உலகம் முழுவதுமே ஐடி நிறுவனங்கள் தற்போது பெரிய சவால்களை எதிர்கொண்டிருக்கின்றன . அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரிவிதிப்பு மற்றும் ஹெச்1பி விசா கட்டுப்பாடுகள், ஐடி துறையில் ஏற்பட்டிருக்கக்கூடிய மந்த நிலை, அமெரிக்க நிறுவனங்கள் ஐடி சார்ந்த தங்களுடைய செலவினங்களை குறைத்து இருப்பது, ஏஐ தொழில்நுட்பத்தின் மிக வேகமான வளர்ச்சி என ஐடி நிறுவனங்கள் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இயங்கி வருகின்றன .
உலகின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான அசெஞ்சர் தங்களுடைய ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஒரு எச்சரிக்கையை வெளியிட்டு இருக்கிறது. நிறுவன தலைமை செயல் அதிகாரியான ஜூலி ஸ்வீட் நிறுவனத்தில் கட்டமைப்பு ரீதியாக மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரப்போவதாக தெரிவித்திருக்கிறார். அதாவது நிறுவனம் செயல்படும் விதம், தயாரிப்புகள், அதை எப்படி வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்கிறோம் என அனைத்துமே பெரிய மாற்றம் காணப்போகிறது என கூறியிருக்கிறார்.

நாம் தற்போது புதிதாக பல்வேறு நிறுவனங்களோடு கூட்டமைப்பு மேற்கொண்டு இருக்கிறோம் நிறுவனத்தின் தொழில் உத்தியையே மாற்றி அமைத்திருக்கிறோம் என சுட்டிக்காட்டி இருக்கும் அவர் பல்வேறு ஊழியர்களுக்கும் ஏஐ உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுவதாக கூறியுள்ளார். இந்த ஏஐ திறன் மேம்பாட்டுக்கு பொருத்தம் இல்லாதவர்கள் என கருதப்படக் கூடிய ஊழியர்கள் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் சூசகமாக தெரிவித்து இருக்கிறார்.
அதாவது ஏஐ பயன்பாட்டிற்கு யாரெல்லாம் தயாராக இல்லையோ அவர்கள் அனைவரும் வேலையிலிருந்து நீக்கப்படுவார்கள் என்ற செய்தியை அவர் வெளியிட்டு இருக்கிறார். தற்போது ஏஐ தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் வேகமாக வளர்ந்து வரக்கூடிய சூழலில் அந்த திறன் இருப்பவர்களால் மட்டுமே இந்த துறையில் நீடிக்க முடியும் என்பதே அசெஞ்சர் நிறுவன தலைமை செயல் அதிகாரி வெளியிடும் செய்தி குறிப்பிடுகிறது.
பல்வேறு நிறுவனங்களும் தங்களுடைய அன்றாட வேலைகளிலேயே ஏஐ பயன்பாட்டை தொடங்கிவிட்டன. குறிப்பாக ஐடி நிறுவனங்கள், டெக் நிறுவனங்கள் எல்லாம் கோடிங் உள்ளிட்ட வேலைகளை ஏஐ வசம் ஒப்படைத்து விட்டன. எனவே ஏஐ பயன்படுத்த தெரிந்த நபர்களுக்கு தான் இந்த வேலை வாய்ப்பு சந்தை இனி வாய்ப்பினை ஏற்படுத்தித் தரும் என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது.
டப்ளினை தலைமையிடமாக கொண்டு செயல்படக்கூடிய நிறுவனம் அசெஞ்சர். நடப்பாட்டின் முதல் மூன்று மாதங்களில் 7,91 ,000 ஊழியர்களை கொண்டு வேலை செய்து வந்தது அடுத்த மூன்று மாதங்களிலேயே இந்த எண்ணிக்கை 7,79,000 என குறைந்துவிட்டது. அசெஞ்சர் நிறுவனம் ஆறு மாதம் நிறுவன மறுசீரமைப்பு திட்டம் ஒன்றை கொண்டு வந்திருக்கிறது.
முதல் கட்டமாக ஏஐ சார்ந்த பணிகளுக்கு ஏற்ப திறன்களை வளர்த்துக் கொள்ள முடியாத ஊழியர்களை விரைவாக வெளியேற்றுவது ,நிறுவனத்தின் வளர்ச்சி மாதிரிக்கு பொருந்தாத வணிகப்பகுதிகளை குறைப்பது அல்லது விற்பனை செய்வது ஆகிய இரண்டு முக்கியமான முடிவுகளை அசைஞ்சர் எடுத்து இருக்கிறது.
More From GoodReturns

எத்தனை AI வந்தாலும் இந்த வேலையை மனுஷங்க தான் செய்ய முடியும்!! ஒரு மணி நேரத்துக்கு ரூ.900 சம்பளம்!!

பெங்களூரு IT ஊழியர்களுக்கு ஷாக்!80% பேர் வேலையை இழக்கப்போகிறார்களா? AI-யால் இன்னும் என்ன ஆகுமோ?

16 வருஷமா பார்த்த வேலை இப்போ இல்ல.. ஒரே ஈமெயிலில் மாறி போன வாழ்க்கை.. கண்ணீர் சிந்தும் ஐடி ஊழியர்!!

நல்லா வேலைசெஞ்சா மட்டும் போதாது! - ஆரக்கிள் பணிநீக்கங்களுக்கு மத்தியில் ஒரு எச்சரிக்கை!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!



Click it and Unblock the Notifications