ரிலையன்ஸ் ஃபவுண்டேஷனின் நிறுவனர் மற்றும் தலைவர் நீதா அம்பானி, ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய விழாக்களில் சென்டர் ஆஃப் அட்டிராக்ஷனாக இருந்தார்.
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வாக இருக்க வேண்டும் என்பதற்காக கடந்த 6 மாதமாக தினமும் 16 மணிநேரம் பணியாற்றுவதாக ஆனந்த் அம்பானி 3 நாள் விழாவில் அனைத்து விருந்தினர்கள் முன்னிலையில் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து நீதா அம்பானியின் விஷ்வம்பரி ஸ்துதி நடன வீடியோ தற்போது இணையத்தில் பதிவிடப்பட்டு பெரிய அளவில் டிரெண்டாகி வருகிறது.
டிவிட்டரில் பகிரப்பட்ட இந்த நிகழ்ச்சியின் வீடியோவில், நீதா அம்பானி உளமார ஈடுபட்டு ஆடியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் வாழ்க்கைப் பயணத்திற்குத் தெய்வீக ஆசீர்வாதங்களை வேண்டி நடனமாடினார். நீதா அம்பானி இளம் வயதிலேயே பரதநாட்டியம் கற்றுக்கொண்டவர்.

இந்த நிகழ்ச்சிக்கு இசை அமைப்பாளர்கள் அஜய்-அதுல் இசையமைக்க, ஸ்ரேயா கோஷல் பாடினர். இதற்கு நீதா அம்பானி நடனமாடினார். நீதா அம்பானியின் நடனத்திற்கு கோரியோகிராப் செய்தது, நடன அமைப்பாளர் வைபவி மெர்ச்சண்ட்.
நீதா அம்பானியின் உடை மனிஷ் மல்ஹோத்ராவால் வடிவமைக்கப்பட்டது, மற்ற நடனக் கலைஞர்கள் ஆஷ்லி ரெபெல்லோ வடிவமைத்த உடைகளில் இருந்தனர்.
ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்திற்கு முந்தைய விழாக்களின் மூன்றாவது மற்றும் இறுதி நாளில், "ஹஸ்தக்ஷர்" விழாவில் ராதிகா மெர்ச்சண்ட் அற்புதமான நடனம் ஆடினார், அப்போது அவர் அம்பானி குடும்பத்தில் வரவேற்கப்பட்டார்.
ராதிகா மெர்ச்சன்ட் பாட்டு பாடி, டான்ஸ் ஆடி ஆனந்த் அம்பானி கரம் பிடித்த வீடியோ இளைஞர்களை பெரிய அளவில் கவர்ந்தது
திருமணத்திற்கு முந்தைய விழாக்களில் கலந்து கொண்ட விருந்தினர்கள் பாரம்பரிய இந்திய உடைகளை அணிவது கட்டாயமாக்கப்பட்டது. இந்த நிகழ்வில் "மகா ஆர்த்தி" என்ற சிறப்பு பூஜை நடைபெற்றது, அதைத் தொடர்ந்து விருந்து நடைபெற்றது.


Click it and Unblock the Notifications