புத்தம் புதிய ரோல்ஸ் ராய்ஸ் ஃபான்டம் காரில் மருமகள் ராதிகா மெர்ச்சன்டுடன் வலம் வந்த நீதா அம்பானி

ரிலையன்ஸ் பவுண்டேஷன் தலைவரும் நிறுவனருமான நீதா அம்பானி மும்பை கலினா விமான நிலையத்தில் இருந்து புத்தம் புதிய ரோல்ஸ் ராய்ஸ் பான்டம் காரில் புறப்பட்டுச் சென்றுள்ளார். அவருடன் இளைய மருமகள் ராதிகா மெர்ச்சன்டும் உடன் இருந்துள்ளார்.

நீதா அம்பானி அண்மையில் ஒரு கஸ்டமைஸ்டு ரோல்ஸ் ராய்ஸ் பான்டம் காரை வாங்கினார். அதன் மதிப்பு ரூ.12 கோடி ஆகும். இது அவர் வைத்திருக்கும் இரண்டாவது ரோல்ஸ் ராய்ஸ் கார் ஆகும். அவரது கணவர் முகேஷ் அம்பானி, நீதா அம்பானிக்கு கடந்த ஆண்டு தீபாவளியன்று ஒரு புதிய ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை பரிசாக வழங்கினார்.

புத்தம் புதிய ரோல்ஸ் ராய்ஸ் ஃபான்டம் காரில் மருமகள் ராதிகா மெர்ச்சன்டுடன் வலம் வந்த நீதா அம்பானி

இந்த பர்சனலைஸ்டு லிமோசினின் மேல் பகுதி வெல்வெட் ஆர்க்கிட், ரோஸ் குவார்ட்ஸ் லோயர் பாடி, கோல்டு எஸ்ஓஇ, டின்னர் பிளேட் வீல்ஸ் கொண்டுள்ளது. தலை சாய்க்கும் பகுதியில் நீதா அம்பானி முகேஷ் எனப் பொறிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதத்தில் குஜராத்தின் ஜாம்நாகரில் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமண முன்வைபோகத்தை அம்பானி குடும்பத்தினர் நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் இருந்து முக்கியப் பிரபலங்கள் வந்து கலந்து கொண்டனர்.

கடந்த மாதம் 29 வயது நிறைவடைந்த ஆனந்த் அம்பானி ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் காரில் துபாயில் உள்ள ஷாப்பிங் மாலுக்கு வந்துள்ளார். தனது வருங்கால மனைவி ராதிகா மெர்ச்சன்ட்டுடன் சென்றுள்ளார். பிறந்த நாள் பர்சேஸுக்காக மேலும் சில மால்களுக்கு இருவரும் சென்றுள்ளனர்.

நீதா அம்பானி இப்போது வாங்கியுள்ள ரோல்ஸ் ராய்ஸ் பான்டம் காரில் நீடிக்கப்பட்ட வீல்பேஸ், 6.75 லிட்டர் வி12 டிவின் டர்போசார்ஜ்டு இன்ஜின் கொண்டுள்ளது. ரியர் வீலுக்கு ஆட்டோமேடிக் டிரான்மிஷன் உள்ளது. உள்புறம் இடபிள்யூ கேபின், இரண்டு வரிசை இருக்கையுடன் தாராளமான இடவசதியும் கொண்டுள்ளது.

ஐகானிக் ஸ்டார் ஹெட்லைனர் மற்றும் ஆடம்பரமான பொருட்களால் இந்தக் கார் உள்புறத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. விதவிதமான சொகுசு கார்களை வாங்கி அடுக்கும் பழக்கம் அம்பானி குடும்பத்தில் உள்ள அனைவருக்குமே உள்ளது. அதிலும் நீதா அம்பானி பல வகையான கார்களை வாங்கி தனது கேரேஜில் கலெக்ஷனாக வைத்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+