எப்படியாவது கஷ்டப்பட்டு படித்து அமெரிக்கா சென்று ஒரு வேலையில் சேர்ந்து செட்டில் ஆகிவிட வேண்டும் என்பதுதான் பெரும்பாலானவர்களின் விருப்பமாக உள்ளது. இதை ஒரு கனவாக நினைத்து நிறைய பேர் சுற்றித் திரிகின்றனர்.
ஆனால் கிடைத்த அமெரிக்கன் ஐடி வேலையை உதறித் தள்ளிவிட்டு இந்தியாவுக்கு வந்து ஒருவர் டீ ஆத்திக் கொண்டிருக்கிறார். அவரது பெயர் நிதின் சலுஜா.

இந்தத் தொழில் அவருக்கு கோடிக்கணக்கான ரூபாயை லாபமாகக் கொட்டித் தருகிறது. அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தவுடன் சாயோஸ் என்ற ஸ்டார்ட் அப் தொழிலை நிதின் தொடங்கினார். தொடக்கத்தில் சிரமமாக இருந்தது, ஆனால் விடாப்பிடியாக நிதின் எடுத்த முயற்சிகள் விரைவிலேயே அவருக்கு கைகொடுத்தன.
இந்தியாவில் ஸ்டார்பக்ஸ், கபே காபி டே, கபே மோச்சா, பரிஸ்டா ஆகிய பிரபல காபி கடைகள் ஆதிக்கம் செலுத்தி வந்தன. ஆனால் சாயோஸ் விரைவிலேயே பெயரைத் தக்க வைத்து இந்தியாவிலேயே முன்னணி சாய் கபேவாக வளர்ந்தது. டீ தொழிலை ரூ.100 கோடி வருமானம் தரும் வியாபாரமாக மாற்றி இந்தியாவில் ஒரு டீ புரட்சியை உருவாக்கிவிட்டார் நிதின் சலுஜா.
ஐஐடி பம்பாயில் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் பட்டப்படிப்பை முடித்தார் நிதின். படிப்பு முடிந்தவுடன் ஒரு கார்ப்பரேட் மேனேஜ்மன்ட் கன்சல்டன்டாக அமெரிக்காவின் பெரிய நிறுவனத்தில் வேலை பார்த்தார். அந்த நிறுவனத்தில் லட்சக்கணக்கான ரூபாயை சம்பளமாகப் பெற்றார்.
இந்த நிலையில் அமெரிக்காவில் டீ வாங்குவதற்காக நிதினும் அவரது மனைவியும் மிகுந்த சிரமப்பட்டனர். இதைத் தொடர்ந்து ஒரு கபேயை தொடங்கி டீ விற்க முடிவு செய்தார். உடனடியாக தனது வேலையை விட்டுவிட்டு இந்தியாவுக்கு திரும்பிய அவர் சொந்தமாக டீ வியாபாரத்தை ஆரம்பித்தார்.
அமெரிக்காவில் இருந்தபோது ஒரு நல்ல டீயை கடைகளில் வாங்க முடியாத நிலை இருப்பதை நிதின் பார்த்தார். இதிலிருந்து ஒரு தரமான டீ கடையைத் தொடங்கினால் மக்கள் நிச்சயமாக வந்து சாப்பிடுவார்கள் என்று நினைத்தார். இந்தியாவில் ஏராளமான காபி கடைகள் காபி விற்பதை பார்க்கலாம். ஆனால் டீ விற்கப்படாது.
இந்தியாவுக்கு என தனித்துவமான டீ குடிக்கும் கலாசாரம் உள்ளது. மக்கள் விதவிதமான டீக்களை தயாரித்து அருந்துவார்கள். இதையே சாதகமாக வைத்து ஒரு டீ கபேயை டீ அருந்துபவர்களுக்காக இந்தியாவில் தொடங்க நிதின் திட்டமிட்டார். 2012இல் நிதினும் அவரது நண்பர் ராகவும் சேர்ந்து சாயோஸை நிறுவினர். குருகாவனில் முதல் கபேயை திறந்தனர்.
சாயோஸை மிகுந்த பற்றுடனும் ஆர்வத்துடனும் நிதின் நடத்தினார். அவரே கஸ்டமர்களுக்கு மேரே வாலி சாய் என தயாரித்து வழங்கினார். தொழில் முதலீட்டுக்கு நிதின் கஷ்டப்பட்டார். தானே ஆர்டர் வாங்குவார். டீயை தயாரித்து வழங்குவார்.
கூடுதலாக நிதின் தனது ஒவ்வொரு வாடிக்கையாளர்களும் அவர்களுக்கென ஒரு ருசியை வைத்திருப்பதை பார்த்தார். கோவிட் காலத்தின்போது தொழில் படுத்துவிட்டது. இருப்பினும் கோவிட் காலம் முடிந்தபின்னர் மீண்டும் 2020இல் தொடங்கியது.
தொடக்கத்தில் இருந்த சிரமங்களையெல்லாம் கடந்த பிறகு நிதினின் விடாமுயற்சிக்கு பலன் கிடைத்தது. 2020இல் அவரது நிறுவனம் 100 கோடி ரூபாய் லாபத்தைப் பார்த்தது. மும்பை, பெங்களூரு, சண்டீகர், புனேவிலும் கிளைகள் தொடங்கப்பட்டன. இன்றைக்கு 200 சாயோஸ் கிளைகள் நாடு முழுவதும் இயங்குகின்றன. தேசத்தின் பிரீமியம் சாய் விற்கும் கபேயாக சாயோஸ் மாறிவிட்டது. டீ விரும்பிகளின் தேவையை அது பூர்த்தி செய்கிறது.


Click it and Unblock the Notifications