நீதா அம்பானி மற்றும் முகேஷ் அம்பானி ஆகியோர் தங்களது இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு திருமணத்திற்கு முந்தைய மூன்று நாள் பிரமாண்டமான விருந்து நிகழ்ச்சியை நடத்தினர்.
பிரபல தொழிலதிபர் வீரென் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்டுக்கும் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் இந்த ஆண்டு ஜூலை மாதம் 12 ஆம் தேதியன்று வெகு விமரிசையாகத் திருமணம் நடைபெற உள்ளது.

திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகளுக்கு மட்டும் முகேஷ் அம்பானி ரூ.1260 கோடியை செலவழித்துள்ளார். திருமண முன்வைபோக நிகழ்ச்சிகளுக்கே இவ்வளவு செலவு செய்தால் திருமணத்துக்கு எவ்வளவு செலவை முகேஷ் அம்பானி செலவழிப்பார் என எல்லாரும் வியக்கின்றனர்.
தனது இளைய மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் பற்றி உலகமே வியந்து பேச வேண்டும் என்பதே முகேஷ் அம்பானி, நீதா அம்பானியின் விருப்பமாகும்.

இந்தூரில் இருந்து அழைத்து வரப்பட்ட 25 சமையல் கலைஞர்களை வைத்து 2500க்கும் மேற்பட்ட உணவுப் பதார்த்தங்கள் தயாரிக்கப்பட்டு விருந்தினர்களுக்கு பரிமாறப்பட்டது. உணவுக்காக மட்டும் ரூ.200 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி அணிந்திருந்த ஒரு மோதிரம் பற்றி இப்போது பரபரப்பாகப் பேசப்படுகிறது.
நீதா அம்பானி விலை உயர்ந்த ஆடைகள் மற்றும் ஆடம்பரமா நகைகளின் கலெக்ஷனுக்காக மிகவும் பிரபலமானவர்.
ஆனந்த் - ராதிகா திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டத்தின் மூன்றாவது நாளில் அவர் அணிந்த பெரிய மரகத பச்சை நெக்லஸ் விருந்தினர்களை வெகுவாகக் கவர்ந்தது.

பிரபல ஆடை டிசைனர் மணீஷ் மல்ஹோத்ரா வடிவமைத்த காஞ்சிபுரம் புடவையுடன் அந்த நெக்லஸ் நீதா அம்பானிக்கு மிகப் பொருத்தமாக இருந்தது.
நீதா அம்பானி அணிந்திருந்த அந்த மரகத பச்சை நெக்லஸ் மதிப்பு ரூ.400 முதல் 500 கோடி ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
அத்துடன் நீதா அம்பானியின் விரலில் இருந்த ஒரு பெரிய வைர மோதிரத்தை பலர் கவனிக்கத் தவறிவிட்டனர்.

இந்த மோதிரம் சொர்க்கத்தின் கண்ணாடி என்று அழைக்கப்படுகிறது. இது முகலாயர் காலத்தைச் சேர்ந்தது. அதி அற்புதமான அந்த பெரிய வைர மோதிரத்தின் விலை ஏறத்தாழ ரூ.53 கோடி. இதன் எடை 52.58 கேரட். NMACC தொடக்க விழாவிலும் இதே மோதிரத்தை நீதா அம்பானி அணிந்திருந்தார்.

ஆனால் இந்த நிகழ்ச்சியில் பெரிய மரகத நெக்லஸையும், முகலாயக் காலத்து பெரிய வைர மோதிரத்தையும் நீதா அம்பானி அணிந்திருந்தது எல்லாரையும் கவர்ந்திழுத்தது.
Story Written By: I.Jayachandran


Click it and Unblock the Notifications