இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி குடும்பம் நவம்பர் 1 ஆம் தேதி இந்தியாவே வியக்கும் வகையில் ஆடம்பர பிராண்டுகளுக்காகப் பிரத்தியேகமாக Jio World Plaza என்னும் பிரம்மாண்டமான மால்-ஐ திறந்தது.
இதேநாளில் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானியின் பிறந்த நாளும் வந்தது, Jio World Plaza மால் திறப்பு மற்றும் முதல் நாளில் மால்-க்கு வந்த பிரபலங்கள் என அதைச் சார்ந்த விஷயங்கள் சமுக வலைத்தளத்தில் நிறைந்திருந்தது.

இந்த நிலையில் Jio World Plaza திறப்பு விழாவிற்குப் பின்பு நடந்த நீதா அம்பானியின் பிறந்த நாள் கொண்டாட்ட வீடியோ இப்போது தான் வெளியாகியுள்ளது. இன்ஸ்டாகிராமில் அம்பானி குடும்பத்தின் பேன் பேஜ் ரகசியமாக எடுக்கப்பட்ட வீடியோக்களை இணைத்து பதிவிட்ட நிலையில் தற்போது இந்தி வீடியோ வைரலாகியுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரும் நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானியின் மனைவியும், அம்பானி குடும்பத்தின் தலைவியுமான நீதா அம்பானி, சமீபத்தில் தனது 60வது பிறந்தநாளைத் தனது மகன்கள் அனந்த் அம்பானி, ஆகாஷ் அம்பானி, மகள் இஷா அம்பானி, மருமகள் ஷ்லோகா மேத்தா மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் உள்ளிட்ட குடும்பத்தினருடன் கொண்டாடினார். இவர்களோடு நீதா அம்பானியை அவரது அம்மா மற்றும் மாமியார் கோகிலாபென் அம்பானி உட்பட அவரது முழுக் குடும்பமும் இருந்தனர்.
இப்போது, பிறந்தநாள் கொண்டாட்டத்தின் வீடியோ வைரலாகி வருகிறது, அதில் நீதா அம்பானி தனது மூத்த மருமகள் ஷ்லோகா மேத்தா மற்றும் இளைய மருமகள் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோருடன் தனது பிறந்தநாள் கேக்கை வெட்டும் காட்சி வீடியோவில் உள்ளது.
நீதா அம்பானி தனது 60 வது பிறந்தநாளை 6 அடுக்கு கேக் வெட்டி கொண்டாடினார், இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் Jio World Plaza-வில் நடக்கும் முதல் விழா இது தான். இந்தக் கேக் வெட்டும் நிகழ்வு Jio World Plaza-வின் பார்ட்டி ஹால் அல்லது தியேட்டரில் நடத்திருக்கும் எனத் தெரிகிறது.

நீதா அம்பானி தனது 60 வது பிறந்தநாளை 6 அடுக்கு கேக் வெட்டி கொண்டாடியது மட்டும் அல்லாமல் ஒரு சிறிய இசை நிகழ்ச்சியும் நடந்துள்ளது. இந்தக் கொண்டாட்டம் அனைத்தும் அக்டோபர் 31 ஆம் தேதி இரவு ஜியோ மால் திறப்பு விழாவின் முடிவில் நடந்தது.
இதையடுத்து நவம்பர் 1 ஆம் தேதி ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவராக இருக்கும் நீதா அம்பானி புதன்கிழமை தனது 60வது பிறந்தநாளை மும்பையில் உள்ள 'அண்ணா சேவை'யில் 3,000 ஆதரவற்ற குழந்தைகளுக்குத் தனிப்பட்ட முறையில் உணவளித்துக் கொண்டாடினார். மேலும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மாலையில் பொழுது போக்கு மற்றும் பரிசுகளை வழங்கினார் நீதா அம்பானி.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications