உங்கள் வீட்டின் பால்கனியில் காலையில் அமர்ந்தபடி டீயை சுவைத்துக் கொண்டிருந்தால் அதற்கு பொருத்தமாக உஸ்மானியா பிஸ்கெட்கள் இருக்கும். லேசான இனிப்புடன், மென்மையான இந்த உப்பு பிஸ்கெட்டை கடித்தால் அப்படியே உங்கள் தொண்டைக்குள் உருகியபடி இறங்கும். அதன் சுவைக்கு நிகரே இல்லை.
இந்த பிஸ்கெட்டை உருவாக்கியவர் ஹைதராபாத் நிஜாம். மிர் உஸ்மான் அலி கான் காலத்தில் இந்த பிஸ்கெட்கள் பிரபலமாகின. இந்த பிஸ்கெட்டில் இனிப்பு மற்றும் உப்பு சுவையை சேர்த்து ஹைதராபாத் நிஜாம் மிர் உஸ்மான் அலி கான் உருவாக்கினார் .

அரச குடும்பத்தின் ஆதரவைப் பெற்ற முதல் பிஸ்கெட் இது என்பதால் மக்கள் மத்தியில் வேகமாகவும், பெரிய அளவிலும் பிரபலமானது. காலப்போக்கில் அந்த பிஸ்கெட்டின் பல வகைகள் பட்டர் பிஸ்கட் என்ற பெயரில் சென்னையிலும் கிடைக்கத் தொடங்கின.
இந்த பிஸ்கெட்டை வாங்குவதற்காக அபிட்ஸில் உள்ள விகாஜி ஹோட்டலுக்கு நவாப் தினமும் தனது காரை அனுப்புவாராம். புத்தம் புதிதாக அந்த பிஸ்கெட்களை நவாப்புக்காக வாங்கி வருவார்களாம். பிஸ்கெட் மீது நவாப்புக்கு இந்த பிடித்தம் காரணமாக அதற்கு நவாபின் பெயரையே சூடியுள்ளனர்.
ஹைதராபாத்திலும் பிற மாநிலங்களிலும் இந்த உஸ்மானியா பிஸ்கெட்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. 1910இல் உஸ்மானியா மருத்துவமனையை நிஜாம் உஸ்மான் அலி தொடங்கி வைத்தபோது அங்கிருந்த நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து அளிப்பதற்காக மருத்துவமனையின் உணவு நிபுணர்கள் இந்த பிஸ்கெட்டை தயாரித்ததாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து இந்த பிஸ்கெட்டை பிற ஹோட்டல்களும், பேக்கரிகளும் தயாரிக்கத் தொடங்கி விட்டன. உஸ்மானியா பிஸ்கெட்டில் வெண்ணெய், சர்க்கரை, கஸ்டர்டு பவுடர், சோடா மாவு, ஏலக்காய் தூள், குங்குமப்பூ ஆகியவை நிறைந்துள்ளன. நிஜாமின் சாயங்கால சிற்றுண்டியில் உஸ்மானியா பிஸ்கெட் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும்.
1911 ஆம் ஆண்டில் தனது 25 வயதில் உஸ்மான் அலி கான் அரச பீடத்துக்கு வந்தமர்ந்தார். நிஜாம் ஆட்சி முடியும்வரை அவர் பதவியில் இருந்தார்.
உலகின் பணக்காரர்கள் வரிசையில் உஸ்மான் அலி கானும் ஒருவர். கோல்கொண்டா வைரச் சுரங்கத்தில் எடுக்கப்படும் வைரங்கள் அனைத்தும் அவருக்கே சொந்தமாகும்.
இந்தப் புகழ்பெற்ற உஸ்மானியா பிஸ்கெட் ஹைதராபாத்தில் உள்ள சார்மினார் அருகே நிம்ரா கபே, சுபான் பேக்கரி, கராச்சி பேக்கரியில் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications