பிரபல இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவியும், ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவருமான நீதா அம்பானி, 'நிதா முகேஷ் அம்பானி கலாச்சார மையம்' (NMACC) என்ற ஒரு கலை, பல்துறை கலாச்சார மற்றும் கண்காட்சியை நிறுவியுள்ளனர். 2023 மார்ச் 31ஆம் தேதி இந்த மையம் திறக்கப்பட்ட நிலையில், இது மும்பையில் அமைந்துள்ளது. இந்த மையம் இந்திய கலைகளை பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் நிறுவப்பட்டதாக கூறப்படுகிறது. இது இந்திய கலாச்சார சொற்களஞ்சியத்தை மறுவரையறை செய்திருக்கிறது.
NMACC கலையை ஒரு பகிரப்பட்ட பொது காட்சியாக மாற்றியுள்ளது. நாடக ஆசிரியர், இயக்குனர் என பன்முகத் திறன் கொண்ட ஃபெரோஸ் அப்பாஸ் கானின் இந்திய நடனம், நாடகம், இசையை கொண்டாடும் "The Great Indian Musical: Civilization to Nation" என்ற நாடக அனுபவத்தின் மூலம் இந்த கலாச்சார மையம் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தாண்டு (2025) செப்டம்பர் மாதம் ஹார்வர்ட் இந்தியா மாநாட்டில், நிதா அம்பானி அமெரிக்காவின் லிங்கன் மையத்தில் NMACC ஒரு கலாச்சார வார இறுதி நிகழ்ச்சியை நடத்தப் போவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதற்கான ஏற்பாடுகள் தற்போது நியூயார்க்கில் நடந்து வருகிறது.

இந்நிலையில், NMACC-வின் கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்க நீதா அம்பானி அழைப்பு விடுத்திருக்கிறார். இதுதொடர்பாக, இந்தியா வீக்கெண்டின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவில், நீதா அம்பானியின் உடை மற்றும் நகைகள் அனைவரின் கவத்தையும் ஈர்த்துள்ளது. வீடியோவில் தோன்றும் நீதா அம்பானி, சிவப்பு நிற பனாரசி பட்டுப் புடவையை அணிந்திருந்தார். நேர்த்தியான பட்டுத் துணி இந்திய கைவினைஞர்களின் கலைத்திறன் மற்றும் கைவினைத்திறனை காட்டியுள்ளது.
இந்த சேலையில் அற்புதமான தங்கக் குடைநூல் (brocade) Embroidery கலைப்பணிகள் இடம்பெற்றுள்ளது. மேலும், இரட்டை தங்க பார்டர்களும் இந்த சேலைக்கு கூடுதல் பெருமையையும், அழகையும் சேர்த்துள்ளன. முன்புறத்தில் நேர்த்தியான மடிப்புகள் இருந்தன. மேலும், அவரின் அழகை அழகான தங்க ஆபரணங்களுடன் முழுமையாக்கியுள்ளார். ஒரு பிரம்மாண்ட நெக்லஸ், அதற்கேற்ற காதணிகள், பாரம்பரிய மோதிரங்கள் மற்றும் அடுக்கடுக்கான கடாஸ் (Kadhas) அணிந்துள்ளார். கவர்ச்சிக்காக, அவர் தைரியமான புருவங்கள், பெரிய கண் இமைகள், கூர்மையான கருப்பு ஐலைனர், ப்ளஷ் சாயல், ஒளிரும் ஹைலைட்டர் மற்றும் பவள இளஞ்சிவப்பு லிப்ஸ்டிக் ஆகியவற்றை தேர்ந்தெடுத்துள்ளார்.
மேலும், அந்த வீடியோவில் பேசியுள்ள நீதா அம்பானி, "செப்டம்பர் 12 முதல் 14ஆம் தேதி வரை நியூயார்க்கில் உள்ள லிங்கன் மையத்தில் NMACC இந்தியா வார இறுதி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் நாடகம், ஃபேஷன் ஷோ மற்றும் உலகளாவிய கலாச்சார பரிமாற்றம் இடம்பெறவுள்ளது. NMACC-ஐ நியூயார்க்கிற்குக் கொண்டுவருவது வெறும் ஒரு வார இறுதி நிகழ்ச்சிக்காக மட்டுமல்ல. இது இந்திய கலாச்சாரக் குரலை உலகம் முழுவதும் பரப்புவதும், இந்தியாவின் மிகச் சிறந்ததை உலகிற்கு எடுத்துச் செல்வதற்கும் தான்.
இந்தியாவின் கலை, கைவினைப் பொருட்கள், நடனம், இசை, ஃபேஷன் மற்றும் உணவுகள் NMACC இல், உலகின் சிறந்ததை இந்தியாவுக்கு காண்பிப்பதும், இந்தியாவின் சிறந்ததை உலகம் முழுவதும் கொண்டு சேர்ப்பது தான் எங்களின் தொலைநோக்குப் பார்வையாக இருந்து வருகிறது. இந்தியாவின் வளமான மரபுகள் மற்றும் பாரம்பரியத்தை நியூயார்க் நகரில் உள்ள அனைவருடனும் பகிர்ந்து கொள்ள நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications