இந்திய மாநிலங்கள் ஏற்றுமதியில் எந்த அளவுக்கு தயார்நிலையில் உள்ளது என்பதை அளவிடும் நிதி அயோக் ஏற்றுமதி தயார்நிலை குறியீடு (Export Preparedness Index - EPI) 2024 அறிக்கையை இன்று வெளியிட்டு உள்ளது.
போகி பொங்கல் பண்டியான ஜன.14 ஆம் தேதி புதன்கிழமை வெளியான இந்த அறிக்கையில் பெரிய மாநிலங்கள் பிரிவில் மகாராஷ்டிரா முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு, குஜராத், உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம் ஆகியவை டாப் ஐந்து இடங்களைப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த முறை மத்திய அரசு வெளியிட்ட EPI 2022 அறிக்கையில் தமிழ்நாடு முதல் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

2022 குறியீட்டில் தமிழ்நாடு முதலிடம், மகாராஷ்டிரா இரண்டாம் இடம், கர்நாடகம் மூன்றாம் இடம், குஜராத் நான்காம் இடம், ஹரியானா ஐந்தாம் இடத்தில் இருந்தன. ஆனால் 2024 பட்டியலை தயார் செய்யும் போது மத்திய அரசின் நிதி அயோக் ஆய்வு செய்யும் முறையை முழுமையாக மாற்றப்பட்டதால், 2022 உடன் ஒப்பீடு செய்ய முடியாது என்று நிதி அயோக் முன்கூட்டியே விளக்கம் கொடுத்துள்ளது.
இன்று வெளியான அறிக்கையில் 2022 முதல் 2024 நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில் ஒவ்வொரு மாநிலத்தின் ஏற்றுமதி செயல்திறன் மற்றும் எதிர்கால வாய்ப்புகளை பல்வேறு காரணிகள் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு இப்பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் ஏற்றுமதி அமைப்பை வலுப்படுத்துவதற்கு நிதி அயோக் அமைப்பு பெரிய & சிறிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், வடகிழக்கு மாநிலங்களாக பிரிக்கப்பட்டு, இதில் லீடர், சேலஞ்சர், ஆஸ்பயரர் என மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
மேலும் 2024ஆம் ஆண்டுக்கான பட்டியலில் ஆய்வு செய்யும் முறையை நிதி அயோக், டெலாய்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. 70 அளவுகோள்களை அடிப்படையாகக் கொண்டு நான்கு முக்கிய பிரிவில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
4 பிரிவு என்பது ஏற்றுமதி உள்கட்டமைப்பு, கொள்கை மற்றும் ஆளுமை, ஏற்றுமதி செயல்திறன், வணிக சூழல் ஆகியவாகும். இதில் முதல் மூன்று பிரிவுகளுக்கு தலா 20 சதவீதமும், வணிக சூழலுக்கு 40 சதவீதமும் எடை (Weightage) கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 13 துணைத் தூண்களும் உள்ளன.
இதோடு 2024 குறியீட்டில் 5 புதிய பரிமாணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவை மேக்ரோஎகானமி, மனித மூலதனம் (human capital), MSME சூழல், நிதி அணுகல் மற்றும் கடன், செலவின போட்டித்தன்மை ஆகியவை ஆய்வுகுள் உட்படுத்தப்பட்டு உள்ளது. 2022 மதிப்பீட்டு முறையில் இருந்து 19 அளவுகோள் நீக்கப்பட்டுள்ளன அல்லது இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது நிதி அயோக்.
பெரிய மாநிலங்கள் பட்டியலில் எப்படி மகாராஷ்டிரா, தமிழ்நாடு முன்னிலை வகித்ததோ, சிறிய மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பிரிவில் உத்தராகண்ட் முதலிடம் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர், நாகாலாந்து, தாத்ரா நகர் ஹவேலி மற்றும் டாமன் டையு, கோவா ஆகியவை உள்ளன.
இந்த அறிக்கை மூலம் மாநிலங்களுக்கு ஏற்றுமதி இலக்கு சார்ந்த நடவடிக்கைகள் எடுகவும், மத்திய-மாநில ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும், MSME-கள் உலகளாவிய வர்த்தகத்தில் பங்கேற்க உதவும்.
நிதி அயோக் CEO பிவிஆர்.சுப்ரமண்யம் இந்த அறிக்கையை டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் வெளியிட்டார். இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சிக்கு மாநிலங்களின் உள்கட்டமைப்பு, கொள்கை மற்றும் வணிக சூழல் முக்கியம் என்பதை இந்த EPI 2025 குறியீடு வலியுறுத்துகிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications