இந்தியாவின் டாப் பில்லியனர் முகேஷ் அம்பானியின் மனைவியான நீதா அம்பானியும் உலகளவில் பிரபலமான தொழிலதிபராவார். அவரது கருணை உள்ளத்தால் கோடிக்கணக்கான மக்களின் இதயத்தில் இடம் பெற்றுள்ளார்.
தொழில்துறையிலும், சமுக சேவையிலும் கடுமையான உழைக்கும் நீதா அம்பானி அவரது ஸ்டைல் சென்ஸிலும் மிக நேர்த்தியானவர். நீதா அம்பானி-யின் ஆடம்பர வாழ்க்கை, காஸ்ட்லியான பொருட்கள், விலை உயர்ந்தை நகைகள், ஆடை எப்போதும் பெரும் பேசுபொருளாகவே இருக்கும்.

அந்த வகையில் சனிக்கிழமையன்று நடைபெற்ற டாடா பெண்கள் பிரீமியர் லீக் ஏலத்தில் நீதா அம்பானியும் கலந்து கொண்டார்.
அதில் அவர் ஸ்டைலாக நடந்து வரும் படங்களும், விடியோக்களும் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளன.
புளூ கலர் ஷர்ட்டும் ஜீன்ஸும் நீதா அணிந்திருந்தார். ஷர்ட்டுக்கு மேலாக கோரல் நிற பிளேசர் அணிந்திருந்தார். ரூ.2.9 லட்சம் விலையிலான இத்தாலியன் டிசைனர் ஹேண்டு பைக்கையும் வைத்திருந்தார். அவரது அவுட்லுக் செமயாக இருந்தது.
கைகளில் பளிச்சென்று கண்ணைக்கவரும் மோதிரம், வாட்ச், காதுகளுக்கு எடுப்பான தோடுகளை அணிந்திருந்தது இன்ஸ்டாகிராம்-ல் அதிகளவில் பேசப்பட்டார்.
அவரது தோற்றத்துக்கு ஏற்றபடி நேச்சுரல் மேக்ப்பை போட்டிருந்தார் எனவும் பலரும் பாராட்டினர். நீதா தனது உதட்டுக்கு கிளாஸி லிப்ஸ்டிக், ஃப்ளஷ்டு சீக்ஸ், சீக் போன்களுக்கு எடுப்பான ஷேடு, ஸ்பார்க்கி ஐஷேடோ, மஸ்காராவுடன் அடர்த்தியான இமைகள், நேர்த்தியாக திருத்தப்பட்ட புருவங்கள் என பார்வையாளர்களை சுண்டி இழுத்துவிட்டார் நீதா.
அவரது தோற்றம் ஒரு பாஸ்-லேடியைப் போன்று கம்பீரமாக இருந்தது என சமுக வலைத்தளத்தில் அதிகம் பேசப்பட்டாலும், அவரது ஹேண்ட் பேக் தான் சென்டர் ஆஃப் அட்டிராக்ஷன். பிங்க் நிற ஹேண்டுபேக்கில் அழகிய செயின் பொருத்தப்பட்ட ஸ்ட்ராப் இருந்தது. அந்த ஹேண்டுபேக் புகழ்பெற்ற சானல் பிராண்டை சேர்ந்தது. அதன் விலை 3,550 அமெரிக்க டாலர்களாகும். அதன் இந்திய மதிப்பு ரூ.2,96,177 ஆகும் என Rebag.com-இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதா அம்பானி அணியும் ஆடைகள் எப்போதும் சிறப்பான தோற்றத்துடன் இருக்கும் என்பதால் பார்த்தவர்கள் யாருக்குமே உடனே பிடித்து விடும். தனது மகள் இஷா அம்பானியின் இரட்டைக் குழந்தைகளான கிருஷ்ணா, ஆதியாவின் முதல் பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது நீதா அம்பானி அணிந்திருந்த பர்ப்பிள் லேஸ் மிடி டிரஸ் அனைவரையும் கவர்ந்திருந்தது.
பிரவுன் நிற ஹேர் கலர், ஹை ஹீல்ஸ் காலணி, பன் ஹேர்ஸ்டைல், தோடுகள், வாட்ச் அவருக்கு மேலும் அழகு சேர்த்தது. நீதா அம்பானியின் டிரஸ் பிரபலமான டோல்ஸ் அண்டு கப்பானா பிராண்டு என்பதால் அதன் விலை ரூ.1,82,648 ஆனது.
நீதா அம்பானி எப்போதுமே தனது தோற்றத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறார். உடைகள், மேக்அப், வேறு ஆக்ஸசரிகளுக்கு அவர் பல லட்சம் ரூபாயை செலவழிக்கிறார். இருக்கப்பட்டவர்கள் எவ்வளவு செலவழித்தால் என்ன. ஆள்பாதி ஆடை பாதி என்பது இவர்களுக்காகவே எழுதப்பட்ட பொன்மொழியாகும்.


Click it and Unblock the Notifications