உலக வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் ஆட்டோமொபைல் தொழில்நுட்பம் வேகமாக மாறி வருகிறது. எலக்ட்ரிக் கார்கள் தான் எதிர்காலம் என கூறப்பட்ட நிலையில், ஹைப்ரிட் கார்கள் தான் குறைவான சூற்றுசூழல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை என சமீபத்தில் ஆய்வு முடிவுகள் வெளியானது.
இதேவேளையில் டாடா மோட்டார்ஸ் முதல் ரிலையன்ஸ் வரையில் ஹைட்ரஜன் வாகனங்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது, இதனால் அடுத்த 10 -15 வருடத்தில் ஆட்டோமொபைல் துறை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறப்போகிறது.

இந்த முக்கியமான காலகட்டத்தில் மத்திய சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, ஹைப்ரிட் வாகனங்களுக்கான வரிகளைக் குறைப்பதற்கான யோசனையை முன்வைத்துள்ளார். இதன் மூலம், இந்திய சந்தையில் ஹைப்ரிட் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, ஹைப்ரிட் வாகனங்கள் மீது 28% முதல் 43% வரை வரி விதிக்கப்படுகிறது. இதனை 12% ஆக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் கட்கரி தெரிவித்துள்ளார். இது மட்டும் நடந்துவிட்டால் 20 லட்சம் ரூபாய் காரை வெறும் 16 லட்சம் ரூபாய்க்கு வாங்க முடியும் என்பதால் புதிய கார்களை வாங்குவோர் வெயிட் செய்து வாங்குவது உத்தமம்.
வரி குறைப்பு நடவடிக்கையால், தற்போது மிகவும் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே விற்பனையாகும் ஹைப்ரிட் வாகனங்களின் விலை குறையும் இதன் விற்பனை அதிகரிக்கும். மாருதி சுசூகி, டொயோட்டா கிரோலோஸ்கர் மோட்டார், ஹோண்டா கார்ஸ் போன்ற நிறுவனங்கள் இந்த வரி குறைப்பால் பெரிய அளவில் பயன் அடைய வாய்ப்புள்ளது.
எலக்ட்ரிக் வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரி 5% ஆக இருக்கும் நிலையில், ஹைப்ரிட் வாகனங்களுக்கு 28% முதல் 43% வரை வரி விதிக்கப்படுகிறது. ஹைப்ரிட் வாகனங்களுக்கான வரி 12% ஆக குறைக்கப்பட்டால், மொத்த உரிமைச் செலவு (Total Cost of Ownership) 21% வரை குறையும் என கோடக் செக்யூரிட்டீஸ் லிமிடெட் தெரிவித்துள்ளது.
இதன் மூலம், எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவோர் ஹைப்ரிட் வாகனங்கள் வாங்க முற்படுவார்கள். 2023ஆம் ஆண்டிற்கான மொத்த எலக்ட்ரிக் வாகன விற்பனையில், சுமார் 70% விற்பனையை டாடா மோட்டார்ஸ் வைத்துள்ளது.
டாடா நெக்ஸான் மற்றும் பன்ச் மாடல்களின் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையில் அசத்துகிறது. மஹிந்திரா & மஹிந்திரா, எம்ஜி மோட்டார், BYD போன்ற நிறுவனங்களும் எலக்ட்ரிக் வாகனச் சந்தையில் களம் இறங்கியுள்ளன.
ஹைப்ரிட் கார்கள் மீதான வரி 12 சதவீதமாகக் குறைந்தால் மாருதியின் கிராண்ட் விட்டாரா எஸ்யூவி மற்றும் இன்விக்டோ எம்பிவி, டொயோட்டாவின் ஹைக்ராஸ் மற்றும் அர்பன் க்ரூஸர் மற்றும் ஹோண்டா சிட்டி ஆகியவற்றின் விலையில் 21 சதவீதம் வரையில் குறையும்.
உதாரணமாக வரிக் குறைப்புக்குப் பின்பு, மாருதி சுசூகி கிராண்ட் விட்டாரா-வின் ரூ.19.93 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.15.78 லட்சம் ஆக குறையும். இதேபோல் டொயோட்டாவின் ஹைக்ராஸ் ரூ.25.21 லட்சம் விலையில் ரூ.19.96 லட்சமாக குறையும். இதேபோல் ஹோண்டா சிட்டி e-HEV கார் விலை 20.49 லட்சத்தில் இருந்து 16.22 லட்சமாக குறையும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications