பணிநீக்கம் என்பது இன்றளவு அனைத்து துறையிலும் அதிகரித்துள்ளது, டெக் துறையில் ஏஐ ஆதிக்கம் என்றால் உற்பத்தி துறையில் ஆட்டோமேஷன், ரோபோட்டிக்ஸ் என பல புதிய தொழில்நுட்ப மேம்பாடு மூலம் மனிதர்களின் உதவியில்லாமல் தொழிற்சாலைகள் இயங்கும் நிலை உருவாகி வருகிறது.
இதேவேளையில் ஆட்டோமொபைல் துறையில் கடந்த 100 வருடத்தில் பார்க்காத மாற்றங்கள் அனைத்தும் தற்போது EV, ஹைட்ரஜென், CNG, சோலார் எனர்ஜி மூலம் இயங்கும் கார்கள் வர துவங்கியுள்ளது. இந்த மாற்றத்திற்கு தயாராகாத நிறுவனங்கள் அனைத்தும் தற்போது மாடிக்கொண்டு விழிக்கிறது. இப்படிப்பட்ட ஒரு நிறுவனம் தான் இந்த நிசான்.

ஜப்பான் கார் தயாரிப்பு நிறுவனமான நிசான் மோட்டார், ஏற்கனவே பல கட்டமாக செலவின குறைப்பு, பணிநீக்கம் செய்துள்ள நிலையில் தற்போது புதிதாக தனது உலகளவிய வர்த்தகத்தில் 10,000 பேரை பணிநீக்கம செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த 10000 ஊழியர்களை கணக்கில் எடுத்துக்கொண்டால், நிசான் மொத்தம் 30,000 பேரை பணியில் இருந்து நீக்க உள்ளது.
நிசான் ஏற்கனவே 20000 ஊழியர்கள் அதாவது இது மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் சுமார் 15% குறைக்க திட்டமிட்டு இருந்த வேளையில் தற்போது 10000 பேரை புதிதாக சேர்த்துள்ளது கூடுதல் அதிர்ச்சியாக உள்ளது. இந்த பணிநீக்க அறிவிப்பை ஜப்பான் நாட்டின் பொது ஒலிபரப்பு நிறுவனமான NHK தெரிவித்துள்ளது. நிசானும் ஹோண்டாவும் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தைகளை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்த பின்பு எடுக்கப்படும் அதிரடி நடவடிக்கையாக இதை பார்க்கப்படுகிறது. நிசான் நிறுவனம் செவ்வாய்க்கிழமை தனது முழு ஆண்டு முடிவுகளை அறிவிக்க உள்ளது.
நிசானின் பணிநீக்கம் மற்றும் நிதி நெருக்கடி: நிசான் மோட்டாரின் இந்த 30000 ஊழியர்கள் முடிவு, நிறுவனத்தின் நிதி நிலைமையை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம், நிசான் மார்ச் மாதத்தில் முடிவடைந்த நிதியாண்டில் 700-750 பில்லியன் யென் (4.74-5.08 பில்லியன் டாலர்) நிகர நஷ்டத்தை எதிர்பார்ப்பதாக முதலீட்டாளர்களுக்கு முன் கணிப்பை வெளியிட்டது.
இந்த நஷ்டம், நிறுவனத்தின் மதிப்பு குறைப்புக்கு முக்கியமான காரணமாக உள்ளது. இதவேளையில் செவ்வாய்க்கிழமை நிசான் தனது முழு ஆண்டு முடிவுகளை அறிவிக்க உள்ளது. இந்த இழப்பை சமாளிக்கவே அடுத்த காலாண்டில் அல்லது நிதியாண்டில் லாபகரமாக மாற திட்டமிட்டு இந்த 30000 பேரை பணிநீக்கம் செய்யும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது நிசான்.
ஹோண்டா-நிசான் இணைப்பு தோல்வி: ஜாப்பான் நாட்டின் இரு மாபெரும் கார் தயாரிப்பு நிறுவனமான நிசான் மற்றும் ஹோண்டா, டிசம்பர் 2024 இல் தங்கள் வர்த்தகம் மற்றும் உற்பத்தி தளங்களை இணைப்பது குறித்த பேச்சுவார்த்தைகளை தொடங்கியிருந்தன. இந்த இணைப்பு, உலகின் மூன்றாவது பெரிய வாகன உற்பத்தியாளரை உருவாக்கும் மாபெரும் இலக்கை கொண்டிருந்தது.
ஆனால், ஆரம்பம் முதலே இந்த இணைப்பு குறித்து சந்தேகங்கள் இருந்தன, இறுதியில் பேச்சுவார்த்தைகள் ரத்து செய்யப்பட்டன. இந்த முடிவு, ஜப்பான் வாகனத் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, ஏனெனில் இணைப்பு நடந்திருந்தால், இரு நிறுவனங்களும் சீன எலக்ட்ரிக் வாகனங்களின் ஆதிக்கத்தை எதிர்த்து போட்டிப்போடும் வல்லமையை பெற்று இருக்கும்.

சீன எலக்ட்ரிக் வாகனங்களின் சவால்: உலகளவில் எலக்ட்ரிக் வாகனங்களின் தேவை அதிகரித்து வரும் நிலையில், சீன நிறுவனமான BYD போன்றவை மலிவான விலையில், தொழில்நுட்பத்தில் மேம்பட்ட வாகனங்களை அறிமுகப்படுத்தி சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதனால் இத்துறையில் முன்னோடியாக இருக்கும் டெஸ்லாவே அதிகப்படியான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் பெட்ரோல், டீசல் கார்களை காலம் காலமாக தயாரித்து வரும் நிசான் மற்றும் ஹோண்டா, எலக்ட்ரிக் வாகனத் துறையில் ஆர்வம் காட்டினாலும், பெரிய அளவிலான வர்த்தக வளர்ச்சியை அடைய முடியவில்லை. குறிப்பாக சீனாவில், உள்ளூர் நிறுவனங்களின் போட்டியால் ஜப்பான் நிறுவனங்கள் தங்கள் சந்தை பங்கை இழந்து வருகின்றன.
இதை சரிசெய்ய, நிசான் மற்றும் ஹோண்டா இணைப்பு மூலம் நிதி ஆதாரங்கள், உற்பத்தி திறன், மற்றும் தொழில்நுட்பத்தை பகிர்ந்து, மலிவு விலையில் தரமான கார்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டிருந்தன. ஆனால் இணைப்பு திட்டம் கைவிடப்பட்டது, தற்போது நிசான் 30000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
நிசானின் எதிர்கால சவால்கள்: நிசானின் தற்போதைய நெருக்கடி, உலகளாவிய வாகன சந்தையில் ஜப்பான் நிறுவனங்களின் பின்னடைவை வெளிப்படுத்துகிறது. எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதற்கு தேவையான முதலீடு மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவை நிசானுக்கு பெரும் சவாலாக உள்ளன.
மேலும், சீனாவில் உள்ளூர் நிறுவனங்களுடனான போட்டி, அமெரிக்க சந்தையில் குறைந்த விற்பனை, மற்றும் உயரும் மூலப்பொருள் செலவுகள் ஆகியவை நிசானின் இலாபத்தை குறைத்துள்ளன. இந்த சூழலில் தான் வேறு வழியே இல்லாமல், 30,000 பேரை பணிநீக்கம் செய்து நிறுவனத்தின் செலவு குறைத்து நீண்டகால வளர்ச்சிக்கு தரமான கார்களை கொண்டுவரும் திட்டத்தில் கையில் எடுத்துள்ளது.

நிசானின் வேலை குறைப்பு மற்றும் இணைப்பு தோல்வி, இந்தியாவின் வாகனத் துறையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இந்தியாவில் நிசான் மற்றும் ஹோண்டா ஆகியவை குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன. இந்த மாற்றங்கள், இந்தியாவில் உள்ள உற்பத்தி தளங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளை பாதிக்கலாம். இருப்பினும், இந்தியாவின் வளர்ந்து வரும் எலக்ட்ரிக் வாகன சந்தை, இந்நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கலாம், ஆனால் அதற்கு குறிப்பிடத்தக்க முதலீடு தேவை.
இதேவேளையில் இந்தியாவில் எலான் மஸ்க் தனது கார்களை விற்பனை செய்ய மிகவும் ஆர்வமாக உள்ளார். டெஸ்லா, இந்தியாவில் தனது வாகன விற்பனையை 2025 ஆம் ஆண்டு மூன்றாம் காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) தொடங்க திட்டமிட்டுள்ளது. மும்பையின் பந்த்ரா குர்லா வளாகத்தில் 4,003 சதுர அடி கொண்ட ஷோரூமையும், புது தில்லியின் ஏரோசிட்டி பகுதியில் மற்றொரு ஷோரூமையும் அமைக்க டெஸ்லா ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஷோரூம்கள் மூலம் டெஸ்லா மாடல் ஒய் (Model Y) மற்றும் மாடல் 3 (Model 3) ஆகிய மின்சார வாகனங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெஸ்லா 2021 ஆம் ஆண்டு இந்தியாவில் 'டெஸ்லா இந்தியா மோட்டார்ஸ் அண்ட் எனர்ஜி பிரைவேட் லிமிடெட்' என்ற பெயரில் பதிவு செய்து, பெங்களூருவில் அலுவலகம் அமைத்தது. 2022 இல் இறக்குமதி வரி குறைப்பு கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதால் திட்டங்கள் தாமதமாகின.
2024 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்காவில் டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் சந்தித்தார், இந்த சந்திப்பில் இந்தியாவில் குறிப்பிடத்தக்க முதலீடு செய்ய உறுதியளித்தார். தற்போது, மும்பை மற்றும் தில்லியில் ஷோரூம்களை அமைப்பதுடன், வாடிக்கையாளர் ஆதரவு, விற்பனை, மற்றும் தயாரிப்பு மேம்பாட்டு பணிகளுக்கு ஊழியர்களை நியமித்து வருகிறது.
More From GoodReturns

உழைப்பை யாரும் மதிக்கவில்லை!கார்ப்பரேட் வெற்றிக்கு அதிர்ஷ்டம் முக்கியமா- மைக்ரோசாப்ட் ஊழியர் வேதனை?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications