டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பத்திரிககியாளார்களுக்கு அளித்த பேட்டியில் பல அம்ச திட்டங்களை அறிவித்தார்.
அதில் குறிப்பாக நாட்டில் உள்ள புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பல திட்டங்களை அறிவித்து வருகிறார்.
இந்த திட்டங்கள் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு மிகவும் உதவும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. வாருங்கள் அதனை பற்றித் தான் பார்க்கப்போகிறோம்.
ஒரே நாடு ஒரு ரேஷன் கார்டு திட்டம்
குறிப்பாக புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், ஒரே நாடு ஒரு ரேஷன் கார்டு திட்டம் 2021ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முழுமையாக அமல்படுத்தப்படும என்று அறிவித்துள்ளார். இதன் மூலம் 23 மாநிலங்கள் உள்பட 67 கோடி பேர் இந்த ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் பயனடைவர் என்றும் கூறியுள்ளார்.
வெளிமாநில தொழிலாளர்களுக்கு பயன்
குறிப்பாக ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் நாட்டில் உள்ள எந்த ரேசன் கடையிலும் பொருட்களை வாங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆக நீங்கள் இந்தியாவில் எந்தவொரு மாநிலங்களுக்கு செல்லும் போதும், இந்த திட்டம் மிக பயனுள்ளதாக அமையும்.
தானியம் இலவசம்
மேலும் இதோடு அனைத்து வெளிமாநில தொழிலாளர்களுக்கும் 2 மாதம் இலவச உணவு தானியம் வழங்கப்படும். வெளிமாநில தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் அடுத்த 2 மாதம் தலா 5 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார் நிதியமைச்சர்.
குறைந்த வாடகையில் வீடு
மேலும் குறைந்த வாடகையில் வீடுகள் கட்டி வழங்கும் நிறுவனங்கள், அமைப்புகளுக்கு மத்திய அரசு சார்பில் மானியம் வழங்கப்படும். தனியார் பங்களிப்பில் வீடுகள் கட்டப்பட்டு வெளிமாநில தொழிலாளர்களுக்கு குறைந்த வாடகையில் வழங்கப்படும் எனவும் நிர்மலா சீதாராமன் தனது அறிவிப்பில் கூறியிருந்தார்.
நிதி ஒதுக்கீடு
இதுவரையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உணவு, குடிநீர் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு 11,000 கோடி ரூபாய் வரையில் செலவிட்டுள்ளது. இவ்வாறாக இடம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மத்திய அரசு காத்துக் கொண்டுதான் உள்ளது. ஆக நிச்சயம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பயனுள்ளதாக அமையும் எனலாம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications