றங்கள் செய்யப்படவில்லை, மாறாக டிஜிட்டல் ஆவணங்களை ஏற்றுக்கொள்ளும் வகையில் சட்ட விதிகள் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டு உள்ளது என சிரில் அமர்சந்த் மங்கள்தாஸ் நிறுவனத்தின் பார்ட்னராக இருக்கும் அமே பதாக் தெரிவித்துள்ளார்.

Recommended For You

இந்த சட்டம் மூலம் மக்களின் தினசரி வங்கி சேவையில் மாற்றத்தையும், மேம்பாட்டை கொண்டு வரவில்லை என்றாலும், வங்கி தொடர்பான, நிதியியல் தொடர்பான சட்டம், கிரிமினல், சிவில் வழக்குகள் தொடரும் போது மக்கள் எளிதாக டிஜிட்டல் ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும். உதாரணமாக கூகுள் பே-வில் நீங்கள் மோசடி மூலம் பணத்தை இழந்தால் இதன் டிஜிட்டல் முறையில் ஸ்டேட்மென்ட் எடுத்து உங்களுடைய டிஜிட்டல் கையெழுத்து செய்து எளிதாக சமர்ப்பிக்க முடியும். ஆனால் முன்பு வங்கிகளிடம் பண பரிமாற்றம் தொடர்பான ஆவணங்களை முறையாக பெற்ற பின்பே சமர்ப்பிக்கும் வகையில் சட்டம் வழிவகுத்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+