நாட்டில் நிலவி வரும் மந்த நிலையில் பொருளாதாரம் மிக வீழ்ச்சி கண்டு வருவது கவலையளிக்கும் விதமாகவே உள்ளது. ஒரு புறம் இந்த வீழ்ச்சியினால் அடுத்து வரும் காலாண்டுகளிலும் வீழ்ச்சி காணும், இதனால் பிரதமர் நரேந்திர மோடியின் $5 டிரில்லியன் பொருளாதார இலக்கை அடைவது கஷ்டம் தான் என்று பல நிபுணர்கள் கூறிவந்தனர்.
அதிலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு புள்ளியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, பொருளாதார வளர்ச்சி 5% தான் என்று கூறிய பின்னர், வீழ்ச்சி தெள்ளத் தெளிவாக உள்ளது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி மத்திய அரசின் $5 டிரில்லியன் இலக்கை அடைவது கஷ்டம் தான். ஆனால் சாத்தியமற்றது அல்ல என்று கூறியுள்ளார்.
இலக்கினை அடைவது கஷ்டம்
மத்திய பிரதேசம் இந்தூர் நிர்வாகத்தின் 29வது சர்வதேச மேலாண்மை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட நிதின் கட்கரி, அங்கு பேசுகையில், 2024ம் ஆண்டில் இந்தியாவைப் 5 டிரில்லியன் டாலர் இலக்கு கொண்ட பொருளாதாரத்தை அடைவது கஷ்டம் தான். ஆனால் சாத்தியமற்றது அல்ல என்றும் கூறியுள்ளார்.
எப்படி சாத்தியம்?
உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலமும் இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைத்து, இறக்குமதியை குறைப்பதன் மூலமும் இதனை அடைய முடியும் என்றும் இந்த சர்வதேச மேலாண்மை மாநாட்டில் கூறியுள்ளார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல தலைவர்கள் பேசியிருந்தாலும், இவ்வாறு நிதின் கட்கரி கூறியிருப்பது சற்று கவலையளிக்கும் விதமாகவே உள்ளது.
வலுவான அரசியல் தேவை
எந்தவொரு வலுவான இலக்கினையும் அடைய வலுவான அரசியல் விருப்பம் மிக முக்கியம். அதனை வெளிப்படுத்தும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி $5 டிரில்லியன் இலக்கை அடைய இலக்கு வைத்துள்ளார். இந்த இலக்கை அடைவது கடினம் தான். ஆனால் சாத்தியமற்றது அல்ல என்றும் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
செலவினங்கள் அதிகம்
நம் நாட்டில் ஏராளமான வளங்களும் உற்பத்தி திறனும் உள்ளன. இருந்தாலும் மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களை இறக்குமதி செய்வதிலும், நிலக்கரி, காப்பர், காகிதங்கள் உள்ளிட்ட பல பொருட்களை இறக்குமதி செய்ய கோடி கணக்கில் செலவு செய்கிறோம் என்றும் மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.
இறக்குமதியை அதிகரிக்க வேண்டும்
நாம் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இல்லை அடைய விரும்பினால் அதிகளவில் இறக்குமதி செய்வதை தவிர்த்து, அதற்கு பதிலாக உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும் கட்கரி தெரிவித்துள்ளார்.
என்ன சொல்கிறார் மந்த நிலை பற்றி?
தற்போதைய பொருளாதார மந்த நிலை பற்றி கட்கரி கூறுகையில், நாங்கள் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம். ஆனால் தற்போது வணிகத்தில் ஒரு சுழற்சி உள்ளது. மேலும் விவசாயத்திலும் சவாலான நிலை உள்ளது. மேலும் சர்வதேச பொருளாதாரத்தில் நிலவி வரும் மந்த நிலை காரணமாகவும், தேவை மந்தம் காரணமாகவும் மந்த நிலை நிலவி வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
சவால்களை சமாளிக்கும் இளைய தலைமுறையினர்
எனினும் நாட்டில் நிலவி வரும் மந்தநிலை ஒரு புறம் இருந்தாலும், நாட்டில் நிலவி வரும் சிரமங்களையும், சில சவால்களையும் வாய்ப்புகளாக மாற்றக் கூடிய இளைய தலைமுறையினரின் தலைவர்களில் இந்தியாவின் எதிர்காலத்தை நான் காண்கிறேன் என்றும் கட்கரி கூறியுள்ளார்.
சில துறைகளில் சரியான தலைமை இல்லை
நாட்டில் மூலதனம் மற்றும் வளங்கள், தொழில்நுட்பத்திற்கு பஞ்சமில்லை. ஆனால் நிச்சயமாக பல்வேறு துறைகளில் சரியான பார்வை மற்றும் தலைமை இல்லை என்றும் கட்கரி கூறியுள்ளார். மேலும் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சியை அதிகரிப்பதில் கவனம் செலுத்துதன் மூலம் ஏற்றுமதிகள் ஆதரிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
ஒவ்வொரு துறையும் உதவும்
இந்த முயற்சியானது ஐந்து கோடி புதிய வேலைகளை உருவாக்க உதவும் என்றும், இது 5 டிரில்லியன் பொருளாதார இலக்கை அடைய ஒவ்வொரு துறையும், பங்கு அளிக்க செய்ய முடியும் என்றும் கட்கரி கூறியுள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications