முகேஷ் அம்பானி மனைவியான நீதா அம்பானி, உலகம் முழுவதும் மிகவும் பிரபலம். ரிலையன்ஸ் குழுமத்தில் சில நாட்களுக்கு முன்பு வரையில் முக்கிய பதவி, ஐபிஎல் அணியின் உரிமையாளர், ரிலையன்ஸ் பவுண்டேஷன் தலைவர் பதவி மூலம் உலகின் பல முன்னணி அமைப்புகள் உடன் நெருங்கி பணியாற்றியதன் மூலமாகவும், நீதா அம்பானியின் பேஷன் ஸ்டைல் மற்றும் அவருடைய ஆடம்பர வாழ்க்கை காரணமாக உலகம் அறியும் நபராக உள்ளார்.
இப்படி பல பெருமைக்கு உரியவர் நீதா அம்பானி என்றாலும், இதற்கு அனைத்திற்கும் பின்பு முகேஷ் அம்பானி என்ற பெரும் தொழிலதிபரும், இந்தியாவின் பெரும் பணக்காரரும் உள்ளார். இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியை திருமணம் செய்வதற்கு முன்பு நீதா அம்பானியின் வாழ்க்கையைப் பற்றி பலருக்குத் தெரியாது.

முகேஷ் அம்பானி 1985 இல் நீதா அம்பானியை மணந்தார், மேலும் இருவருக்கும் மூன்று குழந்தைகள் - இரட்டையர்கள் ஆகாஷ் அம்பானி மற்றும் இஷா அம்பானி, மற்றும் இளைய மகன் ஆனந்த் அம்பானி - முழு குடும்பமும் இதுவரையில் யாரும் பார்த்திராத வாழ்ந்திடாத ஆடம்பரமான வாழ்க்கை வாழ்கின்றனர்.
ஆனால் முகேஷ் அம்பானி உடனான காதல் திருமணத்திற்கு முன்பு நீதா அம்பானியின் வாழ்க்கை அவ்வளவு ஆடம்பரமாக இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. முகேஷ் அம்பானியை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு, நீதா தலால் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்.
நீதா தலால் அம்பானியின் தந்தை ரவீந்திரபாய் அம்பானி, அப்போது குமார் மங்கலம் பிர்லா தலைமையில் இயங்கும் ஆதித்ய பிர்லா குழுமத்தில் மூத்த மேலாளராக பணியாற்றி வந்தார். நீதா அம்பானி தனது 6 வயதில் பரதநாட்டிய நடனக் கலைஞராகப் பயிற்சியைத் தொடங்கி 20 வயது வரை நடனத்தின் மீதான தனது ஆர்வத்தைத் தொடர்ந்தார்.
கல்லூரி படிப்பை முடித்த உடன் நீதா அம்பானி நடனக் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு சிறிய பள்ளியில் நடன ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கினார். இதன் பின்பு சில வருடம் மும்பையில் உள்ள ஒரு பள்ளியில் நடன ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
நீதா அம்பானி பயிற்சி பெற்ற கிளாசிக்கல் நடனக் கலைஞராக இருந்த அவர், பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். இப்படியொரு நடன நிகழ்ச்சியில் நீதா அம்பானியை பார்த்து தான் முகேஷ் அம்பானி அவர் மீதான காதலில் விழுந்ததாக கூறப்படுகிறது. ஆனால் முகேஷ் அம்பானியும், நீதா அம்பானியும் ஒரே தெருவில் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
முகேஷ் அம்பானியைத் திருமணம் செய்து கொண்ட பிறகு, நிதாவுக்கு ஒரே ஒரு வேண்டுகோள் இருந்தது - அதாவது திருமணத்திற்குப் பிறகும் வேலை செய்வதை யாரும் தடுக்க கூடாது என்பது தான், இதற்கு திருபாய் அம்பானி, கோகிலாபென் அம்பானியும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டனர். இதை சிமி கரேவால் உடனான ஒரு நேர்காணலில் கூறியதோடு, நீதா அம்பானி தனது சம்பளத்தையும் வெளிப்படுத்தினார்.
திருமணத்திற்குப் பிறகும், செயின்ட் ஃப்ளவர் நர்சரி என்ற நிறுவனத்தில் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்ததாக நீதா அம்பானி கூறினார். கோடீஸ்வரர்களைக் கொண்ட குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டாலும், தனது திறமையை முழுமையாக பயன்படுத்தி பணியாற்றியதாகவும், அந்த நேரத்தில் அவருக்கு சம்பளமாக மாதம் 800 ரூபாய் பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications