முகேஷ் அம்பானியின் மனைவி என்பதையும் தாண்டி தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் தான் முகேஷ் அம்பானியின் மனைவியான நிதா அம்பானி. இவர் ஒரு சிறந்த கல்வியாளர், தொண்டு நிறுவனர் மற்றும் தொழிலதிபர். இந்தப் பதிவில் 60 வயதை தாண்டிய நிதா அம்பானியின் 7 முக்கியமான முயற்சிகள் பற்றியும், அவற்றின் சமூக பங்களிப்பு குறித்தும் பார்ப்போம்.
ரிலையன்ஸ் அறக்கட்டளை: நிதா அம்பானி 2010-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவராக உள்ளார். அவரது தலைமையின் கீழ் 56.5 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு இந்த அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளை கிராமப்புற மாற்றம், சுகாதாரம், கல்வி, விளையாட்டு, பேரிடர் மேலாண்மை, கலை, கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. குறிப்பாக, COVID-19 தொற்றுநோயின் போது இந்தியாவிற்கு ஆதரவளிப்பதில் முக்கிய பங்கு வகித்தது.

மும்பை இந்தியன்ஸ்: மும்பை இந்தியன்ஸ் IPL அணியின் இணை உரிமையாளராக இருக்கும் நிதா அம்பானி இந்த அணியை மிகவும் வெற்றிகரமான பிராஞ்சைஸாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகித்துள்ளார். இந்த அணி பல சாம்பியன்ஷிப்களை வென்றுள்ளது. அவரது தலைமைத்துவம் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் டீமுக்கு ஊக்கமளித்து வருகிறது.
Her Circle: இந்தியா முழுவதும் உள்ள பெண்களை மேம்படுத்தவும், இணைக்கவும், ஊக்கப்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட டிஜிட்டல் தளமான "ஹெர் சர்க்கிளை" நிதா அம்பானி நிறுவியுள்ளார். இந்த தளத்தில் பெண்களை மையப்படுத்திய கண்டன்ட் ,நெட்வொர்க்கிங் ஆப்பர்சூனிட்டி போன்றவற்றை வழங்கி பெண்களின் வளர்ச்சிக்கு உதவி வருகிறார்.
ஜியோ வேர்ல்ட் சென்டர்: ஜியோ வேர்ல்ட் சென்டர் மற்றும் நிதா முகேஷ் அம்பானி கல்ச்சுரல் சென்டரை 18.5 ஏக்கர் பரப்பளவில் நிறுவியுள்ளார். இந்த மையம் கலாச்சாரம், கலை மற்றும் சமூக நிகழ்வுகளுக்கான மையமாக உள்ளது.
திருபாய் அம்பானி இன்டர்நேஷனல் ஸ்கூல்: 2003-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட திருபாய் அம்பானி இன்டர்நேஷனல் ஸ்கூலின் நிறுவனர் மற்றும் தலைவராக நிதா அம்பானி இருக்கிறார். இந்த பள்ளி சர்வதேச பள்ளிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஃபுட்பால் ஸ்போர்ட்ஸ் டெவெலப்மென்ட் லிமிடெட்: விளையாட்டின் மீதான ஈர்ப்பின் காரணமாக நிதா அம்பானி ஃபுட்பால் ஸ்போர்ட்ஸ் டெவெலப்மென்ட் லிமிடெட் (FSDL)-ஐ நிறுவினார். இதன் மூலம் புட்பால் விளையாட்டில் இந்தியாவில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி உள்ளார். மேலும் நாடு முழுவதும் உள்ள திறமையான கால்பந்து வீரர்களுக்கான சிறந்த இடமாக இது செயல்படுகிறது.
ஜாம்நகர் டவுன்ஷிப் ப்ராஜெக்ட் : 1997-ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் குழுமத்தின் சுத்திகரிப்பு ஆலையில் உள்ள ஊழியர்களுக்காக ஜாம்நகர் டவுன்ஷிப் திட்டத்தை தொடங்கினார். இதன் மூலம் 17,000-த்திற்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களுக்கு வீட்டு வசதி வழங்கப்பட்டது. அதோடு மரங்களால் சூழப்பட்ட வீதிகள் மற்றும் நிலையான வாழ்க்கையை வழங்குவதற்காகவும் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications