அனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு முன்பு நேற்று கோலாகலமாக்க சங்கீத் விழா பிரபலங்களின் கலை நிகழ்ச்சிகளையும், திரையுலக பிரபலங்களின் மத்தியில் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டது.
ஆனால் இதற்கு மத்தியிலும் அம்பானி குடும்பம் கிரிக்கெட் மீதான தாங்கள் வைத்துள்ள மதிப்பை காட்டும் வகையில், டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றதை தொடந்து, இந்திய அணியில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களுக்காக நேற்று இரவு ஒரு சிறப்பு பூஜையை (வழிபாட்டு நிகழ்ச்சி) நீதா அம்பானி ஏற்பாடு செய்தார்.

அம்பானி குடும்பத்தினருடன் கிரிக்கெட் வீரர்கள் "ஹர ஹர மஹாதேவ்" என்று கோஷமிட்டு வரும் வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகியுள்ளது.
ஜஸ்டின் பீபர்-ன் பிரைவேட் நிகழ்ச்சிக்கு மத்தியில் நடந்த சங்கீத் விழாவுக்கு மத்தியில், இந்திய அணியில் மூன்று முன்னணி கிரிக்கெட் வீரர்களான ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹார்திக் பாண்டியா ஆகியோருக்கு இந்த பூஜையில் கௌரவிக்கப்பட்டனர்.
நீதா மற்றும் முகேஷ் அம்பானி, கிரிக்கெட் வீரர்களை மிக முக்கிய விருந்தினர்களாக அழைத்து வந்து "83" திரைப்படத்தின் முக்கியமான "லேஹர் டோ" பாடல் உடன் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யதிருந்தனர். 1983 ஆம் ஆண்டில் இந்தியா வரலாற்று சிறப்புமிக்க உலகக் கேப்பை வெற்றியைக் கொண்டாடும் இந்த பாடல் இந்த நிகழ்ச்சியில் சேர்க்கப்பட்டு உள்ளது கூடுதல் சிறப்பாக இருந்தது.
ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹார்டிக் பாண்டியா ஆகியோர் உடன் இஷான் கிஷன்-ம் உடன் இருந்தார். கிரிக்கெட்டையும் பாலிவுட்டையும் சிறப்பாக இணைக்கும் வல்லமை கொண்டது அம்பானி குடும்பம்.
சமீபத்தில் முதலீட்டு வங்கியான ஹோலிஹான் லோக்கே (Houlihan Lokey) வெளியிட்ட மதிப்பீட்டின் படி, ஐபிஎல் தொடரின் மொத்த சந்தை மதிப்பு தற்போது 16.4 பில்லியன் டாலராக, அதாவது 1,36,858 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என கணக்கிடப்பட்டு உள்ளது.
இந்திய அணி டி20 உலகக் கோப்பை போட்டியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, முக்கிய ஆட்டக்காரர்களான விராட் கோலி, ரோஹித் ஷர்மாவின் சந்தை மதிப்பு இரட்டிப்பாகியுள்ளது.

டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ள விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் ஏற்கனவே கையெழுத்திட்டு உள்ள சில விளம்பர ஒப்பந்தங்களில் சில தற்போது முடிவின் தருவாயில் உள்ளது. இந்த சில ஒப்பந்தங்களின் மதிப்பு உலக கோப்பை-க்கு பின்பு கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.
இதேபோல் ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரிட் பும்ரா, சூர்யகுமார் யாதவ், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் ஷிவம் துபே போன்ற முக்கிய ஸ்டார்களின் ஒப்பந்த மதிப்பும் குறைந்தது 50 முதல் 70 சதவீதம் வரை அதிகரித்துள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications