எங்களுக்கு இந்தியா தான் வேண்டும்.. சீனா வேண்டாம்..அடம் பிடிக்கும் 12 நிறுவனங்கள்..!

மும்பை: ஒரு புறம் இந்திய பொருளாதாரமானது தொடர்ந்து சரிவை சந்தித்து கொண்டிருக்கும் நிலையில், மறுபுறம் அதனை சீரமைக்க மத்திய அரசு தொடர்ந்து தக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உற்பத்தி துறையை ஊக்குவிக்கும் விதமாக, கர்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரி விகிதத்தை குறைத்தார்.

ஒரு புறம் இதனால் அரசுக்கு வர வேண்டிய வருவாய் குறைந்தாலும், மறுபுறம் புதிய நிறுவனங்களை ஊக்குவிக்கவும், மறுபுறம் அன்னிய முதலீடுகளை அதிகரிக்கவும் இது உதவியது என்று கூறலாம்.

இந்தியாவில் நிறுவ ஆர்வம்

இந்தியாவில் நிறுவ ஆர்வம்

இந்த ஊக்குவிப்பு திட்டத்தின் காரணமாக 12 சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது நிறுவனங்களை நிறுவ ஆர்வம் காட்டி வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த நிறுவனங்களுக்கு சீனாவிலிருந்து இந்தியாவுக்கு மாற்ற முனைக்கும் நிறுவனங்களுக்கு, தேவையான உதவிகளையும் செய்ய உள்ளதாகவும், இது குறித்து ஏற்கனவே அந்த நிறுவனங்களிடம் பேசியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படும்

எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படும்

மேலும் இந்தியாவில் தங்களது நிறுவனத்தை நிறுவ ஆர்வம் காட்டும் 12 நிறுவனங்களிடமும், கலந்து ஆலோசிக்க தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இவ்வாறு இந்தியாவில் தங்களது நிறுவனங்களை அமைக்க ஆர்வம் காட்டும் நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள், அவற்றின் மனநிலை உள்ளிட்டவை குறித்து சிறப்பு ஆய்வு செய்துள்ளது. இந்த நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சிறப்பு சலுகைகள் அளிக்கபடும்

சிறப்பு சலுகைகள் அளிக்கபடும்

நாட்டின் பொரூளாதார வளர்ச்சி விகிதத்தை உயர்த்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடுமையான சரிவை சந்தித்துள்ள நாட்டின் பொருளாதாரதுக்கு புத்துயிரூட்ட பெரு நிறுவனங்களுக்கான வரியை கடந்த சில மாதங்களுக்கு முன்பே வரியை மத்திய அரசு குறைத்தது. இது தவிர இன்னும் தேவையான சலுகைகளையும் செய்து தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு ஊக்குவிப்பு

உள்நாட்டு ஊக்குவிப்பு

இதன் மூலம் ஒரு புறம் முதலீடும் அதிகரிக்கும். வேலை வாய்ப்புகளும் பெருகும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனினும் மற்ற வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அளிக்கும் சலுகையை இன்னும் உள்நாட்டு நிறுவனங்களுக்கும் அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியையும் பெருக்க முடியும். மறுபுறம் வேலை வாய்ப்பும் பெரும் என்றும் நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+