ரூ.10 லட்சம் வரை வருமான வரி இல்லை!! புதிதாக 25% வரி பலகை அறிமுகம் ?

டெல்லி: எதிர்வரக்கூடிய மத்திய பட்ஜெட்டில் புதிய வரி கணக்கு தாக்கல் நடைமுறையில் பல்வேறு முக்கியமான அறிவிப்புகள் வெளியாகும் என சொல்லப்படுகிறது. குறிப்பாக ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு எந்த வரியும் இல்லை என்ற அறிவிப்பு வெளியிடப்பட இருப்பதாக பிசினஸ் ஸ்டாண்டர்ட் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் 25 சதவீத வரி என்று ஒரு புதிய வரி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

வரும் 1ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். இதில் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் அறிவிக்கப்படுமா என்று எதிர்பார்ப்பு பரவலாக நிலவுகிறது. இந்த நிலையில் பிசினஸ் ஸ்டாண்டர்ட் ,அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவித்ததாக ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.

ரூ.10 லட்சம் வரை வருமான வரி இல்லை!! புதிதாக 25% வரி பலகை அறிமுகம் ?

அதில் புதிய வரி கணக்கு தாக்கல் நடைமுறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது புதிய வரி கணக்கு தாக்கல் நடைமுறையில் ஆண்டுக்கு 7.75 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு 75 ஆயிரம் ரூபாய் நிலையான கழிவு இருப்பதால் எந்த வரியும் செலுத்த வேண்டிய தேவையில்லை. மத்திய அரசு பெரும்பாலான மக்கள் புதிய வரி கணக்கு தாக்கல் நடைமுறைக்கு மாற வேண்டும் என விரும்புவதால் , வருமான வரி வரம்புகளில் மாற்றங்களை கொண்டு வர இருப்பதாக தெரிவிக்கிறது.

உதாரணமாக 10 லட்சம் ரூபாய் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு எந்த வரியும் இல்லை என்ற அதிரடி மாற்றத்தை அரசு அறிவிக்க பரிசீலனை செய்வதாக அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வரையிலான வருமானம் கொண்டவர்களுக்கான 25 சதவீதம் வரி என புதிய வரி விகிதம் கொண்டு வரப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு வருமான வரி வரம்புகளில் மாற்றம் கொண்டு வரும்போது அரசுக்கு 50000 கோடி முதல் 1 லட்சம் கோடி வரை வருமானம் பாதிக்கப்படும் என தெரிகிறது. சில தினங்களுக்கு முன்னர் தான் குளோபல் டிரேட் ரிசர்ச் எனப்படும் ஜிடிஆர்ஐ அமைப்பு மத்திய அரசு வருமான வரி உச்சவரம்பில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி இருந்தது.

தற்போது வருமான வரி உச்சவரம்பு 2.5 லட்சம் ரூபாயாக இருக்கும் நிலையில் பண வீக்கத்தின் அடிப்படையில் கணக்கீடு செய்த அதனை ஆண்டுக்கு 5.7 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் ,சேமிப்பு திட்டங்களில் கிடைக்கக்கூடிய வட்டிக்கு ஆண்டுக்கு 10000 ரூபாய் வரிவிலக்கு வழங்கப்படும் நிலையில் அதனை 19,450 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருந்தது.

அதேபோல காப்பீட்டு பிரீமியம் மற்றும் பிஎஃப் பங்களிப்புக்கு ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு வழங்கப்படுகிறது, இதனை 2.6 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என ஜிடிஆர்ஐ அமைப்பு அரசுக்கு வலியுறுத்தி இருந்தது. பண வீக்கத்தின் அடிப்படையில் வருமான வரி உச்சவரம்புகளை மாற்ற வேண்டுமென அந்த அமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் தான் அரசு அதிகாரிகள் இப்படி ஒரு தகவலை வெளியிட்டுள்ளனர். இந்தியாவில் தற்போது பழைய வரி கணக்கு நடைமுறை, புதிய வரி கணக்கு நடைமுறை என இரண்டு முறைகளில் தனிநபர்கள் வருமான வரி தாக்கல் செய்யலாம்.

பழைய வரி கணக்கு நடைமுறையில் ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு எந்த ஒரு வரியும் செலுத்த தேவையில்லை. பிரிவு 80c இன் கீழ் வீட்டு கடனுக்கான வட்டி தொகை, வீட்டுக் கடனுக்காக செலுத்தும் அசல் தொகை, காப்பீடு திட்டங்களுக்கு செலுத்தும் பிரீமியம் தொகை , பிஎஃப் பங்களிப்பு ஆகியவற்றை குறிப்பிட்டு ஆண்டுக்கு 1.50 லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு பெற முடியும்.

ஆனால் புதிய வரி நடைமுறையில் எந்த ஒரு வரி விலக்கும் வழங்கப்படுவதில்லை. இதில் ஆண்டுக்கு மூன்று லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு எந்த வரியும் கிடையாது. அதேபோல 3 - 7 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈடுபவர்களுக்கு நிலையான வரிக் கழிவு இருப்பதால் அவர்களுக்கு வரி வராது.

7 - 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் கொண்டவர்கள் 10 சதவீதம், 10 - 12 லட்சம் வரை வருமானம் கொண்டவர்கள் 15 சதவீதம், 12 - 15 லட்சம் வரை வருமானம் கொண்டவர்கள் 20 சதவீதம், 15 லட்சத்திற்கு மேல் வருமானம் கொண்டவர்கள் 30 சதவீதம் என வரி செலுத்துகின்றனர்.

Story written by: devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+