லண்டன்: நிதி சார்ந்த துறைகளில் பணிபுரிபவர்களுக்கு மிகப்பெரிய கனவாக இருக்கக்கூடியது இன்வெஸ்ட்மென்ட் பேங்கர் போன்ற பதவிகள் தான். ஆனால் இன்வெஸ்ட்மென்ட் பேங்கராக பணி செய்து வந்த ஒரு பெண் அதனை விடுத்து யூடியூப்பில் சேனல் தொடங்கி தற்போது கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.
நிஸ்சா ஷா (Nischa Shah), லண்டனில் இன்வெஸ்ட்மென்ட் பேங்கராக 10 ஆண்டுகள் பணிபுரிந்து வந்தார். அவர் அந்த பணியை விட்டுவிட்டு தற்போது யூடியூபில் கண்டன்ட் கிரியேட்டராக மாறியிருக்கிறார். கிரெடிட் அக்ரி கோல் (Crédit Agricole) என்ற நிறுவனத்தில் இன்வெஸ்ட்மென்ட் பேங்கராக பணிபுரிந்து வந்த இந்த பெண், ஆண்டுக்கு இரண்டு கோடி ரூபாய் ஊதியம் பெற்று வந்தார். ஆனால் அந்த வேலையில் அவருக்கு திருப்தி கிடைக்கவில்லையாம்.

நிதி சார்ந்த தன்னுடைய அறிவினை பொதுமக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் இவருக்கு தோன்றியது எனவே பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக வேலை செய்வதை விடுத்து பொதுமக்களுக்கு நிதி சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என முடிவு செய்துள்ளார்.
இதற்கு காரணமாக அமைந்தது அவரது பெற்றோருக்கு ஒரு முறை வரி செலுத்துவதை தவிர்ப்பதற்காக சில வழிமுறைகளை கற்றுக் கொடுத்தாராம். அப்பொழுதுதான் இதைப்போல பல சாதாரண மக்களும் இந்த வழிமுறைகளை எல்லாம் தெரியாமல் இருக்கின்றனர் அவர்களுக்கு நாம் இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் என்ற முடிவை எடுத்தாராம்.
தற்போது Nischa Shah என்ற பெயரில் இவர் யூடியூப் சேனல் வாயிலாக பர்சனல் பைனான்ஸ் அதாவது தனிப்பட்ட நிதி மேலாண்மை தொடர்பான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இவருக்கு சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் இருக்கின்றனர்.
தனிப்பட்ட நிதி மேலாண்மை குறித்த விழிப்புணர்வை பெற்றிருப்பது உங்களுக்கு மிகப்பெரிய அளவிலான பணத்தை சேமிப்பதற்கு உதவி செய்யும் என கூறும் அவர் பர்சனல் பைனான்ஸ் மற்றும் சுய மேம்பாடு குறித்து கடந்த 2021 ஆம் ஆண்டு youtube இல் சேனலை தொடங்கினார்.

தற்போது அவரது சேனலுக்கு கிட்டத்தட்ட ஒரு மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் இருக்கின்றனர். கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் இவர் youtube வீடியோக்கள் வாயிலாக 8 கோடி ரூபாயை சம்பாதித்து இருக்கிறார். இதனால் தன்னுடைய இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங் வேலையை இவர் முழு நேர கண்டன்ட் கிரியேட்டராக மாறி இருக்கிறார்.
தற்போது தனக்கு கிடைக்கக்கூடிய ஊதியம் எவ்வளவு மணி நேரம் வேலை செய்கிறேன் என்பதை பொறுத்து இல்லாமல் என்னுடைய அறிவு எத்தனை பேரிடம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை பொறுத்து மாறி இருக்கிறது என மகிழ்ச்சி தெரிவிக்கிறார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications