மும்பையில் நடந்த மனிஷ் மல்ஹோத்ராவின் பிரம்மாண்ட தீபாவளி விழாில், பல பிரபலங்களை கலந்துக்கொண்டனர். இந்த விழாவில், ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி, முகேஷ் அம்பானியின் மருமகள்களான ராதிகா மெர்ச்சண்ட் மற்றும் ஷ்லோகா மேத்தா ஆகியோருடன் கலந்து கொண்டார்.
இது வழக்கமாக அம்பானி குடும்பம் கலந்துக்கொள்ளும் விழாவாக இருந்தாலும், நீதா அம்பானி கொண்டு வந்த ஹேண்ட் பேக் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.

நீதா அம்பானி மட்டும் அல்லாமல் அம்பானி குடும்பத்தினர் வெளியில் வரும் போது அவருடைய கார், ஆடை, வாட்ச், உடை, நகைகள் எப்போதும் பேசுபொருளாக மாறும். உதாரணமாக அனந்த் அம்பானி திருமண விழாவுக்கு முன்பு பல வெளிநாட்டு விருந்தினர்களை குஜராத்தில் இருக்கும் பிரைவேட் விலங்கியல் பூங்காவை சுற்றி காண்பித்தார். அப்போது அனந்த் அம்பானி கட்டியிருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள வாட்ச் பெரும் பேசு பொருளாக மாறியது.
இந்த வாட்ச்-ஐ கண்டு வியந்து போன மெட்டா நிறுவன சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க், குஜராத் பயணத்திற்கு பின்பு மிகப்பெரிய வாட்ச் விரும்பியாகவும், வாட்ச் கலெக்டராகவும் மாறிவிட்டார். அந்த அளவுக்கு அம்பானி குடும்பத்தினர் லைப்ஸ்டைல் பொருட்கள் மீது ஆர்வம் காட்டி முதலீடு செய்து வருகின்றனர். இதன் வாயிலாகவே தற்போது நீதா அம்பானியின் ஹேண்ட் பேக் வந்துள்ளது.

இந்த தீபாவளி விழாவுக்கு நீதா அம்பானி, மனிஷ் மல்ஹோத்ரா வடிவமைத்த புடைவை மற்றும் பெரிய ஈமரால்ட் தோடு உடன் வந்திருந்தார். ஆனால் இவை அனைத்தையும் காட்டிலும் நீதா அம்பானி கையில் இருந்த அரிதான ஹெர்மெஸ் பிர்கின் பேக் தான் பலரின் கவனத்தை ஈர்த்தது. இந்த ஹேண்ட்பேக் உலகின் விலையுயர்ந்த பிர்கின் பேக் என்று கூறப்படுகிறது. அப்படி என்ன ஸ்பெஷல்..?

ஹெர்மெஸ் Sac Bijou பேக்
உலக அளவில் வெறும் மூன்று சாக் பிஜூ பிர்கின் பேக்குகள் மட்டுமே உள்ளன, ஒவ்வொன்றுக்கும் 2 மில்லியன் டாலர் விலை அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 17.73 கோடி ரூபாய். சோதிபீ என்ற விலையுயர்ந்த பொருட்கள் விற்பனை நிறுவனத்தின் தகவல்படி, இது உலகின் மிக விலையுயர்ந்த ஹெர்மெஸ் பிர்கின் பேக் ஆகும்.
இந்த பேக் 18 காரட் வெள்ளை தங்கத்தால் செய்யப்பட்டு, 3,025 வைரங்கள் பதிக்கப்பட்டு உள்ளது. இந்த வைரங்கள் மொத்தம் 111.09 காரட் எடை கொண்டது. இது வெறும் ஹேண்ட் மட்டுமல்ல அரிதான சொத்தாக கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications