மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யப்படும் போது என்ன மாதிரியான அறிவிப்புகளை வெளியிடுவார் என்பதை தாண்டி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளில் அவர் உடுத்தும் புடவையும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் பாரம்பரியத்தையும் பிரத்தியேக கைவினை திறன்களையும் கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாநிலத்தையும் பாரம்பரிய கலைகளையும் பிரதிபலிக்கும் புடவைகளையே அவர் தேர்வு செய்கிறார். இந்த ஆண்டு அவர் தேர்வு செய்திருப்பது தமிழ்நாட்டின் புகழ்பெற்ற காஞ்சிபுரம் பட்டு புடவை.

காஞ்சிபுரம் பட்டு புடவை என்றாலே தனித்துவமான வேலைப்பாடு கொண்டது. அந்த வகையில் இந்த முறையில் தமிழ்நாட்டின் பாரம்பரிய புடவையை கௌரவப்படுத்தும் வகையில் காஞ்சிபுரம் பட்டு புடவை அணிந்து கவனத்தை ஈர்த்துள்ளார் நிர்மலா சீதாராமன். ஊதா நிற புடவையில், கோல்டன் பிரவுன் நிறத்தில் கட்டம் போட்ட , காஃபி பிரவுன் நிற பார்டர் கொண்ட புடவையை அவர் அணிந்திருக்கிறார்.
கடந்த 2025 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தபோது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பீகாரின் பாரம்பரிய கலை வடிவமான மதுபானி கலைநுட்பத்தில் உருவாக்கப்பட்டிருந்த வெள்ளை நிறத்திலான புடவையை அணிந்திருந்தார். இந்த புடவை 2021 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்ற துலாரி தேவி என்பவரால் நிர்மலா சீதாராமனுக்கு பரிசாக வழங்கப்பட்டது. அப்போது அவர் பட்ஜெட் தினத்தன்று இதனை உடுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதாக சொல்லப்பட்டது.

இந்த பட்ஜெட்டில் தான் நதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பீகார் மாநிலத்திற்கு பல்வேறு முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த பட்ஜெட் முடிந்த உடனேயே பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றியும் பெற்றது. அந்த வகையில் இந்த முறை 2026 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தயாராகி இருக்கும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் நெய்த பட்டுப்புடவையை அணிந்திருக்கிறார்.
இந்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் எதிர்கொள்ள இருக்கும் நிலையில் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற காஞ்சிபுரம் பட்டு புடவையை அவர் அணிந்திருப்பது பேசு பொருளாக மாறி இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு மரியாதை அளிக்கும் வகையிலும் அவர்களின் கவனம் ஈர்க்கும் வகையிலும் அவருடைய புடவை தேர்வு என்பது அமைந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications