ஜாம்நகரில் ஆடம்பரமாக மூன்று நாள் நடைபெற்ற ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட்டின் திருமண நிகழ்வில் பல சுவாரசிய நிகழ்வுகள் பங்கேற்பாளர்களின் கண்களை கவரும் வண்ணம் இருந்தன. மும்பையில் ஜியோ வேர்ல்ட் சென்டரில் தனது இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண அரங்கில் நிதா அம்பானி, கையில் தங்கத்தால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை ஏந்திய படி காட்சியளித்தார். அதன் விவரங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணம், ஜாம்நகரில் 3 நாள் பிரமாண்ட விழாவாக நடைபெற்றது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தனது மனைவி நிதா அம்பானியுடன் முன்னதாகவே விழாவிற்கு வந்தார்.

நிதா அம்பானி தங்க விநாயகர் சிலையை கையில் ஏந்தி, விழாவில் தென்பட்டார். அதற்குள் ஒரு சிறிய விளக்கு எரிந்து கொண்டிருந்தது. இது தம்பதியருக்கு ஆசீர்வாதத்தைத் வழங்கும் விதமாக அவர் எடுத்து வந்தார் என்று கூறப்படுகிறது.
அதன் பின் முகேஷ் அம்பானி மற்றும் நிதா அம்பானி, அவர்களுடைய மூத்த மகன் ஆகாஷ் அம்பானி மற்றும் மனைவி ஷ்லோகா மேத்தா, அவர்களது குழந்தைகள், ஈஷா அம்பானி மற்றும் அவருடைய கணவர் ஆனந்த் பிரமல் ஆகியோர் அனைவரும் புகைப்படக் கலைஞர்களுக்கு அழகாக போஸ் கொடுத்தனர்.
குஜராத்தி திருமணங்களில் பொதுவாக மங்களகரமானதாகவும், செழிப்பைக் குறிக்கும் வகையிலும் பாரம்பரியமாக தீபம் திருமணங்களில் பயன்படுத்தப்படுகிறது. அதே போல நிதா அம்பானி கொண்டு வந்த தீபம், அவர்கள் எவ்வளவு கலாச்சார பற்றுக் கொண்டவர்கள் என்பதை எடுத்துக் காட்டும் விதமாக இருந்து.
கரண் ஜோஹர், அனன்யா பாண்டே, இப்ராஹிம் மற்றும் சாரா அலி கான், ஆர்யன் மற்றும் சுஹானா கான், குஷி கபூர், ஜான்வி கபூர் மற்றும் ஷிகர் பஹாரியா, வருண் தவான், கிருத்தி சனோன் மற்றும் மாதுரி தீட்சித் போன்ற பிரபலங்களும் திருமண விழாவில் கலந்து கொண்டனர்.
திருமணத்திற்கு முந்தைய நாள் நிகழ்வில், புகழ்பெற்ற நகை வடிவமைப்பாளரான லொரெய்ன் ஷ்வார்ட்ஸ் வடிவமைத்த சிங்க வடிவிலான ப்ரூச்-ஐ அணிந்து கொண்டு ஆனந்த் அம்பானி தென்பட்டார்.
இந்த ப்ரூச், மஞ்சள் வைரங்களைக் கொண்டு செய்யப்பட்டது, சிங்கத்தின் கண்களுக்கு மரகதங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த ப்ரூச்சின் முக்கிய அம்சம் சிங்கத்தின் வாயில் இருந்து தொங்கும் 50 கேரட் வைரம் தான்.
ஆனால் திருமண நாளன்று முகேஷ் அம்பானி மற்றும் அவருடைய மகன் ஆனந்த அம்பானி இருவரும் யானை வடிவிலான ப்ரூச்சை அணிந்திருந்தனர்.


Click it and Unblock the Notifications