மும்பை: இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி தம்பதியினரின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு கடந்த ஆண்டு மிகப் பிரமாண்டமான முறையில் திருமணம் நடத்தப்பட்டது.
ஆனந்த அம்பானிக்கும் ராதிகா மெர்சண்ட்க்கும் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வுகள் மற்றும் திருமணம் என குஜராத், மும்பை மற்றும் வெளிநாடுகளில் என பல்வேறு பிரம்மாண்டமான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் சர்வதேச இசை கலைஞர்கள் பலரும் கலந்துகொண்டு இசை நிகழ்ச்சிகளை நடத்தினர்.

அதேபோல பல்வேறு டெக் நிறுவனங்களின் தலைவர்களும் சர்வதேச பிரபலங்களும் இந்த திருமண நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வும், பின்னர் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் பார்ட்டியும், மும்பையில் திருமணமும் நடத்தப்பட்டது. இதற்கு பல ஆயிரம் கோடிகளை அம்பானி குடும்பம் செலவு செய்தது. இதனால் 2024 ஆம் ஆண்டில் உலக கவனம் பெற்ற நிகழ்வாக ஆனந்த் அம்பானி திருமணம் மாறியது.
அதே வேளையில் அம்பானி குடும்பத்தினர் ஆனந்தின் திருமணத்திற்காக செய்த செலவு குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சனங்களை முன் வைத்தனர். இதனிடையே அண்மையில் ப்ளூம்பெர்க் டிவிக்கு பேட்டி அளித்த நீதா அம்பானி எந்த ஒரு பெற்றோரும் தங்களுடைய குழந்தைகளுக்கு சிறந்ததை தான் தர வேண்டும் என விரும்புவார்கள் அதை தான் நாங்களும் செய்தோம் எனக் கூறியுள்ளார்.
ஆனந்த் அம்பானியின் திருமணம் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது, இதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பல்வேறு பிராண்டுகள் சர்வதேச கவனம் பெற்றன. மேலும் இந்திய கலாச்சாரம் மற்றும் இந்திய பாரம்பரிய நடைமுறைகள் இந்த நிகழ்வின் மூலம் சர்வதேச அளவில் பலருக்கும் சென்று சேர்ந்தது எனக் கூறியுள்ளார்.
என்னுடைய மகன் ஆனந்த் சிறுவயதிலிருந்தே உடல் பருமன் பிரச்சனையை எதிர்கொண்டிருந்தவர் ஆஸ்துமா பிரச்சினை காரணமாக பல்வேறு மருந்துகளை உட்கொண்டதால் ஆனந்த் அம்பானியின் உடல் இப்படி ஆனது. ஆனால் மிக தன்னம்பிக்கையோடு அவர் ஒரு மணமகனாக அந்த மணமேடையில் வந்து நின்ற தருணம் எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது என நீதா அம்பானி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் நம்பர் ஒன் தொழில் குழுமமாக இருக்கிறது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் . இதன் தலைவராக செயல்பட்டு வருகிறார் முகேஷ் அம்பானி. இவர் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராகவும் இருக்கிறார். இவருடைய இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் , பிரபல தொழிலதிபர் விரென் மெர்ச்சண்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டிற்கும் திருமணம் நடைபெற்றது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications