இதுவும் அசத்தல் தான்.. அடுத்த மூன்று மாதங்களுக்கு அரசே உங்களுக்கான பிஎஃப் பணத்தை செலுத்தும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: கொரோனா தாக்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் மக்கள் இன்னும் பெரும்பான்மையோர் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் நிலையே நீடித்து வருகிறது.

மக்கள் பெரும் பொருளாதார இழப்புகளைச் சந்தித்து வரும் நிலையில், அவர்களுக்கென சில அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது.

இது சமானியர்களுக்கு உதவும் வகையில், EPF எனப்படும் ஊழியர்களுக்கான வைப்பு நிதித் தொகையை அரசே செலுத்தும் என்றும் கூறியுள்ளார்.

பிஎஃப் தொகை

பிஎஃப் தொகை


கடந்த முறை பொருளாதார ஊக்குவிப்பு சலுகையை அறிவித்த நிர்மலா சீதாராமன், EPF எனப்படும் ஊழியர்களுக்கான வைப்பு நிதித் தொகையை ஊழியர் சார்பாகவும் நிறுவனத்தின் சார்பாகவும் அரசே செலுத்துவிடுவதாக அறிவித்தார். மேலும் அப்போது ஊழியர் நிறுவனம் என இரு தரப்பின் சார்பிலும் தலா 12 சதவிகிதத்தை அரசே செலுத்திவிடும் என்றும் அப்போது அறிவித்தார். .

 

அரசே செலுத்திவிடும்

அரசே செலுத்திவிடும்

இந்த நிலையில் தற்போது 20 லட்சம் கோடிக்கான சலுகையை அறிவித்து வரும் நிலையில், ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மேலும் மூன்று மாதங்களுக்கும் பிஎஃப் தொகையை மத்திய அரசே செலுத்தும். இந்த பிஎஃப் தொகையை அரசே செலுத்துவதால் நிறுவனம், ஊழியர்களுக்கு 6,500 கோடி ரூபாய் மிச்சமாகும்.

ஊழியர்களுக்கு பயன் தான்

ஊழியர்களுக்கு பயன் தான்

ஏற்கனவே மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான பிஎஃப் தொகையை மத்திய அரசே செலுத்தியது. இந்த நிலையில் அடுத்த மூன்று மாதங்களுக்காக தொகையை அரசே செலுத்தி விடும் என்றும் கூறியுள்ளார்.
இதன் அடிப்படையிலேயே ஊழியர்களின் சார்பாகவும் நிறுவனத்தின் சார்பாகவும் அரசே அடுத்த மூன்று மாதங்களுக்கான தொழிலாளர் வைப்பு நிதி பணத்தை செலுத்திவிடும், இது ஊழியர்களுக்கும் நிறுவனங்களுக்கு ம் பயனுள்ளதாக அமையும்.

அறிவிப்பு

அறிவிப்பு

கொரோனா பாதிப்பில் நாடு சிக்கி சின்னாபின்னமாகி வரும் நிலையில், அதனை மீட்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது என்று கூறியிருந்த நிலையில் தற்போது அது குறித்து நிதியமைச்சர் பவ்வேறு திட்டங்களையும் சலுகைகளையும் அறிவித்து வருகிறார்.

ஆனால் ஒரு கண்டிசன்

ஆனால் ஒரு கண்டிசன்

இந்த சலுகை அதிகபட்சமாக 100 ஊழியர்கள் வரை பணியாற்றும் நிறுவனங்களுக்கு பொருந்தும். அதிலும் ஒரு நிபந்தனை உண்டு. அப்படி பணியாற்றும் ஊழியர்களில் 90 சதவீத ஊழியர்களின் மாத ஊதியம் ரூ .15,000 க்கும் குறைவாக இருப்பது அவசியம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Nirmala Sitharaman said government to pay employee, employer contribution to EPF accounts

Finance minister Nirmala Sitharaman said government to pay employee, employer contribution to EPF accounts
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X