மும்பை: சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினராக நீதா அம்பானி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் முகேஷ் அம்பானியின் மனைவியும் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனருமான நீதா அம்பானி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் இந்திய உறுப்பினராக தேர்வாகியுள்ளார்.
பாரிஸில் நடைபெறக்கூடிய உலகளாவிய ஒலிம்பிக் அமைப்பின் 142 வது அமர்வில் இந்தியாவிலிருந்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினராக ஒரு மனதாக நீதா அம்பானி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இரண்டாவது முறையாக இவருக்கு இந்த பதவி கிடைத்துள்ளது. முன்னதாக 2016 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் போட்டியின் போது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தனிநபர் உறுப்பினராக அவர் முதன் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தற்போது மீண்டும் அவருக்கு ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது தொடர்பாக பேசியுள்ள நீதா அம்பானி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டதில் மிகவும் பெருமைப்படுவதாக தெரிவித்துள்ளார். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியில் இருக்கும் நண்பர்கள் அனைவரும் தன் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்ததற்கு நன்றி என கூறியுள்ளார்.
சர்வதேச ஒலிம்பிக் அமைப்பில் இணைந்த முதல் இந்திய பெண் என்ற முறையில் நீதா அம்பானி 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் முதல் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அமர்வை மும்பையில் நடத்தியதில் முக்கிய பங்கு வகித்தார்.
ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு இருப்பது தனிப்பட்ட முறையில் தனக்கு பெருமைப்படக்கூடிய விஷயமாக இருந்தாலும், சர்வதேச விளையாட்டு துறையில் இந்தியாவின் தாக்கம் வளர்ந்து வருகிறது என்பதை இது காட்டுகிறது என நீதா அம்பானி தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் உலகெங்கிலும் ஒலிம்பிக்கை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும் அனைத்து இந்தியர்களும் பெருமைப்பட வேண்டிய தருணம் என அவர் கூறியுள்ளார். ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனரும் தலைவருமான நீதா அம்பானி அறக்கட்டளை சார்பாக பல்வேறு விளையாட்டு சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.
ரிலையன்ஸ் அறக்கட்டளை மூலம் கிட்டதட்ட 22.9 மில்லியன் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் உதவிகளை செய்து வருகிறார.
மேலும் இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்புடன் இணைந்து ரிலையன்ஸ் அறக்கட்டளையானது பாரிஸ் ஒலிம்பிக்கில் முதன்முறையாக இந்திய இல்லம் என்ற ஒன்றை திறக்க இருக்கிறது. அதாவது இந்திய வீரர்கள் தங்களுடைய வெற்றி கொண்டாட்டங்களையும் தங்களுடைய ஒலிம்பிக் பயணம் குறித்தும் இங்கே பகிர்ந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது. நாளை(ஜூலை 26) பாரிஸில் ஒலிம்பிக் போட்டி தொடங்கி ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
Story written by: Devika
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!



Click it and Unblock the Notifications