முகேஷ் அம்பானி-யின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் வால்ட் டிஸ்னி இணைப்பு தொடர்பான இறுதி முடிவுகள் குறித்துப் பேச்சுவார்த்தை முக்கிய கட்டத்தை நெருங்கியிருக்கும் வேளையில், இணைக்கப்பட்ட நிறுவனத்தில் நீதா அம்பானிக்கு முக்கிய பதவி அளிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
இந்திய தொழிலதிபர் மற்றும் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி-யின் மனைவி நீதா அம்பானி-யை, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் வால்ட் டிஸ்னி ஆகிய நிறுவனங்கள் தங்களது இந்திய ஊடகச் சொத்துகளை இணைத்த பின்பு, இந்த இணைக்கப்பட்ட நிறுவனத்தின் நிர்வாக குழு தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

அம்பானி குடும்பத்தால் கட்டுப்படுத்தப்படும் ரிலையன்ஸ் நிறுவனமும், டிஸ்னி நிறுவனமும் பல மாதங்களாகச் செயல்படுத்தி வரும், இந்திய ஊடக இணைப்பு ஒப்பந்தத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டு வர இருப்பதாகவும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு புதன்கிழமை இரவு வெளியாகலாம் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ரிலையன்ஸ் நல திட்ட பணிகளில் அதிக கவனம் செலுத்துவதற்காக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வாரியத்திலிருந்து நீதா அம்பானி விலகிய சில மாதங்களிலேயே இவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் வால்ட் டிஸ்னி இணைப்பு நிறுவனத்தின் வாரியத் தலைவராக நியமிக்கப்படுவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது அவர் ரிலையன்ஸ் ஃபவுண்டேஷனின் நிறுவனர் மற்றும் தலைவராக உள்ளார்.
நீதா அம்பானி பாலிவுட் நட்சத்திரங்களுடன் நெருங்கிப் பழகக்கூடியவர், கலை, கலாச்சாரம், இசை மற்றும் நாடகத்திற்கான முக்கிய தளமாக மாறியுள்ள மும்பையில் உள்ள நீதா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தின் நிறுவனர் ஆவார். மும்பை இந்தியன்ஸ் அணியில் தலைவர் என பொழுதுபோக்கு துறையுடன் நெருங்கி பணியாற்றக்கூடியவர்.
இந்த இணைக்கப்பட்ட நிறுவனத்தில் ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னி நிறுவனங்கள் தலா ஒரு ஸ்ட்ரீமிங் சேவையையும், 120 தொலைக்காட்சி சேனல்களையும் கொண்டிருக்கும். இந்த இணைப்பு ஒப்பந்தம், இந்தியாவின் ₹28 பில்லியன் மதிப்புள்ள ஊடக மற்றும் பொழுதுபோக்கு சந்தையில் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் ஆதிக்கத்தை அதிகரிக்கும்.
மேலும் இந்த இணைப்பு நிறுவனத்தில் ரிலையன்ஸ் 51%-54% பங்குகளை வைத்திருக்க வாய்ப்புள்ளது என்றும், இந்த ஒப்பந்தம் டிஸ்னியின் இந்திய செயல்பாடுகளை வெறும் $3.5 பில்லியனாக மதிப்பிடும் என்றும் கணிக்கப்படுகிறது.
ஜேம்ஸ் மர்டாக் மற்றும் டிஸ்னியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி உதய் ஷங்கர் ஆகியோரின் கூட்டு முயற்சியான போதி ட்ரீ, இந்த புதிய இணைப்பு நிறுவனத்தில் சுமார் 9% பங்குகளை பெற உள்ளது. டிஸ்னி சுமார் 40% பங்குகளை வைத்திருக்கும்.
இந்தியாவில் டிஸ்னியின் டிவி மற்றும் ஸ்ட்ரீமிங் வணிகம் பல ஆண்டுகளாக போராடி வருகிறது, கிரிக்கெட் ஸ்ட்ரீமிங்கில் அம்பானியின் தளத்துடன் கடுமையான போட்டிக்கு மத்தியில் அதன் டிஜிட்டல் தளம் பயனர்களின் வெளியேற்றத்தை எதிர்கொள்கிறது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் 46வது வருடாந்திர கூட்டத்தில் பேசிய முகேஷ் அம்பானி நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாக குழு கூட்டத்தில் முக்கிய மாற்றத்தை அறிவித்தார், இதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக குழுவில் நீதா அம்பானி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications