ஆட்டோமொபைல் துறையினரின் முக்கிய கோரிக்கையாக பல ஆண்டுகளாகவே, வாகன அழிப்பு திட்டம் இருந்து வந்தது. இது வாகன துறையினருக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக பட்ஜெட் 2021ல் அறிவிக்கப்பட்டது.
இது ஆட்டோமொபைல் துறையினரிடையே பெரும் வரவேற்பை பெற்றது எனலாம். இந்த நிலையில் வாகன விற்பனை மற்றும் உற்பத்தி நிறுவனங்கள், புதிய வாகன விற்பனையை ஊக்குவிக்க பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன.
இதற்கிடையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, வாகன விற்பனையை ஊக்குவிக்க ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பழைய வாகனங்களை கொடுத்து, புதிய வாகனங்கள் வாங்குபவர்களுக்கு 5% தள்ளுபடியை வழங்கலாம் என கூறியுள்ளார்.
வாகன ஸ்கிராப்பிங் திட்டம்
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தன்னார்வ வாகன அழிப்பு திட்டத்தின் படி, தனி நபர் வாகனங்களுக்கு 20 வருடங்கள் கழித்தும், வர்த்தக வாகனங்கள் 15 ஆண்டுகள் கழித்தும் ஸ்கிராப்பிங் செய்யும் திட்டம் கொண்டு வரப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. உண்மையில் இந்த திட்டம் அமலுக்கு வரும்போது, இது வாகனத்துறைக்கு பெரிய ஊக்கத்தினை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
வாகன தேவை அதிகரிக்கும்
அரசின் இந்த வாகன ஸ்கிராப்பிங் திட்டத்தினால் புதிய வாகனங்களின் தேவை அதிகரிக்கும். இதனால் புதிய வாகனங்கள் மேலான ஆர்வம் அதிகரிக்கும். இதனால் புதிய வாகனங்களுக்கான தேவையும் கூடும். அதோடு சுற்றுசூழல் பாதிப்பும் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக, வாகன நிறுவனங்கள் தற்போது சில சலுகைகளையும் அறிவித்து வருகின்றன.
பழமையான பசுமை வரி
பழைய வாகனங்களுக்கு பசுமை வரி எட்டு வருடங்கள் பழமையான போக்குவரத்து வாகனங்களின் தகுதி சான்றிதழ் புதுப்பிக்கப்படுகையில், சாலை வரியில் 10 முதல் 25% பசுமை வரியாகப் விதிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது. இதே தனியார் வாகனங்கள் 15 வருடங்களுக்குப் பிறகு பதிவு சான்றிதழை புதுப்பிக்கும்போது. இந்த பசுமை வரி விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
வாகனத் துறையின் வருவாய்
தற்போது வாகன துறையின் வருவாய் 4.5 லட்சம் கோடி ரூபாயுடன் ஒப்பிடும்போது, வாகன அழிப்பு திட்டமானது இதனை 30 சதவீதம் அதிகரித்து, 10 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் கட்கரி கூறியுள்ளார். மேலும் தற்போது 1.45 லட்சம் கோடியாக இருக்கும் உதிரி பாகங்கள் ஏற்றுமதி, 3 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்றும் கட்கரி கூறியுள்ளார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications