சமீப காலமாக சைபர் குற்றங்கள் மற்றும் ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து நடக்கிறது. இதனால் அப்பாவி மக்களும் லட்சங்களில் பணத்தை இழக்கின்றனர். தொலைத்தொடர்பு துறை இது போன்ற மோசடிகளைத் தடுப்பதற்காக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் வருகின்ற 2027-ஆம் ஆண்டின் ஜனவரி 1-ஆம் தேதி முதல் புதிய "சிம் பைண்டிங்" விதிமுறை அமலுக்கு வரவுள்ளது. சிம் பைண்டிங் என்றால் என்ன? இதனால் என்னென்ன நன்மைகள் ஏற்படும்? என்ற விவரங்களைப் பார்ப்போம்.
புதிய விதிமுறை என்ன?: இந்தியாவில் அதிக அளவில் வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற ஆப்-கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது போன்ற ஆப்களில் உள்நுழைவதற்கு ஒரு போன் நம்பர் தேவை. முதல் முறை போன் நம்பரைப் பயன்படுத்தி கணக்கு தொடங்கிவிட்டால் போதும். பிறகு சிம் கார்டு இல்லை என்றாலும்.. இன்டர்நெட் அல்லது வைஃபை பயன்படுத்தி உள்நுழையலாம்.

அதாவது சிம்கார்டு இல்லாமலும் தொடர்ந்து பயன்படுத்தலாம். அப்படி பயன்படுத்தினாலும் எந்த தடையுமின்றி வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற ஆப்கள் வேலை செய்யும். ஆனால் புதிய சிம் பைண்டிங் விதிமுறையின் கீழ் உங்கள் போனில் எந்த நம்பரைப் பயன்படுத்தி நீங்கள் உள்நுழைக்கிறீர்களோ.. அந்த நம்பரின் சிம் உங்கள் டிவைஸில் கட்டாயம் இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அந்த ஆப் இயங்காது.
புதிய விதிமுறையை செயல்பாட்டுக்கு கொண்டுவர தொலைத்தொடர்பு துறை சில வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளது. இனி சிம் கார்டு உள்ள கணக்குகளை மட்டும் தான்.. நாம் பயன்படுத்த முடியும். இதற்கான காலக்கேடு 2026-ஆம் ஆண்டின் டிசம்பர் 31-ம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது. இதற்குள் ஆப் வடிவமைப்பாளர்கள் சிம்கார்டு இருந்தால் மட்டுமே பயனர்கள் பயன்படுத்தும் வகையில் அவற்றை மாற்றியமைக்க வேண்டி இருக்கும்.
சைபர் குற்றங்கள், ஃபிஷிங் மோசடிகள் மற்றும் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிகள் தொடர்ந்து நடப்பதால் மக்களை அதிலிருந்து காப்பாற்றும் முயற்சியில் இத்தகைய நடவடிக்கையை தொலைத்தொடர்புத்துறை எடுத்துள்ளது. இது போன்ற மோசடிகளுக்கு மோசடிக்காரர்கள் அதிகம் பயன்படுத்துவது சிம்கார்டு இல்லாத கணக்குகளை தான்.
எந்தெந்த ஆப் புதிய விதிமுறையின் கீழ் வரும்?: புதிய சிம் பைண்டிங் விதிமுறையின் கீழ் வாட்ஸ்அப், டெலிகிராம், சிங்கல், ஷேர்சாட், ஜியோசாட், ஜோஷ், அரட்டை போன்ற ஆப்களுக்கு பொருந்தும். பட்டியலில் இருக்கும் மற்றொரு ஆப் ஸ்னாப்சாட். ஆனால் இந்த ஆப்-பிற்க்கு பைண்டிங் விதி எப்படி செயல்படும் என்பது இன்னும் முழுமையாகத் தெரியவில்லை.
பயனர்களுக்கு என்ன பிரச்சனை ஏற்படும்?: சிம் கார்டு நம்பர் உங்கள் மொபைலில் இல்லாமல் இருந்தாலோ அல்லது அந்த நம்பர் டீ-ஆக்டிவேட் ஆகி இருந்தாலோ நீங்கள் உள்நுழைவதில் பிரச்சனை ஏற்படலாம்.
யாருக்கெல்லாம் பிரச்சனை?: அடிக்கடி வெளிநாட்டுக்கு பயணிப்பவர்கள், அடிக்கடி போனை மாற்றுபவர்கள், சிம் கார்டை மாற்றுபவர்களுக்கு பிரச்சினை ஏற்படலாம். அதேபோல சிம் இல்லாமல் டேப்லெட் மற்றும் பிற சாதனங்களில் ஆப்களை பயன்படுத்தி வருபவர்களும் இதனால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. ஆப் வடிவமைப்பாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இந்த விதிமுறையை செயல்பாட்டுக்கு கொண்டுவர 2026-ஆம் ஆண்டின் டிசம்பர் 31-ஆம் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல வாட்ஸ்அப் வெப் பயன்படுத்துவதற்கும் பாதுகாப்பு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
