நீதா அம்பானி-யின் திருபாய் அம்பானி இண்டர்நேஷனல் ஸ்கூல் ஃபீஸ் எவ்வளவு தெரியுமா? மினி பாலிவுட்..!

2003 ஆம் ஆண்டில் திருபாய் அம்பானி இண்டர்நேஷனல் ஸ்கூலை முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி தொடங்கினார்.
அம்பானி குடும்பத்தாருக்கு கல்வி மீதான பற்றை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

மும்பையில் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் சதுர அடி பரப்பில் 7 அடுக்கு மாடியைக் கொண்டு அமைந்துள்ளது இந்தப் பள்ளி. இதில் உள்ள நவீன வசதிகளும், சிறப்பான பயிற்றுவிப்பு முறைகளும் இந்தப் பள்ளியை பிரபலமாக்கியது.

நீதா அம்பானி-யின் திருபாய் அம்பானி இண்டர்நேஷனல் ஸ்கூல் ஃபீஸ் எவ்வளவு தெரியுமா? மினி பாலிவுட்..!

சமீபத்தில் இப்பள்ளியில் நடந்த ஆண்டு விழா புகைப்படம் வெளியான நிலையில், இந்தியாவின் பெரும்பாலான மக்களின் முக்கிய கேள்வியாக இருந்து "இந்த பள்ளியின் கட்டணம் என்ன..?" என்பது தான்.

முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி சேர்பர்சனாகவும், நேரடியாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் ரிலையன்ஸ் பவுண்டேஷன் நிர்வாகம் செய்யும் திருபாய் அம்பானி இண்டர்நேஷனல் ஸ்கூலின் வருடாந்திர கட்டணம் ரூ.1,70,000 முதல் ரூ.4,48,000 வரை வருடாந்திரக் கல்விக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

சர்வதேச அளவில் மிகச் சிறந்த கல்வி நிறுவனமாக திருபாய் அம்பானி இண்டர்நேஷனல் ஸ்கூல் விளங்குகிறது. இந்தப் பள்ளியில் இந்தியாவின் பெரும்பாலான பிரபலங்களின் குழந்தைகள் படித்து வருகின்றனர்.

ஜான்வி கபூர்: பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர், நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் இந்தப் பள்ளியில் தான் படித்தார். பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் கலிபோர்னியாவின் பிரபலமான லீ ஸ்ட்ராஸ்பெர்க் தியேட்டர் பிலிம் இன்ஸ்டிட்டியூட்டில் நடிப்புத் திறனைக் கற்றார் ஜான்வி கபூர்.

குஷி கபூர்: ஜான்வி கபூரின் தங்கை குஷி கபூரும் திருபாய் அம்பானி இண்டர்நேஷனல் ஸ்கூலில் பள்ளிப் படிப்பை முடித்து விட்டு நியூயார்க் பிலிம் அகாடமியில் மேற்படிப்பை படித்தார்.

சாரா அலி கான்: சைப் அலி கான் மற்றும் அமிர்தா சிங்கின் மகளான சாரா அலி கான் திருபாய் அம்பானி இண்டர்நேஷனல் ஸ்கூலில்தான் படித்தார். பின்னர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் அரசியல் விஞ்ஞானப் பட்டப்படிப்பை முடித்தார். 2018-இல் கேதார்நாத் படத்தின் மூலம் பாலிவுட்டில் சாரா அலி கான் அறிமுகமானார்.

இப்ராஹிம் அலி கான்: சாரா அலி கானின் தம்பி இப்ராஹிம் அலி கானும் திருபாய் அம்பானி இண்டர்நேஷனல் ஸ்கூலில்தான் படித்தார். பள்ளிப்படிப்பு முடிந்ததும் இங்கிலாந்தில் உயர்கல்வியை முடித்தார். தற்போது கரண் ஜோஹர் இயக்கத்தில் ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி என்ற திரைப்படத்தில் இப்ராஹிம் அலி கான் நடித்து வருகிறார்.

சுஹானா கான்: பாலிவுட் மெகா ஸ்டார் ஷாரூக் கான் மற்றும் கௌரி கானின் மகள் சுஹானா கான். இவரும் திருபாய் அம்பானி இண்டர்நேஷனல் ஸ்கூலின் முன்னாள் மாணவி ஆவார். பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பேஷன் படிப்பை முடித்தார். நெட்பிளிக்ஸ் பிலிமின் ஜோயா அக்தர் தயாரித்த தி ஆர்ச்சீஸ் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் சுஹானா கான்.

ஆர்யன் கான்: ஷாரூக் கான் மற்றும் கௌரி கானின் மூத்த மகனான் ஆர்யன் கான் திருபாய் அம்பானி இண்டர்நேஷனல் ஸ்கூலில்தான் படித்தார். பின்னர் இங்கிலாந்தில் உள்ள செவன் ஓக்ஸ் ஸ்கூலில் படிப்பைத் தொடர்ந்தார். அதன்பின் தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சினிமாட்டிக் ஆர்ட்ஸ் படித்தார்.

சாரா டெண்டுல்கர்: இந்தியாவின் பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் அஞ்சலி டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர். திருபாய் அம்பானி இண்டர்நேஷனல் ஸ்கூலில் படித்த சாரா டெண்டுல்கர் லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் மருத்துவப் பட்டப்படிப்பை முடித்தார். இதனிடையே பாலிவுட்டில் நடிக்க இருப்பதாக சாரா டெண்டுல்கர் பற்றி கிளம்பிய வதந்திகளுக்கு அப்படியெல்லாம் என்று கூறி சச்சின் டெண்டுல்கர் விவகாரத்தை முடித்து வைத்தார்.

அர்ஜுன் டெண்டுல்கர்: தந்தை சச்சின் டெண்டுல்கர் வழியிலேயே அவரது மகன் அர்ஜுன் டெண்டுல்கரும் கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்துள்ளார். இவரும் திருபாய் அம்பானி இண்டர்நேஷனல் ஸ்கூலில் படித்தவர்.

2018 ஆம் ஆண்டில் அண்டர்-19 அணியிலும், 2021 ஆம் ஆண்டில் அண்டர்- 21 அணியிலும் இந்தியாவுக்காக முதன்முதலாக விளையாடினார் அர்ஜுன் டெண்டுல்கர். 2022 ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டார். அதன் மூலம் கிரிக்கெட் உலகில் அர்ஜுன் டெண்டுல்கர் உலா வருகிறார்.

நீஸா தேவ்கன்: பாலிவுட் ஸ்டார் ஜோடியான கஜோல், அஜய் தேவ்கன்னின் மகள் நீஸா தேவ்கன். தனது பள்ளிப்படிப்பை திருபாய் அம்பானி இண்டர்நேஷனல் ஸ்கூலில் முடித்துவிட்டு தற்போது சிங்கப்பூரின் புகழ்பெற்ற யுனைடெட் வேர்ல்டு காலேஜ் ஆப் சௌத் ஈஸ்ட் ஏஷியாவில் படித்து வருகிறார். தனது எழில் மிகுந்த தோற்றத்தினாலும் பேஷன் தேர்வுகளினாலும் சோசியல் மீடியாவில் நீஸா தேவ்கன் மிகவும் பிரபலமடைந்துள்ளார்.

அனன்யா பாண்டே: சங்கி பாண்டே மற்றும் பாவ்னா பாண்டேயின் மகள் அனன்யா பாண்டே. தர்மா புரொடக்ஷன்ஸின் கீழ் 2019 ஆம் ஆண்டு "ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர் 2" இல் அறிமுகமானதன் மூலம் நடிப்புத் துறையில் அடியெடுத்து வைத்தார்.

திருபாய் அம்பானி இன்டர்நேஷனல் ஸ்கூலில் படித்த அவர், யுஎஸ்சியில் உள்ள அன்னென்பெர்க் ஸ்கூல் ஃபார் கம்யூனிகேஷன் அண்டு ஜர்னலிசத்தில் மேல்படிப்புக்காக சேர்க்கப்பட்டார். இருப்பினும், அவரது திரைப்பட கமிட்மென்ட் காரணமாக, அனன்யா தனது சேர்க்கையை ஒத்திவைத்தார், இறுதியில் நடிப்பில் தனது வாழ்க்கையைத் தொடர அனன்யா பாண்டே முடிவெடுத்துள்ளார்.

ஐரா கான்: அமீர் கான் மற்றும் ரீனா தத்தாவின் மகளான ஐரா கான், அமெரிக்காவில் உயர்கல்வியைத் தொடங்குவதற்கு முன்பு திருபாய் அம்பானி இன்டர்நேஷனல் ஸ்கூலில் பள்ளிப் படிப்பை முடித்தார். ஐரா தனது பாலிவுட் அறிமுகத்தை விட, 2019 ஆம் ஆண்டில் யூரிபிடீஸின் "மெடியா" என்ற தியேட்டர் தயாரிப்பின் மூலம் கேமராவுக்குப் பின்னால் இயக்குநராக அறிமுகமாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

ஜூனி சோப்ரா: திரைப்பட தயாரிப்பாளர் விது வினோத் சோப்ரா மற்றும் பத்திரிகையாளர் அனுபமா சோப்ராவின் மகள் ஜூனி சோப்ரா, "தி ஹவுஸ் தட் ஸ்போக்" என்ற நாவலின் மூலம் புகழ்பெற்ற இந்திய எழுத்தாளர் ஆவார்.

திருபாய் அம்பானி இன்டர்நேஷனல் ஸ்கூலில் படித்த பிறகு, ஜூனி தற்போது ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கிரியேட்டிவ் ரைட்டிங் பற்றி படித்து வருகிறார். 2018 ஆம் ஆண்டில் இளம் எழுத்தாளர் விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆராதயா பச்சன்: அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சனின் அன்பு மகள் ஆராதயா பச்சன் ஏற்கனவே அடையாளம் காணக்கூடிய நபராகிவிட்டார். திருபாய் அம்பானி இண்டர்நேஷனல் ஸ்கூலில் படித்து வருகிறார். இந்த பிரபல குழந்தை தனது தாயுடன் பாப்பராசிகளால் அடிக்கடி படம் பிடிக்கப்பட்டு மீடியாக்களில் அடிபடுகிறது. 2007 ஆம் ஆண்டில் ஐஸ்வர்யாவும் அபிஷேக் பச்சனும் திருமணம் செய்து கொண்டனர். 2011 ஆம் ஆண்டில் மகள் ஆராத்யா பச்சன் பிறந்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+