டெல்லி: நானும் மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருந்து தான் வந்திருக்கேன், எனக்கும் அந்த கஷ்டங்கள் அனைத்தும் தெரியும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
டைம்ஸ் நவ் சேனலுக்கு பேட்டி அளித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டி வந்த பிறகு தான் அத்தியாவசிய பொருட்களுக்கு வரி விதிக்கப்படுவதாக ஒரு கருத்து நிலவுகிறது அது அப்படி இல்லை என தெளிவுபடுத்தி இருக்கிறார்.

ஜிஎஸ்டி வரி நடைமுறை செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக ஒவ்வொரு மாநிலங்களிலும் தனித்தனியாக வாட் மற்றும் கலால் வரி வசூல் அமலில் இருந்தது, ஜிஎஸ்டி வரிமுறை இந்த அனைத்து வரி விகிதங்களையும் ஒருங்கிணைத்து வரிவிதிப்பை எளிமையாக்கி நாடு முழுவதும் ஒரே வரியாக மாற்றி உள்ளது என கூறினார்.
இதனை மக்களுக்கு புரிய வைப்பது கடினம் அதை நான் எப்படி செய்யப் போகிறேன் என தெரியவில்லை ஆனால் ஜிஎஸ்டி வந்த பிறகுதான் அத்தியாவசிய பொருட்கள் மீது வரி வந்தது என்ற கருத்தை மாற்றிக் கொள்ளுங்கள் ,அப்படி கிடையாது. இதற்கு முன்பு இருந்த வரி நடைமுறைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே வரியாக தான் நாங்கள் மாற்றி இருக்கிறோம் என்றார்.
சில மாநிலங்களில் குறைந்த விலைக்கு கார் வாங்க முடிந்தது மற்ற மாநிலங்களில் அதே கார் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. அனைத்து பகுதிகளிலும் ஒரே விலை நடைமுறையை ஒரே வரி நடைமுறையை கொண்டு வர வேண்டுமென மிக கவனமாக ஜிஎஸ்டி கவுன்சில் ஆய்வு செய்து வரி நடைமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி வருவதற்கு முன்பு அனைத்தும் இலவசமாக இருந்தது இப்போது வரி விதிக்கப்படுகிறது என தவறான கருத்து நிலவுகிறது, ஜிஎஸ்டிக்குப் பிறகு அனைத்தின் மீதான வரி விகிதமும் குறைந்துவிட்டது என்பதை நான் உறுதியாக கூற முடியும் என்றார்.
நாம் அன்றாட உபயோகப்படுத்தும் பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது என்பதை நான் பலமுறை தரவுகளை ஆதாரமாகக் கொண்டு வெளியிட்டு இருக்கிறேன் என கூறியுள்ளார். பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில் மிடில் கிளாஸ் மக்களுக்கு சாதகமாக வருமான வரி உச்ச வரம்பு அதிகரிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டதற்கு அவர் பதிலளித்துள்ளார்.
நானும் மிடில் கிளாஸ் குடும்பத்திலிருந்து தான் வந்திருக்கிறேன், ஒரு மிடில் கிளாஸ் குடும்பம் என்னென்ன கஷ்டங்களை எதிர்கொள்கிறது என்பது குறித்து எனக்குத் தெரியும் என கூறியுள்ள நிர்மலா சீதாராமன் நான் நிறைய செய்ய வேண்டும் என நினைக்கிறேன் ஆனால் அதற்கென சில வரம்புகள் இருக்கின்றன எனக் கூறியுள்ளார்.
பலரும் எங்களுக்கு வரி விலக்குகள் வேண்டாம் , எளிமையான வரி தாக்கல் நடைமுறையை கொண்டு வாருங்கள், வருமான வரி உச்சவரம்பை அதற்கேற்றபடி மாற்றி அமையுங்கள் என கேட்டுக்கொண்டனர் அதன் அடிப்படையில் தான் புதிய வரி கணக்கு தாக்கல் நடைமுறை கொண்டுவரப்பட்டது. இது வரி தாக்கல் நடைமுறையை எளிமைப்படுத்தி உள்ளது என தெரிவித்துள்ளார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications