இந்தியாவில் பயன்படுத்தும் கார்களுக்கு 6 ஏர்பேக் பயன்படுத்த வேண்டும் என்ற விதிகளை மத்திய அரசு கட்டாயமாக்காது என மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இன்று காலை நடைபெற்ற வாகன உதிரிபாக உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (ACMA) வருடந்திர பொதுக் கூட்டத்தில் (ஏஜிஎம்) நித்தின் கட்கரி பேசிய போது இவ்வாறு கூறினார்.
அக்டோபர் 1, 2023 முதல் பயணிகள் வாகனமான கார்களில் 6 ஏர்பேக்குகளை கட்டாயமாக்கும் திட்டத்தை அமல்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் பேசினார். தற்போது இதற்கு முற்றிலுமும் முரணாக கார்களில் 6 ஏர்பேக்குகளை கட்டாயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.

ஜூலை 2019 இல் ஓட்டுநர் இருக்கைக்கும், ஜனவரி 2022ல் துணை பயணிகள் அதாவது co-passenger இருக்கைக்கும் ஏர்பேக் கட்டாயமாக்கப்பட்டது. இந்த நிலையில் அக்டோபர் 1, 2023 முதல் பயணிகள் வாகனமான கார்களில் 6 ஏர்பேக்குகள் கட்டாயமாக்கப்படும் என நிதின் கட்கரி பேசினார்.
இன்று காலை நடைபெற்ற வாகன உதிரிபாக உற்பத்தியாளர்கள் சங்கத்தின் வருடந்திர பொதுக் கூட்டத்தில் பேசிய நித்தின் கட்கரி, கார்களில் ஆறு ஏர்பேக்குகளை வழங்கும் ஆட்டோமொபைல் நிறுவனங்களின் தயாரிப்புகள் புதிய விதிகளின்படி அதிக ஸ்டார் மதிப்பீட்டைப் பெறும். ஏறக்குறைய அனைத்து நிறுவனங்களும் தற்போது ஆறு ஏர்பேக் கொண்ட கார்களை உருவாக்கி வருவதால், இந்த நடவடிக்கையை கட்டாயமாக்க வேண்டிய அவசியமில்லை என்றார் நித்தின் கட்கரி.
சமீபத்தில் மத்திய அரசால் தொடங்கப்பட்ட பாரத் என்சிஏபி (புதிய கார் மதிப்பீட்டுத் திட்டம்) அடிப்படையில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் கார்களுக்கான ஸ்டார் மதிப்பீடுகளை பெற உள்ளது. இந்த புதிய விதிகள் 3.5 டன் வரையிலான எடை கொண்ட மோட்டார் வாகனங்களின் சாலை பாதுகாப்பு தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
பாரத் என்சிஏபி அக்டோபர் 1, 2023 முதல் செயல்படுத்தப்படும், இந்தத் திட்டத்தின் கீழ், கார் உற்பத்தியாளர்கள் தானாக முன்வந்து ஆட்டோமோட்டிவ் இண்டஸ்ட்ரி ஸ்டாண்டர்ட் (ஏஐஎஸ்) 197 இன் விதியின் படி சோதனை செய்யப்பட வாகனங்களை வழங்கலாம்.
பாரத் என்சிஏபி விதிமுறைகள் கீழ் ஒவ்வொரு காரை சோதனை செய்யப்பட்டு அதன் செயல்திறனின் அடிப்படையில், வாகனத்தில் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் பயண பாதுகாப்புகள் அளவிடப்பட்டு 0-5 என்ற அளவில் ஸ்டார் மதிப்பீடுகள் வழங்கப்படும்.
இந்த நிலையில் ஒரு வருடத்திற்கு முன்பு மத்திய அரசு அனைத்து கார்களிலும் 6 ஏர்பேக் கட்டாயமாக்கும் விதிகளை நடைமுறைப்படுத்தும் பணிகளை செய்து வந்தது. இந்த விதி அக்டோபர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது நித்தின் கட்கரி கட்டாயமாக்கம் திட்டம் இல்லை என பேசியுள்ளார்.
இதேபோல் நேற்று 63வது SIAM வருடாந்திர கூட்டத்தில் நத்தின் கட்கர டீசல் வாகனங்கள் விற்பனைக்கு கூடுதலாக 10% ஜிஎஸ்டி விதிக்க தான் நிதியமைச்சகத்திடம் பரிந்துரைக்க உள்ளதாக பேசினார், இவருடைய பேச்சு பங்குச்சந்தை வரையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய காரணத்தால் அடுத்த சில நிமிடத்தில் அரசாங்கத்தின் தீவிர பரிசீலனையில் தற்போது அத்தகைய திட்டம் இல்லை என்பதை விளக்கி டிவீட் செய்தார்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications