பேப்பர் வெயிட்டாக பயன்படுத்திய நிஜாமின் வைரம்! இன்னும் பல பொருட்களுடன்! டெல்லியில் திறக்கப்படும் மியூசியம்!

இவ்வளவு நாட்களாக நிஜாம்களின் நகைகளை பாதுகாப்பு பெட்டகங்களில் ரிசர்வ் வங்கி வைத்திருந்தது. ஆனால் இப்போது டெல்லியில் அமையவுள்ள யுகே யுகீன் பாரத் மியூசியத்தில் நிஜாம்களின் நகைகள் காட்சிப்படுத்தப்பட உள்ளதாக மத்திய கலாச்சாரத்துறை செயலாளர் விவேக் அகர்வால் தெரிவித்துள்ளார். இந்த காட்சி கூடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகைகள் வைக்கப்படவுள்ளன.

1995-ஆம் ஆண்டு ஹைதராபாத் நிஜாம்களின் நகையை அறக்கட்டளைகளிடமிருந்து மத்திய அரசு சுமார் ரூ. 217 கோடிக்கு வாங்கியது. கடைசி நிஜாமான மிர் உஸ்மான் அலி கான் பயன்படுத்திய 184.75 கேரட் ஜேக்கப் வைரமும் இதில் அடங்கும். இந்த வைரத்தை இவர் பேப்பர் வெயிட்டாக பயன்படுத்தியதாக வரலாறு கூறுகிறது. அன்றிலிருந்து ரிசர்வ் வங்கியின் பாதுகாப்பில் இந்த நகைகள் வைக்கப்பட்டிருந்தது.

பேப்பர் வெயிட்டாக பயன்படுத்திய நிஜாமின் வைரம்! இன்னும் பல பொருட்களுடன்! டெல்லியில் திறக்கப்படும் மியூசியம்!

ஒரு சில நேரங்களில் டெல்லி தேசிய அருங்காட்சியகம் மற்றும் ஹைதராபாத் சலார் ஜங் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்படும். ஆனால் இந்த நகைகளை நிரந்தரமாக காட்சிப்படுத்த வேண்டும் என்று நிஜாமின் வாரிசுகளும்,பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து கோரிக்கை வைத்தன. நிஜாம்களின் விலை உயர்ந்த நகைகள் மட்டுமல்லாமல், சிந்து சமவெளி பொம்மைகள், ஹரப்பா நாகரிகத்தின் நடனப் பெண் சிலை, நுண்ணிய ஓவியங்கள், காந்தாரச் சிற்பங்கள் ஆகியவையும் இந்த மியூசியத்தில் இடம் பெறவுள்ளன.

Also Read

நவம்பர் 11ஆம் தேதி அன்று மத்திய அமைச்சரவை இந்த மியூசியத்திற்கு ஒப்புதல் அளித்தது. அதன்படி சுமார் ரூ. 3630 கோடி மதிப்பீட்டில் யுகே யுகின் பாரத் மியூசியம் அமைய உள்ளது. டெல்லியில் உள்ள நார்த் பிளாக் மற்றும் சவுத் பிளாக் கட்டிடங்களை மறுவடிவமைப்பு செய்து இந்த மியூசியத்தை திறக்கவுள்ளனர்.

2030 முதல் 2031-ஆம் ஆண்டு வரையில் பல கட்டங்களாக திறக்கப்படவுள்ளது. அதில் நார்த் பிளாக்கில் அணிகலன்கள் இடம்பெறவுள்ளது. 2027 ஆம் ஆண்டில் பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்த கூடங்களில் கட்டிடக்கலை, கணிதம், வானியல் ஆகியவை இடம் பெறவுள்ளது.

உலகெங்கிலும் இருந்து வரவிருக்கும் சிலைகள்: யுகே யுகீன் பாரத் மியூசியத்திற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கலைப் பொருட்கள் கொண்டு வரப்படவுள்ளன. இந்திய தொல்லியல் துறையின் 52 அருங்காட்சியங்கள், மாநில அருங்காட்சியங்கள் மற்றும் தனிநபர் சேகரிப்புகளில் இருந்தும் சுமார் 18 லட்சத்திற்கும் அதிகமான பொருட்கள் அங்கு வைப்பதற்காக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள தேசிய அருங்காட்சியகத்திலும் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான பொருட்கள் இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+