டெல்லி: கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான டிசம்பர் காலாண்டு ஜிடிபி விகிதத்தினை ஒப்பிட்டு, இது இந்திய பொருளாதாரத்தின் நிலைத்தன்மை காட்டுகிறது. ஒரு நல்ல அறிகுறி என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சிஎன்பிசி டிவி 18-இன் வணிக தலைமை விருது வழங்கும் விழாவில் பேசிய நிர்மலா சீதாராமன், இந்த விகிதத்தில் அதிக எண்ணிக்கையை எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் இது தற்போதுள்ள நிலையில் இது ஒரு நல்ல விகிதம் தான் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் விரும்புகிறார்கள். குறிப்பாக சவுதி அரேபியா நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
விழாவில் பேச்சு
வணிகம் மற்றூம் தொழில்துறையில் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க விருதான சிஎன்பிசி-டிவி18 தொலைக்காட்டியின் இந்திய தொழில் தலைவர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்வில் முகேஷ் அம்பானி உள்ளிட்ட பல முக்கிய தொழில் துறை தலைவர்கள் கலந்து கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆக இந்த விழாவில் கலந்து கொண்ட நிர்மலா சீதாராமன் பேசியது பற்றித் தன் இக்கட்டுரையில் பார்க்க போகிறோம்,
சவால் தான்
சீனாவின் கொரோனா வைரஸால் தொழில் துறையினர் யாரும் பயப்பட தேவையில்லை. ஏனெனில் அரசு மாற்று ஏற்பாடுகளை தயார் செய்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பொருளாதாரத்தில் கொரோனாவின் தாக்கம் குறித்து உடனடியாக பீதியடைய வேண்டிய அவசியம் இல்லை. எனினும் இப்பிரச்சனை இன்னும் இரண்டு மூன்று வாரங்களுக்கு நீடித்தால் அது கொஞ்சம் சவாலாக இருக்கலாம் என்பதையும் ஒப்புக் கொண்டுள்ளார் நிதியமைச்சர்.
இறக்குமதியை நம்பியுள்ள தொழில்துறை
மேலும் சில முக்கிய துறைகளில் மூலப் பொருட்களுக்காக சீனாவினை நம்பியிருக்கும் தொழில் துறையினருக்கு விமான போக்குவரத்தினை பரிந்துரைத்துள்ளதாகவும், இதை அரசும் கருத்தில் எடுத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார், குறிப்பாக மருந்து மற்றும் எலக்ட்ரானிக் மின்னணு உள்ளிட்ட முக்கிய துறைகள் இதில் அடங்கும் என்றும் கூறியுள்ளார்.
கடன் வழங்க அழுத்தம்
மேலும் சில்லறை மற்றும் வீடு, வேளாண் பிரிவுகள் உட்பட அனைத்து வகைகளிலும் முடிந்தவரை கடன் வழங்க வங்கிகளை அழுத்தம் கொடுத்து வருவதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் 2008 -09 ஆண்டின் அனுபவங்களின் மூலம் அரசாங்கம் கற்றுக் கொள்ள விரும்புகிறது. ஏனெனில் பிற்காலத்தில் செயல்படாத சொத்துகளை குவிந்து கிடப்பதில்லை என்பதை உறுதிபடுத்தவும் கூறியுள்ளார்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications