இந்தியாவின் பெரும் பணக்காரரின் மனைவியும், பிரபல மும்பை இந்தியன்ஸ் அணியின் இணை தலைவருமான நீதா அம்பானி-யின் ஆடம்பர வாழ்க்கை குறித்து எவ்வளவு பேசினாலும் அடங்காது என்பதற்கு ஏற்ற இவருடை 40 லட்சம் ரூபாய் மதிப்புடைய புடவை தற்போது திடிரென இணையத்தில் டிரெண்டாகியுள்ளது.
எப்படி பழைய கால விஷயங்கள் இப்போது டிரெண்டாகிறதோ, அதேபோல் சில பல வருடங்கள் முன்பு நடந்த ஒரு விஷயம் இணையத்தில் மீண்டும் டிரெண்டாகியுள்ளது. இதில் முக்கியமானதாக நீதா அம்பானியின் புடவை விஷயமும் வந்துள்ளது.

நீதா ஆம்பானி பயன்படுத்தும் டீ கப் முதல் அவர் பயன்படுத்தும் நகைகள், கார், உடை என அனைத்திலும் ஆடம்பரத்தின் உச்சம் இருக்கும். ஒவ்வொரு முக்கிய விழாவுக்கு வரும் போது அவருக்கு மேக்அப் போட பாலிவுட் பிரபல மேக்அப் ஆர்ட்ஸ்ட் தான் வருகிறாராம்.
இந்த நிலையில் அவருடைய ஆடைகள் குறித்த கேட்கவா வேண்டும். இன்த நிலையில் நீதா ஆம்பானி வீட்டு திருமணத்தில் ஒரு முறை இளஞ்சிவப்பு நிற புடவையை அணிந்தார், இது உலகளவில் மிகவும் விலையுயர்ந்த புடவையாக கருதப்படுகிறது.
அது 2015, முன்னாள் ராஜ்யசபா எம்பி பரிமல் நத்வானியின் மகனின் திருமணத்தில், கின்னஸ் உலக புத்தகத்தில் மிகவும் விலையுயர்ந்த புடவை சாதனையைப் படைத்த அழகான புடவையை நீதா அம்பானி அணிந்திருந்தார். நீதா அம்பானி-யின் இந்த விலை உயர்ந்த சேலையை வடிவமைத்தவர் யார் என்பது தான் தற்போதைய முக்கியமான விஷயமாக உள்ளது.
இந்த 40 லட்சம் ரூபாய் மதிப்புடைய நீதா அம்பானியின் ஆடம்பரமான சேலையை வடிவமைத்தவர் சென்னை சில்க்ஸ் இயக்குனர் சிவலிங்கம் என தெரிகிறது. இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த சேலை கைகளால் எம்பிராய்டரி செய்யப்பட்ட சேலை உண்மையான முத்துக்கள், மரகதங்கள், மாணிக்கங்கள், புக்ராஜ் மற்றும் பிற விலையுயர்ந்த அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஜவுளி சாம்ராஜ்யமான தி சென்னை சில்க்ஸ் (TCS), பல தலைமுறைகளாக ஆடை தயாரிப்பிலும் விற்பனையிலும் உள்ளது. தமிழ்நாட்டின் முன்னணி டெக்ஸ்டைல் நிறுவனங்களில் ஒன்றாக தி சென்னை சில்க்ஸ் திகழ்கிறது. சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர் போன்ற பல நகரங்களில் தி சென்னை சில்க்ஸ் பரந்து விரிந்துள்ளது.
40 லட்சம் ரூபாய் மதிப்புடைய நீதா அம்பானியின் ஆடம்பரமான சேலையை சுமார் காஞ்சிபுரத்தை சேர்ந்த 35 கலைஞர்கள் ஓன்றிணைந்து தயாரித்துள்ளனர். இந்த சேலையின் எடை மட்டுமே 8 கிலோ, மேலும் இந்த சேலைக்கு The Vivah Pattu Saree என்ற பெயரும் வைக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications