Bike Taxi: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி முக்கிய அறிவிப்பு..!! மாநில அரசுகள் மனசு வைக்குமா?

இந்தியாவில் கார், ஆட்டோக்களை தாண்டி இரு சக்கர வாகனங்களை வாடகை வாகனங்களாக பயன்படுத்தும் பைக் டாக்ஸி முறை பிரபலமாகி வருகிறது. பைக் டாக்ஸி முறைக்கு சில மாநிலங்களில் தடை இருக்கும் நிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஓலா, ஊபர், ரேபிடோ போன்ற தளங்களில், தனியார் உரிமையாளர்களுக்கு சொந்தமான இருசக்கர வாகனங்களான பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களை பயணிகளை ஏற்றி செல்லும் பைக் டாக்ஸிகளாக இயக்க அனுமதிக்க வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார். அனைத்து மாநில அரசுகளும் இதனை பரிசீலனை செய்ய கேட்டு கொண்டுள்ளார்.

Bike Taxi: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி முக்கிய அறிவிப்பு..!! மாநில அரசுகள் மனசு வைக்குமா?

வாகன அக்ரிகேட்டர் வழிகாட்டுதல்கள் 2025-ஐ மாநில போக்குவரத்து ஆணையர்கள் செயல்படுத்த வேண்டும் என கேட்டு கொண்டுள்ள அவர், வணிக போக்குவரத்து பதிவு அல்லாத தனியார் மோட்டார் சைக்கிள்களை பைக் டாக்ஸிகளக பயன்படுத்த இந்த வழிகாட்டுதல் வழிவகை செய்கிறது. இருப்பினும், பல்வேறு மாநிலங்களில் இவற்றின் அமலாக்கம் மிக குறைவாகவே உள்ளது என கூறியுள்ளார்.

பைக் மற்றும் ஸ்கூட்டர் உரிமையாளர்களை பைக் டாக்ஸி ஓட்ட அனுமதிப்பதன் மூலம் 15 முதல் 20 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் கிடைக்கும் என்றும், அதன் பொருளாதார தாக்கம் மிகப்பெரியதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Also Read

பைக் டாக்ஸி என்பது இந்தியாவில் நீண்ட காலமாகவே சர்ச்சைக்குரிய விஷயமாகவே இருக்கிறது. சில மாநிலங்களில் பைக் டாக்ஸிகளுக்கு தடையும் இருக்கிறது. குறுகிய தூரத்தில் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்ய பைக் டாக்ஸிகள் சௌகரியமாக இருக்கின்றன. குறிப்பாக நகரங்களில் வசிக்கும் இளைஞர்கள் பலரும் பைக் டாக்ஸி சேவைகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் இதனால் தங்களின் வருமானம் போவதாக ஆட்டோ ஓட்டுநர்கள் ஒருபுறம் பிரச்சினை செய்கின்றனர், இதனால் தான் பல மாநிலங்களில் இது இன்னும் முழுமையாக அனுமதிக்கப்படவில்லை.

தற்போது ராஜஸ்தான் மாநிலம் இந்த வழிகாட்டுதல்களை முழுமையாக அமல்படுத்தியுள்ளது. ஹரியானா மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பகுதியளவில் மட்டுமே அமல்படுத்தியுள்ளன. மத்திய அரசின் இந்த வழிகாட்டுதல்கள் நாடு முழுவதும் தனியார் பைக் டாக்ஸிகளை தானாகவே சட்டப்பூர்வமாக்குவதில்லை; ஒவ்வொரு மாநில அரசும் தனிப்பட்ட முறையில் அனுமதி வழங்குவது அவசியம்.

Recommended For You

போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன மாசுபாட்டை குறைப்பதோடு, மலிவு விலையில் பயண வசதி மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், தனியார் மோட்டார் சைக்கிள்களை அக்ரிகேட்டர்கள் மூலம் பைக் டாக்ஸிகளாக பயன்படுத்த மாநில அரசுகள் அனுமதி அளிக்கலாம் என இந்த வழிகாட்டுதல்கள் கூறுகின்றன. இதன் மூலம் தனியார் ஸ்கூட்டர் மற்றும் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களுக்கு ரேபிடோ, ஊபர், ஓலா போன்ற தளங்கள் மூலம் வருமானம் ஈட்டும் வாய்ப்பு கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+