முகேஷ் அம்பானியின் மனைவியும் தொழிலதிபருமான நீதா அம்பானி, தற்போது பல பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களுக்கு உரிமையாளராகவும், ஆசியாவிலேயே பணக்கார குடும்பத்தின் தலைவியாக உள்ளார்.
1985 ஆம் ஆண்டு இந்திய தொழிற்துறையை தலைகீழாக மாற்றிய திருபாய் அம்பானி-யின் மூத்த மகனான முகேஷ் அம்பானி உடன் 22 வயதில் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு நீதா-வின் நிலை என்ன..? அவருடைய குடும்பம் எப்படிப்பட்டது..?
நீதா அம்பானி இப்போது ஒரு வெற்றிகரமான தொழிலதிபர் மற்றும் பல்வேறு சமுக நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அவர் தனது சொந்த பெயரில் பல நிறுவனங்களை திறந்துள்ளார், இதில் மிக சமீபத்திய நீதா முகேஷ் அம்பானி கலாச்சார மையம் (NMACC) அடங்கும். இருப்பினும், முகேஷ் அம்பானி-யுடன் திருமணத்திற்கு முன்பு அவர் மிகவும் எளிமையான, நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்தவர்.

திருமணத்திற்குப் பிறகு தனது கணவரின் பெயரை சேர்பதற்கு முன்பு அவருடைய பெயர் நீதா தலால். முகேஷ் அம்பானி - நீதா அம்பானி காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர், முகேஷ் அம்பானி தனது காதலை சொன்ன விதமே வேற லெவல் என்று தான் சொல்ல வேண்டும்.
மும்பையின் முக்கியமான சாலையில் முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி காரில் சென்றுக்கொண்டு இருந்த போது, முகேஷ் அம்பானி சிக்னலில் நிறுத்திவிட்டு தான் காதலிப்பதாகவும், திருமணம் செய்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார். இதற்கு பதில் அளிக்காமல் மௌனமாக இருந்த நீதாவுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் நீ பதில் கொடுக்கும் வரையில் கார் இந்த சிக்னல்-ஐ விட்டு நகராது என தெரிவித்துள்ளார் முகேஷ் அம்பானி. டிராபிக் ஜம் ஆன உடன் நீதா அம்பானி சிரித்துக்கொண்டே ஒப்புக்கொண்டாராம், இதை நீதா ஒரு இண்டர்வியூவில் தெரிவித்தார்.
நீதா தலால் தனது 22 வயதில் முகேஷ் அம்பானியை திருமணம் செய்து கொண்டார், ஆனால் அவரது புதிய ஆடம்பரமான வாழ்க்கைக்குள் முறையை மாற்றுவதற்கு முன்பு, ஆசியாவின் பெரும் கோடீஸ்வரரின் மனைவி நடுத்தர குடும்பத்தில் ஒரு எளிமையான வாழ்க்கையை தான் வாழ்ந்துக் கொண்டு இருந்தார்.
நீதா தலால் ஒரு நடுத்தர குஜராத்தி குடும்பத்தைச் சேர்ந்தவர், நீதா தலால்-க்கு ஒரு சகோதரியும் உள்ளனர். நீதா அம்பானி ஒரு பரதநாட்டிய நடனக் கலைஞர் ஆவார். 6 வயதில் இருந்தே பரதநாட்டியத்தை கற்கத் தொடங்கினார் நீதா.
பல ஆண்டுகள் பயிற்சி பெற்று ஒரு ப்ரொபஷனல் நடனக் கலைஞராக வாழ்க்கையைத் தொடங்கினார் நீதா அம்பானி. முகேஷ் அம்பானியைச் சந்தித்தபோது நீதா அம்பானி பள்ளி ஆசிரியராக இருந்தார், 1985 இல் திருமணத்திற்குப் பிறகு பல ஆண்டுகள் தொடர்ந்து பள்ளியில் குழந்தைகளுக்கு கற்பித்து வந்தார்.
நீதா அம்பானியின் பெற்றோர் பெயர் ரவீந்திரபாய் தலால் மற்றும் பூர்ணிமா தலால், நீதா அம்பானியின் சகோதரி பெயர் மம்தா தலால். இவரும் பள்ளி ஆசிரியை ஆவார். ரவீந்திரபாய் தலால் குடும்பம் பொருளாதாரத்தில் நடுத்தர வர்க்கத்தை சார்ந்து இருந்தாலும், அவர் அப்போதை பில்லியனர் குமார் மங்கலம் பிர்லா தலைமையிலான ஆதித்ய பிர்லா குழுமத்தில் மூத்த நிர்வாகியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications