விலை உயர்வால்.. நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை.. நிர்மலா சீதாராமன்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த புதன்கிழமையன்று மக்களவையின் குளிர்கால அமர்வின் போது, வெங்காயம் விலை பிரச்சனை தன்னை அதிகம் பாதிக்கவில்லை. ஏனெனில் நான் வெங்காயம் அதிகம் சாப்பிடுவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து நிர்மலா சீதாராமன் மக்களவையில் கூறுகையில், அவரும் அவரது குடும்பத்தினரும் இந்த கடுமையான விலையேற்றம் உள்ள காய்கறி பொருட்களை முக்கியமாக உணவில் பயன்படுத்தவில்லை.

மேலும் நாங்கள் வெங்காயம் மற்றும் பூண்டு அதிகம் சாப்பிடுவதில்லை. இதனால் இந்த விலையேற்றம் என்னை அதிகம் பாதிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

வெங்காயம் உற்பத்தி குறைந்துவிட்டது?

வெங்காயம் உற்பத்தி குறைந்துவிட்டது?

மக்களவை எம்.பி சுப்ரியா சூலே மோசமான கடன்களை அதிகரிப்பது மற்றும் வெங்காய விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து நிதி அமைச்சரிடம் கேட்டுள்ளார். மேலும் ஏன் வெங்காயம் உற்பத்தி குறைந்து விட்டது? நாம் அரிசி மற்றும் பால் பொருட்களை ஏற்றுமதி செய்கிறோம். ஆனால் வெங்காயம் இறக்குமதி செய்கிறோம். ஏனெனில் வெங்காயம் உற்பத்தி செய்பவர்கள் சிறிய அளவில் உள்ளனர். அவர்கள் பாதுக்காக்கப்பட வேண்டும் என்றும் சூலே கேட்டுக் கொண்டுள்ளார்.

நிர்மலா சீதாராமன் என்ன பேசினார்?

நிர்மலா சீதாராமன் என்ன பேசினார்?

வெங்காயம் பயன்பாடு குறித்தான தனது தனிப்பட்ட பழக்கவழக்கங்களைப் பற்றி பேசியவர், வெங்காயம் விலையை கட்டுக்குள் வைத்திருக்க அரசாங்கம் என்னென்ன நடவடிக்கையை எடுத்து வருகிறது. அதை சேமிக்க சிறந்த தொழில் நுட்பத்தை மேம்படுத்துவது உட்பட பலவற்றை பற்றியும் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 2014 முதல் வெங்காய சந்தைகளில் விலை ஏற்ற தாழ்வுகளைப் பற்றி கண்காணிக்கும், சில அமைச்சர் குழுவில் நானும் இருந்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.

சிறந்த சேமிப்பு திறன்கள்
 

சிறந்த சேமிப்பு திறன்கள்

தேவைக்கு அதிகமாக இருக்கும் போது, நாங்கள் மக்களுக்கு ஆதரவளிப்பதன் மூலம் தேவையான வசதிகளை செய்தோம். எனினும் தற்போது குறைந்த உற்பத்தியால் பற்றாக்குறை நிலவி வருகிறது. வெங்காயம் தொடர்பான கடுமையான கட்டமைப்புகள் இருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். ஒன்று அறிவியல் ரீதியாக மேம்பட்ட சேமிப்பு வசதிகள் நம்மிடம் இல்லை. வெங்காயத்திற்கு அதிக அறிவியல் ரீதியான சேமிப்பு வசதி வேண்டும். நாங்கள் அதற்காக வேலை செய்ய தொடங்கினோம். இதனால் சிறப்பான சேமிப்பு திறன்களைத் லாசல்கானைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைத்தோம் என்றும் கூறியுள்ளார்.

 வெங்காயத்தின் விலை அதிகரிப்பு

வெங்காயத்தின் விலை அதிகரிப்பு

உற்பத்தி குறைவாக இருப்பதால் பல இடங்களில் வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றுக்கு 100 ரூபாயை தாண்டியுள்ளது. இந்த நிலையில் மேற்கு வங்க அரசு 800 டன் வெங்காயத்தை நாஃபெட் உடன், டிசம்பர் இறுதிக்குள் வழங்க உத்தரவிட்டுள்ளது. இதே ஒடிசாவில் வெங்காயத்தின் விலை கிலோ 120 ரூபாயாக உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Nirmala sitharaman said i don’t eat onion because of skyrocketing onion prices

Nirmala sitharaman said i don’t eat onion because of skyrocketing onion prices. and she said onion price issue did not affect her family, Because they won't use costly vegetables. also she said I don't eat a lot of onions and garlic.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X