இந்தியா ஆட்டோமொபைல் துறை வேகமாக மாறி வரும் வேளையில் டீசல் கார்களை தயாரிப்பதை நிறுவனங்கள் குறைத்து வருவது போலவே விரைவில் பெட்ரோல் கார்கள் தயாரிப்பையும் நிறுத்த உள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஏற்கனவே பெரிய அளவில் டிராண்டாகியிருக்கும் எலக்ட்ரிக் வாகனங்களும், ஹைட்ரஜன் மற்றும் எத்தனால் எரிபொருளில் இயங்கும் கார்களை தயாரிப்பது தான்.
ஒரு லிட்டர் பெட்ரோலை விடவும் எத்தனால் எரிபொருள் மிகவும் குறைவு, இதைவிட முக்கியமாக இதை இந்தியாவிலேயே தயாரிக்க முடியும் என்பதால் எத்தனால் எரிபொருளில் இயங்கும் வாகனங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசு முதல் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் முதல் தீவிரமாக உள்ளது.

இதன் அடிப்படையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நாளை ஆகஸ்ட் 29, செவ்வாய்க்கிழமை 100% எத்தனால் எரிபொருளில் இயங்கும் டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா காரை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
இது ஏன் முக்கியம் என்றால் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 முதல் 108 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் வேளையில் ஒரு லிட்டர் எத்தனால் எரிபொருள் விலை 45 ரூபாய் முதல் 69 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. தரத்திற்கு ஏற்றார்போல் விலை மாறுபடுகிறது, எத்தனால் மூலம் இயங்கும் கார்களை மக்கள் அதிகம் பயன்படுத்தினால் மத்திய அரசு கச்சா எண்ணெய்-க்கு ஒவ்வொரு மாதமும் செலவிடப்படும் பல ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்க முடியும்.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடந்த சில வருடங்களாக மாற்று எரிபொருள் மற்றும் பசுமை எரிபொருளில் இயங்கும் வாகனங்களை தயாரிக்க வலியுறுத்தி வரும் வேளையில் கடந்த ஆண்டு ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் டோயோட்டா Mirai EV கார் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது 100% எத்தனால் எரிபொருளில் இயங்கும் டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா காரை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி 2004 ஆம் ஆண்டு முதல் மாற்று எரிபொருளில் இயங்கும் கார்கள் குறித்து பேசி வருவதாகவும், இதற்காக தான் பிரேசில் சென்று புதிய தொழில்நுட்பம் குறித்து அறிந்துக்கொண்டதாக தெரிவித்தார்.
இந்தியாவின் எரிபொருள் தேவையை உள்நாட்டு ஆதாரங்களை வைத்து தீர்க்கப்படுமாயின் கச்சா எண்ணெய் இறக்குமதியை மொத்தமாக நிறுத்தப்பட்டு 16 லட்சம் கோடி ரூபாய் சேமிக்க முடியும், மேலும் சுற்றுச்சூழல் மாசுப்படுவதை குறைக்க முடியும் என தெரிவித்தார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.


Click it and Unblock the Notifications