டெல்லி: தலைநகர் டெல்லியில் தற்போது காற்று மாசு பிரச்சினை பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. டெல்லி மட்டுமின்றி சுற்றி இருக்கக்கூடிய மற்ற மாநிலங்களும் இந்த காற்று மாசு பிரச்சனையில் சிக்கித் தவிக்கின்றன.
டெல்லி மட்டுமின்றி இந்தியாவின் பெரு நகரங்களில் எல்லாம் கூடிய விரைவில் காற்று மாசு பிரச்சினை பெரிய பிரச்சினையாக உருவாகப் போகிறது என்பதை மறுப்பதற்கு இல்லை. இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு ஒரு முக்கியமான பரிந்துரையை ஸெரோதா (Zerodha) நிறுவனர் நிதின் காமத் வழங்கியுள்ளார்.

ஸெரோதாவின் இணை நிறுவனரான நிதின் காமத் காற்று மாசு மற்றும் தண்ணீர் மாசு பிரச்சனையை தீர்ப்பதற்கு குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் சொத்துக்களின் விலையை இது போன்ற சுற்றுச்சூழல் காரணிகளோடு இணைத்து நிர்ணயம் செய்ய வேண்டும் என பரிந்துரை செய்துள்ளார்.
தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிதின் காமத் பெரு நகரங்களில் உருவாக்கப்படும் கட்டமைப்புகளால் ஏற்படும் காற்று மற்றும் தண்ணீர் மாசு பிரச்சனைகளை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இந்தியாவில் காற்று மாசு பிரச்சனைகளால் ஏற்படும் இறப்புகள் தொடர்பான ஒரு செய்தியை குறிப்பிட்டு எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிதின் காமத் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் காற்றின் தரம் மற்றும் நீரின் தரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அந்த பகுதியில் இருக்கும் சொத்துக்களின் விலைகளை நிர்ணயிக்கும் போது அந்த சொத்தின் உரிமையாளர்கள் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதில் தீவிரமாக பங்கேற்பார்கள் என கூறியுள்ளார். இது மேற்கொண்டு நகர்ப்புறங்கள் மாசடைவதை தடுக்கும் என தெரிவித்துள்ளார்.
ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் இயற்கை ஆதாரங்கள் அடிப்படையில் அந்த பகுதியில் இருக்கும் சொத்துக்களின் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார். காற்று மாசு அதிகமாக இருந்தால் சொத்தின் மதிப்பு குறைந்துவிடும், அதுவே குறைவாக இருந்தால் சொத்தின் மதிப்பு உயரும் இதுவே அவர் கூற வரும் யோசனை.
இந்த அணுகுமுறை தனிப்பட்ட நபர்கள் அவர்களின் சொத்து என்பதை தாண்டி ஒரு ஒரு பகுதியை சேர்ந்த அனைவரும் இணைந்து ஒரு சமூக நோக்கத்திற்காக செயல்பட வைக்கும் என கூறியுள்ளார்.
உதாரணமாக ஜேபி நகர் பகுதியில் என்னுடைய குடியிருப்பு இருக்கிறது ,அந்தப் பகுதியின் காற்றின் தரத்தின் அடிப்படையில் தான் அதன் சொத்து மதிப்பு நிர்ணயம் செய்யப்பட போகிறது என்றால் நான் அந்த இடத்தில் மாசடையாமல் இருக்க என்ன செய்ய முடியுமோ அதை செய்வேன். ஜே பி நகர் முழுவதும் இருப்பவர்களும் செய்ய தொடங்குவார்கள் எனக் கூறியுள்ளார்.
டெல்லி மட்டுமல்ல மும்பை, பெங்களூரு, சென்னை, கொல்கத்தா போன்ற இந்தியாவின் பெரு நகரங்கள் எல்லாமே இந்த காற்று மாசு பிரச்சனையை பெருமளவில் எதிர்கொண்டிருக்கின்றன என குறிப்பிட்டுள்ள அவர் தேசிய அளவில் தீர்வு காணப்பட வேண்டிய ஒரு தீவிரமான பிரச்சனை இது என தெரிவித்துள்ளார்.
அவருடைய இந்த பதிவுக்கு சமூக வளத்தில் வலைதளத்தில் ஏராளமானவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது ஒரு புதுமையான யோசனை என்றும் இவ்வாறு செய்யும்போது சொத்தில் உரிமையாளர்கள் சுற்றுச்சூழலின் மீதும் தங்களுடைய கவனத்தை செலுத்துவார்கள் எனக் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications