மத்திய கிழக்கு நாடுகளின் பொருளாதாரத்தை புரட்டிப்போட்டு வரும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகள் மத்தியிலான போர் தற்போது உலக நாடுகளையும் பயமுறுத்த துவங்கியுள்ளது. இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் ஜி20 தலைமை பதவி குறித்து மராகேச், மொராக்கோ-வில் பேசும் போது முக்கியமான விஷயத்தை முன்வைத்தார்.
இக்கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய கிழக்கு நாடுகளில் உருவாகியுள்ள பிரச்சனை உலக நாடுகளுக்கு மீண்டும் எரிபொருள் விலை குறித்த அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது என பேசினார். இக்கூட்டத்தில் பல நாடுகள் இதே பிரச்சனையை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் - ஹமாஸ் மத்தியிலான பிரச்சனை துவங்கிய நாளில் இருந்து கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏற்கனவே ரஷ்யா, சவுதி அரேபியா கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்தது மூலம் இதன் விலை அதிகரித்து வந்த நிலையில் இஸ்ரேல் - ஹமாஸ் போர் கூடுதலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் WTI கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 4.78 டாலர் உயர்ந்து 87.69 டாலராக உயர்ந்துள்ளது. இதேபோல் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 4.89 டாலர் உயர்ந்து 90.57 டாலராகவும் உயர்ந்துள்ளது. பல மாதங்களுக்கு பின்பு கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 90 டாலர் அளவீட்டை தொட்டு உள்ளது என்றால் மிகையில்லை.
இந்த திடீர் உயர்வுக்கு முக்கியமான காரணம் இஸ்ரேல் - ஹமாஸ் மத்தியிலான போரில் ஈரான் மற்றும் லெபனான் தலையிடும் என்ற கருத்து நிலவுவது தான். ஆனால் இதற்கு ஈரான் பாதுகாப்பு செயலாளர் காசா பகுதியில் இஸ்ரேல் நாட்டின் செயல்பாடுகள் குறித்து முடிவு புதிய அணி உருவாகும் வாய்ப்பு குறித்து பேசப்படும் என தெரிவித்தார்.

ஐஎம்எப் - உலக வங்கியின் வருடாந்திர கூட்டம் 2023 இல் கலந்து கொண்ட மத்திய நிர்மலா சீதாராமன் பேசுகையில் எரிபொருள் விலை மீதான அழுத்தம் உணவுப் பாதுகாப்பு மற்றும் பணவீக்க பாதிப்புகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளதாக தெரிவித்தார். இதேபோல் சப்ளை செயின் கடுமையாக பாதிக்கும் எனவும் பேசினார்.
இந்த நிலையிலும் வளரும் நாடுகள் தான் சர்வதேச பொருளாதார வளர்ச்சி அளவீட்டை நிலை நிறுத்தும் முக்கிய காரணியாக உள்ளது எனவும் தெரிவித்தார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 90 டாலர் அளவீட்டை தொட்டு இருக்கும் வேளையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அச்சமும் இதனுடன் தொத்திக்கொண்டு உள்ளது.


Click it and Unblock the Notifications