இந்தியாவின் பெரும் வரத்தகம் பணக்கார குடும்பமாக இருக்கும் அம்பானி குடும்பம், ஆடம்பரத்தின் உச்சத்தில் இருப்பது மட்டும் அல்லாமல் பல கோடி மக்களின் சென்டர் ஆஃப் அட்டிராக்ஷனாக உள்ளனர்.
சமீபத்தில் அம்பானி குடும்பத்தின் நடந்த முக்கிய நிர்வாக மாற்றம் மூலம் பல கேள்விகள் எழுந்துள்ளது. இதற்கான பதவிகள் அடுத்த வரும் காலாண்டு முடிவுகள், வருடாந்திர கூட்டத்தில் வரும் என எதிபார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அம்பானி குடும்பம் பர்னல் லைஃப் குறித்து அவ்வப்போது வெளியாகும் தகவல்கள் மத்தியில் தற்போது நீதா அம்பானி-யின் சகோதரி குறித்த தகவல் டிரெண்டாகியுள்ளது.

பொதுவாகவே அம்பானி குடும்பங்களின் வாழ்க்கை ஆடம்பரத்தின் உச்சத்தில் தான் இருக்கும், ஆனால் நீதா அம்பானி-யின் சகோதரி முற்றிலும் மாறுபட்டவர். ஆடம்பரமான கொண்டாட்டங்கள், ஆடம்பரமான வாழ்க்கை முறை மற்றும் வெற்றிகரமான வணிக நிறுவனங்கள் என எதுவும் இல்லாமல் எளிமையாக வாழ்கிறார்.
முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி இந்தியாவின் முக்கியமான நன்கொடையாளர். அவர் ரிலையன்ஸ் அறக்கட்டளை, திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியின் தலைவர் மற்றும் நிறுவனர் ஆவார். ஆனால் நீதா அம்பானியின் சகோதரி பற்றி உங்களுக்கு தெரியுமா?
நீதா அம்பானியின் தங்கை மம்தா தலால்-ஐ நிறைய பேருக்கு தெரியாது. நீதா மற்றும் மம்தா குஜராத்தி குடும்பத்தில் பிறந்தவர்கள். நீதா அம்பானியை விட மம்தா நான்கு வயது இளையவர். நீதா அம்பானி முகேஷ் அம்பானி உடன் திருமணமான பின்பும் தங்கை மற்றும் அவரது தாயுடன் மிகவும் நெருங்கி பழகி வருகிறார்.
மம்தா தலால் ஒரு ஆசிரியை. திருபாய் அம்பானி சர்வதேசப் பள்ளியின் நிர்வாகக் குழுவில் உறுப்பினராக உள்ளார். அவரது சகோதரி நீதா அம்பானி அதே பள்ளியின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார்.

குஷி கபூர், ஜான்வி கபூர், சாரா அலி கான், இப்ராகிம் அலி கான், சுஹானா கான் போன்ற பல பிரபலங்களின் குழந்தைகள் திருபாய் அம்பானி பள்ளிகளில் படித்திருக்கிறார்கள். ஒருமுறை ஒரு நேர்காணலில், அவர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஷாருக்கானின் குழந்தைகளுக்கு பயிற்சி அளித்ததை கூறினார்.
இந்தியாவின் பிரபல ஆடை வடிவமைப்பாளர் மனிஷ் மல்ஹோத்ரா தயாரித்த சில முக்கியமான அடைகளை அணிந்து ராம்ப் வாக் செய்துள்ளார் மம்தா தலால். மம்தா தலால் மீடியா வெளிச்சத்தில் இருந்து விலகி இருக்க விரும்பினாலும், பொது நிகழ்ச்சிகள், அம்பானி வீட்டு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளும் போது பல புகைப்படங்களில் இடம்பெற்றுள்ளார்.


Click it and Unblock the Notifications