நீதா அம்பானியும் முகேஷ் அம்பானியும் தங்கள் குடும்பத்தினருக்கு ஆடம்பரமான பரிசுகளை வழங்கும் ஒரு வழக்கத்தை நீண்ட காலமாக வைத்துள்ளது. முதலில் முகேஷ் அம்பானி தான், நீதா அம்பானிக்கு அடிக்கடி காஸ்ட்லியான கிப்ட் கொடுப்பது வழக்கம்.
ஆனால் தற்போது 3 பிள்ளைகளும் பெரியவர்களாகி, திருமணமான பின்பு நீதா அம்பானியும் முகேஷ் அம்பானியும் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் முக்கியமான தருணத்தில் காஸ்ட்லியான கிப்ட் கொடுப்பது வழக்கமாகியுள்ளது.

இது அவர்களின் ஆடம்பர வாழ்க்கை முறையின் அங்கமாக மாறியுள்ள நிலையில், அடுத்த சில நாட்களில் நீதா அம்பானி - முகேஷ் அம்பானி ஆகியோரின் இளைய மகனான அனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோருக்கு திருமணம் நடக்க உள்ள நிலையில் புது மருமகளுக்கு காஸ்ட்லியான கிப்ட்-களை அள்ளிக்கொடுத்து வருகிறது அம்பானி குடும்பம்.
உலக அளவில் 11வது பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி சுமார் 9,43,091 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இருக்கும் வேளையில் வருங்கால மருமகள் ராதிகா மெர்ச்சண்ட்-க்கு என்னென்ன கிப்ட் கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?!
மார்ச் 1-3 ஆகிய தேதிகளில் குஜராத் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் கிரீன்ஸில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோருக்கு திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் மரங்கள் மற்றும் விலங்குகளுக்கு மத்தியில் நடக்க உள்ளது.
முதல் கிப்ட்: ராதிகா மெர்ச்சன்ட் தனது வருங்கால மாமியார் நிதா அம்பானியிடம் இருந்து முதல் முறையாகப் பெற்ற கிப்ட் வெள்ளியில் செய்யப்பட்ட லக்ஷ்மி - விநாயகர் சிலை தான். இரண்டு வெள்ளி துளசி மாடம், வெள்ளி லட்சுமி-கணேஷ் சிலைகள், வெள்ளி தூபக் குச்சிகள் அடங்கிய பூஜை அறை பொருட்களைத் தான் பரிசாக கொடுத்தார்.
நிச்சயதார்த்த நாளில், ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோருக்கு முகேஷ் அம்பானி சுமார் ரூ. 4.5 கோடி மதிப்புள்ள ஆடம்பரமான பென்ட்லி கான்டினென்டல் ஜிடிசி ஸ்பீட் வழங்கினார்.
புது கார்: விராட் கோலி மற்றும் அமீர் கான் போன்ற சிலர் மட்டுமே இந்தியாவில் சொந்தமாக வைத்திருக்கும் இந்த பிரத்தியேக பிரிட்டிஷ் கார், டிவின்-டர்போசார்ஜ் 6.0-லிட்டர் W12 இன்ஜினைக் கொண்டுள்ளது, இது 0-60 மைல் வேகத்தை வெறும் 3.6 நொடியில் கடந்து செல்லும் திறன் கொண்டது.
திறமைக்கு கிப்ட்: ராதிகா மெர்ச்சன்ட், அவரது மாமியார் நீதா அம்பானி போலவே, பயிற்சி பெற்ற பரதநாட்டிய நடனக் கலைஞர் ஆவார். 2022 ஆம் ஆண்டில், அம்பானி குடும்பம் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் உள்ள தி கிராண்ட் தியேட்டரில் ஒரு பிரம்மாண்டமான அரங்கேற்றம் விழாவை ஏற்பாடு செய்தது அம்பானி குடும்பம்.
பாலிவுட்: குரு பாவனா தாக்கரின் வழிகாட்டுதலின் கீழ் ராதிகா மெர்ச்சன்ட் பாரம்பரிய நடனத்தை கற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் ரன்வீர் சிங், சல்மான் கான், அமீர் கான் என ஒட்டுமொத்த பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications