டெல்லி: இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் வேகமெடுத்து வரும் நிலையில், மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு கூட கஷ்டப்படும் நிலை நிலவி வருகிறது.
ஏற்கனவே மூன்று முறையாக லாக்டவுன் நீட்டிப்பு செய்யட்டுள்ள நிலையில், நான்காவது முறையாகவும் நீட்டிக்கப்படலாம் என்ற நிலையே நிலவி வருகிறது.
இதற்கு மத்தியில் முடங்கிபோயுள்ள பொருளாதாரத்தினை ஊக்குவிக்கவும்,அத்தியாவசிய தேவைகளுக்குக்கூட கஷ்டப்படும் மக்களுக்கு உதவும் வகையிலும் இன்று மாலை நான்கு மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
ஊக்குவிப்பு நடவடிக்கை
முன்னதாக கடந்த செவ்வாய்கிழமையன்று இரவு பிரதமர் மோடி உரையாற்றிய போது, மொத்தம் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதாரத் ஊக்குவிப்பு திட்டத்தினை வகுக்க உள்ளதாக அறிவித்தார். அதிலும் இந்தியாவின் மொத்த ஜிடிபி விகிதம் சுமார் 202 லட்சம் கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. அதில் 10 சதவீதம் தான் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு பல வழிகளில் பல திட்டங்களை அறிவிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
எவ்வளவு ஊக்குவிப்பு தொகை?
ஆக இந்தியா அதன் மொத்த ஜிடிபி விகிதத்தின் 10 சதவீதத்தினை தான் பொருளாதார ஊக்குவிப்பு சலுகையாக அறிவிக்க போகிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், ஏற்கனவே அளித்த ஊக்குவிப்பு திட்டங்களும் இதில் அடங்கும் எனவும் கூறப்படுகிறது. ஆக அவ்வாறு பழைய ஊக்குவிப்புகளை கழிக்கும் போது இதில் பாதி தொகை வருவதே கஷ்டம் தான் என்கிறார்கள் நிபுணர்கள்.
யாருக்கு என்ன சலுகை?
ஆக இப்படி இருக்கையில் இதில் யாருக்கு என்ன சலுகை. வேலையினை இழந்த பல கோடி மக்களுக்கு உதவப்போகிறதா? பனப்புழக்கத்தினை அதிகரிக்க என்ன செய்யப்போகிறது என பல கேள்விகள் எழத்தான் செய்கிறது. ஆக இதெற்கெல்லாம் பதில் சொல்லும் விதமாகத் தான் இன்று மாலை 4 மணிக்கு பத்திரிக்கையாளர்களை சந்திக்கவிருக்கிறார் நிதியமைச்சர். ஆக அவரின் அறிவிப்பு ஒன்றே இதற்கெல்லாம் பதில் கொடுக்கும்.
சாமானியர்களுக்கு என்ன சலுகை?
குறிப்பாக நலிவடைந்துள்ள தொழில் துறையினருக்கு ஏதேனும் சலுகைகள் இருக்குமா? அப்படியே இருந்தாலும் என்னென்ன சலுகைகள் இருக்க போகிறது? என்ன சொல்லப் போகிறார் நிர்மலா சீதாராமன். குறிப்பாக சாமனிய மக்களுக்கு என்ன சொல்லப்போகிறார்? என்ற எதிர்பார்ப்புகள் அனைவர் மனதிலும் எழாமல் இல்லை. இன்னும் கொஞ்சம் நேரம் தானே. பொறுத்திருந்து தான் பார்ப்போமே. என்ன தான் சொல்லப் போகிறார் என்று?


Click it and Unblock the Notifications