டெல்லி: இந்திய பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 6.5 சதவீதம் அளவுக்கு வளரும் என்று நிதி ஆயோக் உறுப்பினர் அர்விந்த் விர்மானி தெரிவித்து உள்ளார். அமெரிக்கா, ஐரோப்பிய வங்கிகளில் ஏற்பட்டு உள்ள பிரச்சனைகளின் தாக்கம் இந்தியாவில் இல்லை என்றும் அவர் கூறி உள்ளார்.
நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினராக இருப்பவர் அர்விந்த் விர்மானி. பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த இவர் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த பல்வேறு தகவல்கள் பகிர்ந்து இருக்கிறார். அவர் பேசுகையில், "அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நிலவி வரும் வங்கிகள் பிரச்சனை காரணமாக இந்திய நிதித்துறையில் பெரிய தாக்கங்கள் ஏற்பட்டதை நான் பார்க்கவில்லை.

கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களின் காரணமாக நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த எனது கணிப்பை 0.5 சதவீதமாக குறைத்துவிட்டேன். எனவே அது 6.5 சதவீதம். அது 0.5 சதவீதம் கூடுதல் அல்லது குறைவாக இருக்கலாம்." என்றார். இந்திய ரிசர்வ் வங்கியி பணவீக்க நெகிழ்வான பணவீக்கம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த இவர், "பணவீக்க இலக்கை கொண்டு இருக்கும் அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் போன்றே நாம் இருக்க வேண்டும். அதே நேரம் மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
எந்த நாடுகளும் சீனாவின் வர்த்தக கொள்கைகளை பின்பற்றுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. நியாமற்ற வர்த்தக கொள்கைகள் இல்லாமல் இருந்திருந்தால், சீன வளர்ச்சியில் மூன்றில் ஒரு பங்கு நடந்தே இருந்திருக்காது என்பதே எனது கணப்பு. இந்தியா சமச்சீரற்ற கொள்கையை பின்பற்றவில்லை. நியாயமற்ற வர்த்தக கொள்கையை பின்பற்றாமல் 6.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வளர்ச்சியை அடைய முடியும்.
இந்தியாவின் வளர்ச்சி விகிதம் என்பது 6.3 சதவீதம் மற்றும் 6.4 சதவீதத்திற்கு இடையில் உள்ளதாக அண்மையில் உலக வங்கியும் ஆசிய வளர்ச்சி வங்கியும் தெரிவித்தன. அதேபோல் IMF எனப்படும் சர்வதேச நிதியமும், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை குறைத்து இருக்கிறது. ஏற்கனவே வளர்ச்சி விகிதம் 6.1 சதவீதமாக இருக்கும் என்று கணித்து இருந்த நிலையில் தற்போது அதை 5.9 சதவீதமாக குறைத்து இருக்கிறது.
அதே நேரம் இந்தியா உலகில் வேகமாக வளரும் பொருளாதாரமாகவே உள்ளது. ரிசர்வ் வங்கி அதிக பணவீக்கம் காரணமாக கடந்த ஆண்டு மே மாதம் முதல், குறுகிய கால கடன் விகிதமான ரெப்போ விகிதத்தை 6 முறை மாற்றி இருக்கிறது. அந்த மாதத்தின் தொடக்கத்தில் அதை இடை நிறுத்தம் செய்தது. 2022 மே மாதத்திற்கான ஒட்டுமொத்த விகித உயர்வு 250 அடிப்படை புள்ளிகள்.


Click it and Unblock the Notifications