சில நாட்களுக்கு முன்பாக முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி வாராணசியில் உள்ள ஒரு ஸ்நாக்ஸ் கடைக்குச் சென்ற வீடியோ வைரலாகியுள்ளது.
அதில் சிலருடன் தனது கணவர் முகேஷுக்குப் பிடித்த பலகாரங்கள் பற்றி நீதா பேசிக் கொண்டிருக்கிறார். இதில் அவரது குடும்பத்தாருக்கு வீட்டில் செய்த பலகார வகைகள் தான் பிடிக்கும் எனத் தெரிய வந்தது.

முகேஷ் அம்பானி சைவம் என்பதால் அவர் உணவு விஷயத்தில் மிகவும் கட்டுப்பாடோடு இருப்பார். ஆனால் வாரம் ஒருமுறை வெளியில் சென்று உணவகங்களில் சாப்பிடுவார். அரிசி மாவில் செய்யப்பட்டு மேலாக பனீர் தூவப்பட்ட குஜராத்தி உணவான பான்கி முகேஷ் அம்பானிக்கு மிகவும் பிடித்தமான உணவு ஐட்டமாகும் என்று நீதா கூறினார்.
நீதாவின் இந்த விடியோவை பார்த்து நெட்டிசன்கள் முகேஷ் ஆரோக்கியமான உணவை தேர்வு செய்துள்ளார் எனப் பாராட்டுகின்றனர். முகேஷ் அம்பானிக்கு தென்னிந்திய உணவுகளான இட்லி, தோசையும் மிகவும் பிடிக்குமாம். மும்பையில் அவர் கல்லூரியில் படிக்கும் காலத்தில் குறிப்பிட்ட உணவகத்துக்கு தினமும் மாலையில் சென்று அவர் தென்னிந்திய உணவு வகைகளை சாப்பிட்டு வருவாராம்.
பான்கியுடன் வெந்தயக் கீரை சேர்க்கப்பட்டு மஞ்சள் தூள் கலந்து மிகவும் சுவையாக இருக்கும். இது வாழை இலையில் மூடி சமைக்கப்பட்டும், காரச் சட்னி, ஊறுகாய் சேர்த்து சாப்பிட்டால் அலாதியான சுவையாக இருக்கும்.
கேரள உணவுகளைப் போல பான்கி வாழை இலையில் சுற்றி சமைப்பதால் இயற்கையான வாசம் நிறைந்து மணமாக இருக்கும். வாழை இலையில் வைத்து சமைப்பதால் ஆன்டிஆக்ஸிடென்ட் நிறைந்திருக்கும்.
அரிசி மாவில் தயாரிக்கப்படுவதால் பான்கியில் நிறைய கார்போஹைட்ரேட் சத்து நிறைந்து இருக்கும். அத்துடன் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் சேர்ந்திருக்கும். வெந்தயத்தில் இருந்து இந்த சத்துகள் வந்து சேரும். சிறிதளவு வெண்ணெய் அல்லது நெய்யில் இதை சமைப்பதால் குறைந்தளவு கொழுப்பே இருக்கும்.
குறைந்த கலோரி, குறைந்த கொழுப்பு, குளூட்டன் இல்லாத உணவு என்பதால் பான்கியை உடல் எடை குறைப்பு உணவு முறையில் சேர்க்கலாம். இதை சாப்பிட்டால் நீண்ட நேரம் பசியெடுக்காது.
Story written by: Jayachandran


Click it and Unblock the Notifications