சென்னை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் குறித்து தான் தற்போது நாடு முழுக்க பேசி வருகிறது. பங்குச்சந்தை முதலீட்டாளர்களும், பெரும் பணக்காரர்களும் இந்த பட்ஜெட் மூலம் பல சலுகைகளை இழக்கும் காரணத்தால் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதேவேளையில் சாமானிய மக்களுக்கு எதிர்பார்த்தபடி வருமான வரியில் பெரும் லாபத்தை அளிக்காவிட்டாலும், புதிய வருமான வரியில் செய்யப்பட்ட மாற்றம் மூலம் ஒருவர் 17000 ரூபாய் சேமிக்க முடியும் என கணிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் இதை தாண்டி மத்திய பட்ஜெட்டில் வெளியான சில அறிவிப்புகள் மூலம் சாமானிய நடுத்தர மக்கள் பலன் பெற முடியும். இப்படி இந்த பட்ஜெட்டில் பெரும்பாலான மக்களைக் கவர்ந்த 7 முக்கிய விஷயங்களைத் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் தொகுத்துள்ளது. இந்த பட்ஜெட் அறிவிப்பால் அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை பலவற்றின் விலை குறைய உள்ளது.

செல்போன்கள்: தற்போது ரூ.1,34,900-க்கு விற்பனை செய்யப்படும் ஐபோன் 15 ப்ரோ (128 ஜிபி) மாடலின் விலை, அடிப்படை சுங்க வரி 20 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டதன் காரணமாக, ரூ.1,29,000 ஆக குறையும். இதேபோல் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் அனைத்து மொபைல் போன்களின் விலையும் குறையக் கூடும்.
மொபைல் சார்ஜர்கள்: செல்போன் சார்ஜர்களுக்கான அடிப்படை சுங்க வரி 20 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வேகமான சார்ஜிங் வசதியுள்ள செல்போன் சார்ஜர்கள் மலிவான விலையில் கிடைக்கும். முன்னர் ரூ.7,500-க்கு விற்பனை செய்யப்பட்ட ஐபோன் சார்ஜர் இப்போது ரூ.7,162-க்கு கிடைக்கும்.
தங்கம் மற்றும் வெள்ளி: இந்த வருடம் தீபாவளி, திருமண சீசன் மற்றும் இதர பண்டிகையை மக்கள் சிறப்பாகக் கொண்டாட பட்ஜெட்டில் வரி குறைக்கப்பட்டு உள்ளது. தங்க நாணயங்கள் மற்றும் வெள்ளி பார்களுக்கான சுங்க வரி குறைக்கப்பட்டு, அதன் ரீடைல் விலை குறைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, தங்கம் மற்றும் வெள்ளி கட்டிகளுக்கான அடிப்படை சுங்க வரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
புற்றுநோய் மருந்துகள்: மூன்று புற்றுநோய் மருந்துகளுக்கான சுங்க வரி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. இது புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் நிதி சுமையை குறைக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும். உதாரணமாக, முன்னர் ரூ.2,04,000-க்கு விற்பனை செய்யப்பட்ட நுரையீரல் புற்றுநோய் மருந்து, இப்போது ரூ.19,000 வரை குறைவாகக் கிடைக்கும்.
பிளாட்டினம்: திருமணத்திற்குப் பிளாட்டினம் மோதிரங்களை வாங்க விரும்பும் ஜோடிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் பிளாட்டினம் மீதான அடிப்படை சுங்க வரி 15.4 சதவீதத்திலிருந்து 6.4 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது ரீடைல் சந்தையில் பிளாட்டினம் நகைகளின் விலையைக் குறைத்துள்ளது.
இயற்கையான மணல்: உங்க கனவு வீட்டை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலில் கட்டுகிறீர்கள் எனில் உங்களுக்கு ஹேப்பி நியூஸ். 20 டன் கொண்ட இறக்குமதி செய்யப்பட்ட மணல் முன்பு 48000 ரூபாயாக இருந்த நிலையில் 45500 ரூபாயாக உள்ளது.
அழகு சாதன பொருட்கள்: மத்திய அரசு இறக்குமதி செய்யப்படும் அழகு சாதன பொருட்கள் மீதான சுங்க வரியை குறைத்துள்ளது. இதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டும் பிரபல பிராண்டுகளின் அழகு சாதன பொருட்களை குறைவான விலையில் வாங்க முடியும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications